உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 7 ஆண்டுக்கு பிறகு பயணம்; ஆகஸ்ட் 31ல் சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி

7 ஆண்டுக்கு பிறகு பயணம்; ஆகஸ்ட் 31ல் சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஏழாண்டுக்கு பிறகு முதல் முறையாக சீனாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். ஆகஸ்ட் 31ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச்சு நடத்த உள்ளார்.சீனாவின் தியான்ஜினில் ஆகஸ்ட் 31ம் தேதி நடக்க உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதனால், அவர் 7 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் இரு தரப்பு உறவுகள் தொடர்பான சந்திப்பை நடத்துவார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=houdfwur&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சந்திப்பில், இந்தியா-சீனா உறவுகளை வலுப்படுத்த ஆலோசனை நடக்கும் என தெரிகிறது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதிப்பு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே சீர்கெட்டுள்ளது. இதனால் இந்த சந்திப்பு உலகம் முழுவதும் இந்தியா - சீனா இடையிலான சந்திப்பு உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது .ஆகஸ்ட் 31ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை நடைபெறும் இரண்டு நாள் உச்சி மாநாட்டில், ரஷ்ய அதிபர் புடின் உட்பட 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் பங்கேற்கின்றனர். மத்திய ஆசியா, மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்2020ம் ஆண்டு எல்லை மோதல்களைத் தொடர்ந்து பதட்டங்களைத் தணிக்க, இந்தியாவும், சீனாவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மோடியின் முதல் சீனப் பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

K.n. Dhasarathan
ஆக 28, 2025 21:12

சீனா ஒரு நம்பிக்கை கொள்ள தக்க நாடு அல்ல, பிரதமர் பலமுறை பேசினார், என்ன பயன், ? ஊடுருவல் செய்கிறார்கள், எல்லை தாண்டி கட்டுமானங்கள் செய்கிறார்கள், சண்டை போடுகிறார்கள், இவரிடம் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது ? சீனா அதிபரே கேட்டாலும் பிரதமர் பேச கூடாது.


M. PALANIAPPAN, KERALA
ஆக 28, 2025 16:46

அமெரிக்கா கொஞ்சம் அகன்று இருப்பதால் நமக்கு தற்பொழுது மற்ற நாடுகளின் தேவை மிகவும் அவசியம் ஆனால் சீனாவை எவ்வளவு தூரம் நம்பலாம் என்பதை ஆழ்ந்து சிந்தித்து ஒரு நல்ல முடிவை மோடிஜி நிச்சயம் எடுப்பார். வாழ்க பாரதம், வந்தேமாதரம், ஜெய்ஹிந்த்


Vijay D Ratnam
ஆக 28, 2025 15:57

இந்தியாவுக்கு சீன நட்பு தேவை. அதைவிட அதிகமாக சீனாவுக்கு இந்திய நட்பு மிகவும் அவசியம். சரக்கு கப்பல் போக்குவரத்தில் 80 சதவிகிதத்தை கொண்டுள்ள இந்திய பெருங்கடலில் இந்தியாவின் ஆதிக்கம் பெருமளவில் உள்ளது. தொலைநோக்கு பார்வையோடு பார்க்கும்போது சீனாவுக்கு இந்திய நட்பு மிக முக்கியம். அமேரிக்கா மீது ரஷ்யா கடும் கோபத்தில் உள்ளது, அதுமட்டுமின்றி ஐரோப்பிய யூனியன், ஈரான் போன்ற இஸ்லாமிய நாடுகள், இப்போது சீனா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, உட்பட பெரும்பாலான ஆப்ரிக்க நாடுகள், பிரேசில், மெக்சிகோ போன்ற தென் அமெரிக்க நாடுகள், கனடா, ஜப்பான் என்று உலகம் முழுக்க அமெரிக்க எதிர்ப்பு கிளம்பி வலுத்து வருகிறது. அமெரிக்க பெரியண்ணன் மனப்பான்மைக்கு ஆப்பு அடிக்கவும், டாலர் அரசியலை முடிவுக்கு கொண்டு வரவும் அறிய சந்தர்ப்பம்.


Thangavel
ஆக 28, 2025 16:15

சீனா வை நம்ப முடியாது , டிரம்ப் ஒரு கிறுக்கு ,4 வருடம் அவர பொறுத்து போவது சிறந்தது. சீனா நடப்பு எப்போதும் நமக்கு நன்மை தராது


Gnana Subramani
ஆக 28, 2025 14:15

சீனா, பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவதை கடுமையாக கண்டிக்கப் போகிறார்


vivek
ஆக 28, 2025 15:32

அவர் எதுக்கு கண்டிக்கணும்....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை