உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

புதுடில்லி: டில்லியில் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், 92, உடல்நலக் குறைவால், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார். காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், 2004 முதல் 2014 வரை மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r6hr1r7h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மன்மோகன் சிங் மறைவிற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி., ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட மன்மோகன் சிங் உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இறுதிச் சடங்குகள் நாளை (டிச.28) நடைபெறும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. இந்நிலையில், டில்லியில் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். மத்திய உள்துறை அமைச்சர்கள் அமித்ஷா, நட்டா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.மன் மோகன் சிங் உடலுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, காங்கிரஸ் எம்.பி.,க்கள் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

டில்லியில் மன்மோகன் சிங் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை நிறைவேற்றித் தந்தவர் மன்மோகன் சிங். அவரது மறைவு ஒட்டுமொத்த நாட்டிற்கே பேரிழப்பு. அவர் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தார். கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வந்தவர் மன்மோகன் சிங். 100 நாள் வேலைத் திட்டம் எனும் புரட்சிகரமான திட்டத்தை அறிமுகம் செய்தவர். தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sankaranarayanan
டிச 27, 2024 20:24

எந்த மாநில முதல்வரும் டெல்லி சென்று மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தாதபோது திராவிட முதல்வர்மட்டும் அங்கே சென்று அஞ்சலி செலுத்துவதில் மர்மம் என்ன? சில நாட்களாகவாவது சென்னையில் நடைபெற்றுவரும் பாலிய தொல்லை விவகாரம் காதில் படாமல் இருக்கட்டும் என்ற நினைப்பா? இது பூதாகரம் பெற்று ஆட்சிக்கு விரைவில் ஊறு விளைவிக்கப்போகிறது


Natchimuthu Chithiraisamy
டிச 27, 2024 17:30

தன் பொருளாதார கொள்கை திருப்பூர் தொழிலுக்கு மிக பெரிய முன்னேற்றத்தை கொடுத்தது திருப்பூர் தொழிலதிபர்கள் நன்றி மறக்க கூடாது. அவர் ஆன்ம சாந்தியடையுட்டும்.


Ramanujadasan
டிச 27, 2024 15:21

"உங்கள் ஆட்சி லக்ஷ்ணதால் தான் மக்கள் காங்கிரஸ் க்கு வோட்டே போட கூடாது இனிமேல் என்று முடிவு செய்து என்னை மூன்றாவது முறையும் பிரதமராக்கி விட்டார்கள் . அதற்க்கு எனது நன்றிகள்" என்று அஞ்சலி செலுத்தி இருக்கலாம்


sundarsvpr
டிச 27, 2024 14:19

சிறந்த நிர்வாகி கெட்டிக்காரர். ஆனால் உடல் அசைவு இல்லாமல் காங்கிரஸ் ஆட்சியில் நம் நாட்டின் காங்கிரஸ் கட்சியில் கடைசி பிரதமாராய் இருந்துள்ளார்..இதனால் இவர் பெருமை உள்ளவர். இருந்தபோதிலும் மரணம் வருத்தமளிக்கிறது.


Barakat Ali
டிச 27, 2024 13:57

தன்னை இழிவாகப் பேசியவர் என்று கருதாமல் சென்று அஞ்சலி செலுத்துவது ரொம்ப கிரேட் ..... பாராட்டவேண்டும் .....


SUBRAMANIAN P
டிச 27, 2024 13:40

என்ன மேதையாக இருந்து என்ன பயன். சேரக்கூடாத எடத்துல சேர்ந்து தன்னுடைய திறமையை எல்லாம் இந்திய முன்னேற்றத்துக்கு முழுசா காட்டமுடியாம ஒரு பொம்மை பிரதமராக இருந்து காங்கிரெஸ் கூட்டணிகளின் பெரும் பெரும் ஊழலுக்கு காரணமாக இருந்துவிட்டாரே.


அப்பாவிக்கு அப்பாவி
டிச 27, 2024 19:12

அம்பேத்கரை அவமான படுத்திய கான் க்ராஸ் ராவல் சட்டத்தை கிழித்து அவரை அவமான படுத்த, இட்டாலி அம்மையார் அவர் பங்குக்கு .. பார்லிமெண்ட்ல போய் அடுத்தவன் மேல் பழியு போடுவார்


அப்பாவி
டிச 27, 2024 12:49

இருக்கும்போது வாயாரத் திட்டியவர். இப்போது ஒப்பாரி. ஏழுநாள் துக்கம்.


Narayanan
டிச 27, 2024 11:55

அதற்கு காங்கிரஸ் தயாரில்லை. மன்மோகன் உயிருடன் இருக்கும் போதே அவரை மதிக்கவில்லை இவர்கள் .


N Sasikumar Yadhav
டிச 27, 2024 11:03

நேரு குடும்பத்தினரை அடக்கம் செய்திருக்கிற இடத்தில் காலஞ்சென்ற மண்மோகன்சிங் அவர்களை அடக்கம் செய்ய மோடிஜி தலைமையிலான மத்தியரசு அனுமதி வழங்கவேண்டும் .


முக்கிய வீடியோ