உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிராவில் ரூ.50 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

மஹாராஷ்டிராவில் ரூ.50 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

மும்பை: மஹாராஷ்டிராவின் வாஷிம், மும்பை மற்றும் தானேயில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு இன்று (அக்.,05) பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.வாஷிமில், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறை தொடர்பான ரூ.23,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று(அக்.,05) மதியம் 1.30 மணியளவில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்க உள்ள திட்டங்கள் விபரம் பின்வருமாறு: * 12,200 கோடி ரூபாய் செலவில், கட்டப்பட உள்ள தானே மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். மொத்த நீளம் 29 கிமீ ஆகும்.* ரூ. 3,310 கோடி செலவில் சேதா நகர் முதல் ஆனந்த் நகர் வரையிலான கிழக்கு நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு அடிக்கல் நாட்டுவார். ரூ.700 கோடி செலவில் கட்டப்படவுள்ள தானே மாநகராட்சியின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.* பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் 18வது தவணையை மோடி விடுவிக்கிறார். 9.4 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியுதவி வழங்கப்படும்.* மகா சம்மான் நிதி யோஜனாவின் 5வது தவணையை பிரதமர் மோடி விடுவிக்கிறார். இதனால், பயனாளிகளுக்கு ரூ.2,000 கோடி வழங்கப்படும்.* விவசாய உள்கட்டமைப்பு நிதியின் கீழ் சுமார் 1,920 கோடி ரூபாய் மதிப்பிலான 7,500 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். * 1,300 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் 9,200 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். * பஞ்சாரா சமூகத்தின் பாரம்பரியத்தின் அடையாளமான பஞ்சாரா பாரம்பரிய அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.* ரூ.2,550 கோடி செலவில் நவி மும்பை விமான நிலையத்தின் முதல் கட்ட திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதனால், சாலைகள், பாலங்கள், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் உள்ளிட்டவை கட்டப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

கோபாலகிருஷ்ணன்
அக் 05, 2024 15:01

விமர்ச்சனத்தை ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்ளும் பக்குவத்தை தினமலர் ஏற்படுத்தி கொள்ளவேண்டும்....


abdulrahim
அக் 05, 2024 14:47

சும்மா அடிச்சு விடு


abdulrahim
அக் 05, 2024 14:47

தேர்தல் வந்தா ஒரு பொய்யான திட்டத்தை தூக்கிக்கொண்டு பல்லாயிரம் கோடி என்ற பிரம்மாண்ட வடையோடு வந்திடும்


Priyan Vadanad
அக் 05, 2024 13:43

00


Indian
அக் 05, 2024 11:56

ரொம்ப சந்தோசம் .


hari
அக் 05, 2024 12:35

அப்போ 200 ரூபா வேணாமா கைலாசப்புறம்?


Indian
அக் 05, 2024 13:39

00..


RAMAKRISHNAN NATESAN
அக் 05, 2024 11:26

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாவதற்குள் திட்டமோ திட்டம் ...... மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திடுவாங்க ......


பாமரன்
அக் 05, 2024 12:07

கரெக்டா சொன்னீங்க... நடுநிலையான தேர்தல் ஆணையம் நம்ம ஜி ப்ரோக்ராம் முடியறதுக்காக வெயிட் பண்றாங்க... முடிஞ்சதும் உடனே தேர்தல் திருவிழா நடைபெறும்


RAMAKRISHNAN NATESAN
அக் 05, 2024 14:19

நான் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இதே கருத்தைப் போட்டிருந்தா ..... எப்படியோ மற்றவர்களும் வாய்ப்பு ..... நன்றி .....


Nathansamwi
அக் 05, 2024 10:43

Election endral matum varuvar?


venugopal s
அக் 05, 2024 10:39

இவர் அடிக்கல் நாட்டுகிறார் என்றாலே நமது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் தான் ஞாபகம் வருகிறது!


பாமரன்
அக் 05, 2024 10:35

சீக்கிரம் சீக்கிரம் ஆகட்டும் தல... தலைமை தேர்தல் கமிஷனர் உங்க டூர் முடிஞ்சதும் ஒடனே எலெக்சன் அனவுன்ஸ் பண்ண காத்திருக்காப்ல... நம்ம எய்ம்ஸ் கூட இப்படி கூட்டத்தோட கோயிந்தா கோயிந்தான்னு துவக்கி வச்சோம்.. அஞ்சு வருஷமாச்சு... நட்ட ஒரு கல்லை காப்பாத்த முடியாம டீம்கா அதை தூக்கிட்டு போயி அரசியல் பண்ணி கெலிச்சிட்டானுவ... அங்கயும் இந்த மாதிரி ஆகாம பார்த்துக்கோங்க... அங்கநம்மாளுக வெறும் மொரட்டு பீஸ்ங்க தான் இருக்காய்ங்க.... ஞாபகம் இருக்கா...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை