உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பையில் பிரதமர் மோடி -பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் சந்திப்பு

மும்பையில் பிரதமர் மோடி -பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற பின், முதல் முறையாக இந்தியாவுக்கு நேற்று (அக் 08) கேர் ஸ்டார்மர் வந்தார். அவர், மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து தன் அரசுமுறை பயணத்தை துவங்கியுள்ளார். அவருடன் பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள், பல்கலை., துணை வேந்தர்கள் என 125 பேர் அடங்கிய குழுவினரும் வந்துள்ளனர்.இந்நிலையில் இன்று (அக்., 09) மும்பையில் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாட்டு தலைவர்களும் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினர். இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
அக் 09, 2025 19:35

அந்நிய அடையாளங்கள் நீக்கியாச்சு... இனிமே ஃப்ரீ ட்ரேட்தான். இங்கிலாந்தில் இந்தியர்கள்தான் அதிகம்.


Rathna
அக் 09, 2025 19:15

பாகிஸ்தானிய, ஆப்கானிய, ஆப்பிரிக்கா காட்டான்களால், கலவரங்களால் பிரிட்டன் ஆடி போயி இருக்கிறது


Field Marshal
அக் 09, 2025 13:13

இங்கிலாந்திலிருந்து இந்தியாவில் முதலீடு செய்தால் ரெண்டு நாடுகளுக்கும் நல்லது அகதிகள் மற்றும் திருட்டுத்தனமாக குடியேறியவர்களால் லண்டன் மாறிவருகிறது


Ramesh Sargam
அக் 09, 2025 11:42

பிரிட்டன் பிரதமர் அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். சமீபகாலமாக அங்குள்ள இந்தியர்கள் தாக்கப்படுகிறார்கள், மஹாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. அது சரியல்ல. அதுபோன்ற நிகழ்வுகள் ஏட்படாமல், இந்திய மக்களை பாதுகாக்கவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்தியா பிரிட்டன் ஒற்றுமை ஓங்கவேண்டும்.


Field Marshal
அக் 09, 2025 13:15

பொது இடங்களில் பெரியார் சிலை வைக்காமல் Harvard university ரூமுக்குள்ள படம் தொறந்து வெச்ச காரணம் இப்போ புரியுது


முக்கிய வீடியோ