வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அது சத் இல்ல .... சாத் என்று உச்சரிக்கணும் [chhath] .....
வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான பண்டிகை சத் பண்டிகை
சத் பண்டிகை வாழ்த்துக்கள்
-நமது நிருபர்-பீஹார், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று (நவம்பர் 13) முதல் 4 நாள் சத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை சூரிய பகவானுக்கு நன்றி தெரிவித்து, குடும்பத்தின் நல்வாழ்வு மற்றும் செழிப்பிற்காக வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.விழாவின் முக்கிய நாட்களில் பக்தர்கள் ஆறுகள் மற்றும் குளங்கள் போன்ற நீர்நிலைகளில் புனித நீராடுவார்கள். மாலையில் மறையும் சூரியனுக்கும், மறுநாள் அதிகாலையில் உதிக்கும் சூரியனுக்கும் வழிபாடு நடத்துவார்கள். சத் பண்டிகைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''மக்கள் நம்பிக்கையிலும் சூரிய வழிபாட்டிலும் வேரூன்றிய, நான்கு நாட்கள் கொண்டாடப்படும் சத் பண்டிகையின் துவக்கத்தை முன்னிட்டு, எனது சக நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விரதம் இருக்கும் அனைவருக்கும் எனது மரியாதையை உரித்தாக்குகிறேன். அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும் என்பதே எனது விருப்பம்'' என குறிப்பிட்டுள்ளார்.விருப்பங்கள் நிறைவேறட்டும்!
இது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில், ''4 நாட்கள் கொண்டாடப்படும் சத் பண்டிகை இன்றுபுனித சடங்குடன் தொடங்குகிறது. சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த உன்னதமான பண்டிகை, நமது வளமான ஆன்மிக கலாசார பாரம்பரியத்தின் தனித்துவமான அடையாளமாகத் திகழ்கிறது. சத் பண்டிகையை முன்னிட்டு, என் நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விரதத்தை மேற்கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்களை உரித்தாக்குகிறேன். சூரிய பகவானின் ஆசிகள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, நல் ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும்; உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறட்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.
அது சத் இல்ல .... சாத் என்று உச்சரிக்கணும் [chhath] .....
வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான பண்டிகை சத் பண்டிகை
சத் பண்டிகை வாழ்த்துக்கள்