உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானுக்கு பதிலடி தருவதில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம்: மோடி உறுதி

பாகிஸ்தானுக்கு பதிலடி தருவதில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம்: மோடி உறுதி

புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ஆலோசனை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், முப்படை தளபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய மோடி, எதிரிகள் மீது எந்த இடத்தில், எந்த நேரத்தில் எந்த இ லக்குகள் மீது தாக்குதல் நடத்துவதில் முப்படைகள், தாங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றார்.கடந்த ஏப்.22 ல் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலாவுக்கு சென்ற பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. நேற்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nonqmwij&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று டில்லியில் உள்துறை அமைச்சகத்தில் பாதுகாப்பு தொடர்பான முக்கிய கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன்,எல்லைப் பாதுகாப்புப் படை, அசாம் ரைபிள்ஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல்கள்,மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து டில்லியில் பிரதமர் மோடி, தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவேதி, கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி, விமானப்படை தளபதி அமர் பிரீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பஹல்காம் தாக்குதல், அதற்கு பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பதிலடி தருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.ராணுவ தளபதிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி பயங்கரவாதத்திற்கு மரண அடி கொடுக்க வேண்டியது அவசியம். நமது முப்படைகளின் திறன் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு உள்ளது. எதிரிகள் மீது எந்த நேரத்தில் எந்தவகையில் எந்தஇலக்குகள் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதை படைகள் தாங்களே முடிவு செய்யலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Kannan
ஏப் 30, 2025 02:44

Only talking no action Modi Ji government


Gnana Subramani
ஏப் 29, 2025 21:38

இதுவரை இராணுவத்திற்கு எந்த சுதந்திரமும் இல்லாததால் தான் ஊடுருவிய தீவிரவாதிகளை தடுக்க வில்லையா


R. SUKUMAR CHEZHIAN
ஏப் 29, 2025 21:08

கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை அழிப்பதற்கு முழு சுதந்திரம் தருகிறீர்கள் ஆனால் கண்ணுக்கு தெரியாத உள்நாட்டு துரோகிகளையும் சமூக விரோதிகளையும் அழிப்பதற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும், நம் தேசதில் தங்கி உள்ள அன்னியர்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களையும் ஈவு இரக்கமின்றி ஒன்று நாடு கடத்த வேண்டும் அல்லது சுட்டு கொல்ல வேண்டும்.


Ramesh Sargam
ஏப் 29, 2025 20:46

அந்த முழு சுதந்திரம் எப்போது? மீண்டும் ஒரு தாக்குதல் காஷ்மீரில் நடந்தபிறகா? ஏன் தாமதம்? ஏன் இன்னும் இன்றைய காலகட்டத்திற்கு உதவாத அகிம்சா வழி?


Karthik
ஏப் 29, 2025 20:35

நாட்டில் ஒளிந்திருக்கும் பசுத்தோல் போர்த்திய குள்ளநரிகளுக்கும், எல்லையில் பதுங்கி இருக்கும் நரிகளுக்கும், எதிரியின் கூடாரத்தில் கொட்டமடிக்கும் கழுதைப்புலிகளுக்கும் தற்சமயம் எந்தவொரு இந்திய ஊடகங்கள் வாயிலாகவோ / தனிநபர் சமூக வலைதளங்கள் வாயிலாகவோ நமது ராணுவ நடவடிக்கைகளை உடனுக்குடன் வெளியிடாமல் இருப்பது அவசியமும் நம் ராணுவத்திற்கு பலமும் ஆகும். இந்திய ராணுவத்தின் பலம் நம் ஊடகங்களின் கையில்.


தாமரை மலர்கிறது
ஏப் 29, 2025 20:33

ஒரு அரசு எப்படி செயல்படவேண்டும் என்பதை காங்கிரஸ் இப்போதாவது கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்த பாடம் உபயோகம் படாது. கற்றுக்கொண்டே இருக்க வேண்டியது தான்.


Ramanujam Veraswamy
ஏப் 29, 2025 20:23

Right decision at the right movement. Hats off Mogiji and his Government.


S.L.Narasimman
ஏப் 29, 2025 19:54

இந்த நிலைமையில் பிரதமராக உத்திரபிரதேச முதல்வர் யோகி அவர்கள் ஈருந்தீருந்தால் பாக்கீசுதான் சின்னாபின்னமாயிருக்கும்.


Sambath
ஏப் 29, 2025 19:46

ஏற்கனவே பிஜேபி அடிச்ச அடியில் பிச்சை எடுத்து கொண்டிருக்கிறது பக்கிஸ்தான்


தமிழ்வேள்
ஏப் 29, 2025 19:38

மஹனீயர் ஸ்ரீ மோதி ஜி அவர்களே, அப்படியே அதே சுதந்திரத்தை உள்நாட்டு பிரிவினைவாதிகள் பயங்கரவாதிகள் குறிப்பாக திராவிட விஷ பிரிவினைவாதிகள் பாகிஸ்தான் வாடிகன் அடிமைகள் கேர்ள் கம்மி கும்பல் மலப்புரம் போலி அரபி கும்பலை ஒடுக்கி ஒன்றுமில்லாமல் செய்யவும் நிபந்தனை இன்றி வழங்குங்கள்.தாங்களே பிறகு இந்த தேசத்தின் நவீன சிற்பியும் பாரதத்தின் இரண்டாம் பிஸ்மார்க் ஆகவும் பிரத்யக்ஷ தேசபிதாமஹர் ஆகவும் திகழ்வீர்கள்..இறையருள் என்றும் தங்களுடன் இருக்கட்டும்..ஓம் தத்ஸத்.


முக்கிய வீடியோ