உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நேஷனல் ஹெரால்டு வழக்கில் உண்மை வென்றது: சொல்கிறார் கார்கே

நேஷனல் ஹெரால்டு வழக்கில் உண்மை வென்றது: சொல்கிறார் கார்கே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் உண்மை வென்றுள்ளது. தீர்ப்பை நாங்கள் மனதார வரவேற்கிறோம் என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் பார்லி., குழு தலைவர் சோனியா, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோருக்கு எதிராக ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை, டில்லி சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இது குறித்து டில்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களிடம் கூறியதாவது: நேஷனல் ஹெரால்டு வழக்கின் நோக்கம் காந்தி குடும்பத்தை துன்புறுத்துவது ஆகும். அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு முற்றிலும் பொய்யானது. அவர்கள் (பாஜ) மக்களை இப்படித் தொந்தரவு செய்யக்கூடாது. இந்த செய்தித்தாள் 1938ம் ஆண்டு சுதந்திர போராட்ட வீரர்களால் தொடங்கப்பட்டது. இப்போது பாஜ அரசு பணமோசடி உள்ளிட்ட விஷயங்களுடன் இணைத்து அவதூறு பரப்ப முயற்சிக்கிறது. உண்மை என்னவென்றால், இந்த வழக்கில் எந்தப் பிரச்னையும் இல்லை.காங்கிரஸ் கட்சித் தலைவர்களைத் துன்புறுத்துவதை பாஜ ஒரு பிரச்னையாக மாற்ற முயற்சிக்கிறது. தற்போதைய அரசு அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைக்க அமலாக்கத்துறை பதிவு செய்து விசாரித்து வரும் வழக்குகளைப் பயன்படுத்துகிறது. தற்போது நேஷனல் ஹெரால்டு வழக்கில் தீர்ப்பு நீதிக்கு சாதகமாக வந்துள்ளது. உண்மை வென்றுள்ளது. இந்தத் தீர்ப்பை நாங்கள் மனதார வரவேற்கிறோம். இவ்வாறு கார்கே கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

sugumar s
டிச 17, 2025 17:21

congress has really done a fraudulent manipulation in national herald case. whole of india knows that


vee srikanth
டிச 17, 2025 16:12

உண்மையை விளக்கி சொல்லவில்லை - ஏன் ?


Madras Madra
டிச 17, 2025 16:01

எது உண்மை சோனியாவும் ராகுலும் ஜாமீனில் இருக்கிறார்கள் என்பதே உண்மை


V RAMASWAMY
டிச 17, 2025 15:34

வழக்கே தள்ளுபடியாகவில்லை, அதற்குள்ளே கொக்கரிப்பா? உங்களையே puppet ஆகத்தான் வைத்திருக்கிறார்கள், முடியாத வயதில் எதற்குத் துள்ளுகிறீர்கள்?


r ravichandran
டிச 17, 2025 15:24

குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, சரியான முறையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. என்னமோ சோனியா, ராகுல் காந்தி நிரபராதிகள் என்று விடுதலை செய்து விட்டது போல காங்கிரஸ் கட்சி உருட்டுகிறது.


M S RAGHUNATHAN
டிச 17, 2025 13:23

நல்லா உருட்டுங்க .


சம்பத்
டிச 17, 2025 13:12

நீதிபதியை என்ன சொல்லி மிரட்டினீங்க


ஆசாமி
டிச 17, 2025 12:56

புளுகறதே காங்கரஸ் வேலை. நீதிமன்றம் வழக்கை ரத்து செய்யவில்லை


Venugopal S
டிச 17, 2025 12:37

இப்போது எல்லாம் அமலாக்கத்துறை வழக்குகள் எதுவுமே நீதிமன்றத்தில் நிற்பது கூட இல்லை. பேசாமல் அந்த அமைப்பைக் கலைத்து விடலாம்!


vadivelu
டிச 17, 2025 12:58

உண்மையின் விலை அதிகம்.


Venugopal S
டிச 17, 2025 12:35

அவர்களுக்கு அதெல்லாம் கிடையாது என்று தெரியும்!