உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நேரு, இந்திராவை விமர்சிப்பதை பிரதமர் நிறுத்த வேண்டும்: காங்., பதில்

நேரு, இந்திராவை விமர்சிப்பதை பிரதமர் நிறுத்த வேண்டும்: காங்., பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திராவை விமர்சிப்பதை நிறுத்தி விட்டு, தனது ஆட்சியில் என்ன செய்தோம் என்பதைப் பற்றி பிரதமர் மோடி பேச வேண்டும்,'' என காங்கிரஸ் கூறியுள்ளது.நாட்டின் அரசியலமைப்பு ஏற்கப்பட்டதன், 75வது ஆண்டையொட்டி, லோக்சபாவில் இரண்டு நாள் விவாதம் நேற்று முன்தினம் மற்றும் நேற்று நடந்தன. ராஜ்யசபாவில், நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்க உள்ளன. லோக்சபாவில் பல கட்சித் தலைவர்கள் பேசியதற்கு பதிலளித்து, பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரண்டு மணி நேரம் பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: அரசியலமைப்பு பதவிகள் மதிக்கப்படுவதில்லை. தினமும் அரசியலமைப்பு மீறப்படுகிறது. நேரு, இந்திரா பற்றி பேசுவதை நிறுத்தி விட்டு, தனது ஆட்சியில் என்ன சாதனை செய்தோம் என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும். எத்தனை முறை, அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அவர் ஏற்பாடு செய்தார். எத்தனை முறை அவர் எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசி உள்ளார் என்பது பற்றிக் கூற வேண்டும். மத்திய அரசின் தோல்வி மற்றும் சவால்களை மறைக்க முன்னாள் பிரதமர் நேருவை மோடி விமர்சனம் செய்கிறார். ராஜ்யசபா நாளை இயங்க ஆளும்கட்சியினர் அனுமதிப்பார்கள் என நம்புகிறோம். அரசுக்கு விருப்பம் இல்லாத காரணத்தினால் ராஜ்யசபா செயல்படுவதில்லை. அங்கு எதிர்க்கட்சி தலைவரை பேச ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் அனுமதிப்பது கிடையாது. முதல்முறையாக, எதிர்க்கட்சித் தலைவரை பார்த்து, எந்த விதிகளின் அடிப்படையில் நீங்கள் பேசுகிறீர்கள் என அவைத்தலைவர் கேட்கிறார். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

subramanian
டிச 15, 2024 21:51

அம்பேத்கர் அனுமதி இல்லாமல் அரசியல் அமைப்பை திருத்தினார் நேரு. தனக்கு ஏற்பட்ட அவசர நிலையை நாட்டின் அவசர நிலை என்று மாற்றினார் இந்திரா... எதை சொல்ல கூடாது? ஏன் சொல்ல கூடாது?


Kavi
டிச 15, 2024 17:39

உண்மையை சொன்னால் காங்கிரெஸ் திகு திகு என்று பற்றி எரிகிறது


Bahurudeen Ali Ahamed
டிச 15, 2024 17:25

புரியாமல் பேசாதீர்கள், நேரு, இந்திராகாந்தியை பற்றி பேசுவதை விடச்சொன்னால் அவர் எப்படி அரசியல் செய்வார், அரசியலமைப்பு சட்டத்தை தன் குடும்பத்திற்காக திருத்தினார்கள் என்று சொன்னாரே தவிர, எந்த சட்டத்தை நிறுத்தினார்கள் அதன்மூலம் நேரு குடும்பம் என்ன ஆதாயம் அடைந்தார்கள் என்று சொன்னாரா? நேரு குடும்பம் அதைச்செய்தது இதைச்செய்தது என்று கூறுவார் கடைசிவரை அதுஎன்னவென்று கூறமாட்டார்


subramanian
டிச 15, 2024 21:43

மனம் திருந்தி இங்கே இருங்க. இல்லையேல் ஓடிவிடு


ரகுநாதன்
டிச 15, 2024 22:20

மறுமுறை கேட்டீர்களேயானால், மோடி அவர்கள், அவருடைய அரசு என்ன செய்தது என்று விரிவாகவே பேசியிருப்பது விளங்கும். காங்கிரஸ் எதிர்வினைகளை சந்தித்தது. அவ்வளவே.