உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்க்கு பிரதமர் மோடி பாராட்டு

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்க்கு பிரதமர் மோடி பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்க்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மீண்டும் வருக! பூமி உங்களை மிஸ் செய்தது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் Crew9 விண்வெளி வீரர்கள் மீண்டும் ஒருமுறை விடாமுயற்சி என்ன என்பதைக் நிரூபித்து காட்டியுள்ளனர். தனது வாழ்க்கை முழுவதும் முன்மாதிரி பெண்மணியாக தன்னை வெளிப்படுத்தி உள்ளார் சுனிதா வில்லியம்ஸ். அவரின் மன உறுதி, தைரியம் மற்றும் எல்லையற்ற மனித மனப்பான்மையின் சோதனையாக இருந்தது. விண்வெளி ஆய்வு என்பதும் மனித ஆற்றலின் வரம்புகளை தாண்டியது ஆகும். பாதுகாப்பாக பூமி திரும்ப அயராது உழைத்த அனைவரையும் நினைத்து பெருமைப்படுகிறேன். அறியப்படாத பரந்த உலகில் அவர்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடு என்றென்றும் லட்சக்கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கும். விண்வெளி நிலையத்தில் இருந்து, பாதுகாப்பான வருகையை உறுதிசெய்ய அயராது உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Easwar Kamal
மார் 19, 2025 16:40

மோடிஜி இவளவு உருகுறாரே பார்த்த இந்த சுனிதா குஜராத்திய ? இவளவு நாளும் பஞ்சாபி என்று தன wilkiyil உள்ளது.


Sivagiri
மார் 19, 2025 15:49

சரீ , அந்த டெக்னோலஜி , இங்கே சீக்கிரம் கொண்டு வந்துவிடுவார் ? , ,


பல்லவி
மார் 19, 2025 14:06

God bless ...


Ramesh Sargam
மார் 19, 2025 12:41

சாதனை படைத்தவர்கள் பத்திரமாக பூமி திரும்பியது மிகவும் மகிழ்ச்சி. கடவுளின் கருணைக்கு நன்றி.


சமீபத்திய செய்தி