உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுதேசி 4ஜி சேவை: பிஎஸ்என்எல் சார்பில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

சுதேசி 4ஜி சேவை: பிஎஸ்என்எல் சார்பில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொலைத்தொடர்பு கருவிகளைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட 4ஜி பிஎஸ்என்எல் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.இந்த நிறுவனத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் 97,500 மொபைல் 4ஜி டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை மொத்தம் 37 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தொலைத் தொடர்புக்கு தேவையான கருவிகளை உள்நாட்டிலேயே உருவாக்கும் டென்மார்க், ஸ்வீடன் தென் கொரியா, சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ecagu73w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 இந்த தொலைத் தொடர்பு நெட்வொர்க் ஆனது, 5ஜி மேம்பாட்டுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பகுதிகளில் தொலைத் தொடர்பு சேவையை உருவாக்க வேண்டும், டிஜிட்டல் இந்தியாவில் தொலைதூர கிராமங்களையும் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், தொலைத்தொடர்பு வசதி இல்லாத 26 ஆயிரத்து 700 கிராமங்களுக்கு புதிதாக தொலைத்தொடர்பு வசதி கிடைக்கும். 20 லட்சம் புதிய சந்தாதாரர்களுக்கு சேவை அளிக்க முடியும். புதிய தொலைத்தொடர்பு கோபுரங்கள், சோலார் தொழில்நுட்ப மூலம் மின்சக்தி பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Nathansamwi
செப் 27, 2025 21:43

ஜி ஆட்சிக்கு வந்து 12 வருடம் அப்புறம் பிஎஸ்என்எல் 4ஜி கொண்டு வர்றீங்களே ஜி


திகழ்ஓவியன்
செப் 27, 2025 19:10

உலகமே 6 G 7 G என்று பறந்து கொண்டு இருக்கும்போது இன்னமும் BSNL க்கு 5 G இல்லை இது தான் சுதேசி சேவை


l.ramachandran
செப் 27, 2025 19:53

இன்னும் எங்க இடத்திலே BSNL 4g signal கிடைக்கலே. DATA recharge பண்ணியும் பிரயோஜனம் இல்லை.


KR india
செப் 27, 2025 18:59

இப்போதாவது, BSNL 4G கொண்டு வந்தீர்களே மட்டற்ற மகிழ்ச்சி BSNL நிறுவனத்துக்கும், அயராது பணி புரிந்த Tata Consultancy Service ஊழியர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் இனிமேல், BSNL நிறுவனம் தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட்டு, அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை அதே சமயத்தில், கடந்த இரு வாரங்கள் முன்பே, Rs.1999 with 600GB bulk Data ப்ரீபெய்ட் திட்டத்தின் பலன்களை நீக்கி விட்டு, தினமும் 1.5GB மட்டுமே என்று அந்த திட்டத்தின் பலன்களை குறைத்தது மட்டுமல்லாமல், 365 Days Validity என்று இருந்ததை 330 Days Validity என குறைத்தது மட்டுமல்லாது, Rs.1515 Annual prepaid pack ஐயும், நீக்கி விட்டனர். தற்போதுள்ள திட்டங்களில், Annual Bulk Data Only pack with 600 GB 4G Data without Daily Restriction என எதுவும் இல்லை அதை கொண்டுவந்தால் நன்று


spr
செப் 27, 2025 18:15

பி எஸ் என் எல் அமைப்பும் கூட ஏதோ முன்னேற்றம் செய்கிறது என்பதற்காகப் பாராட்டலாம் ஆனால் பன்னாட்டு முதலீடுகளை ஈர்க்க முயற்சி செய்யும் போதும், அனைத்துச் செயல்பாடுகளும் இணைய வழியிலேயே என்ற நிலை வந்தாற்பின் போட்டியிலிருக்கும் தனியார் நிறுவனங்கள் 4ஜி தாண்டி 5ஜி சேவைக்கு முன்னேறிக் கொண்டிருக்கையில் மத்திய அரசின் பெரும் தொகையை விழுங்கி கொண்டிருக்கும் பி எஸ் என் எல் செயல்பாடு ஏற்புடையதல்ல. உற்பத்தித்திறன் குறித்த அக்கறையே இல்லாத, ஒரு அமைப்பு.மருத்துவம், கல்வி, காவற்துறை, ராணுவம்,குடிநீர் போன்ற அரசின் சில சேவைகள் மட்டுமே ஆதாயம் கருதிச் செயல்படக் கூடாது மற்றவை அனைத்தும் லாபம் ஈட்டவில்லையென்றால் நமக்கு இழப்பே.லாபம் பண மதிப்பால் கணக்கிடப் படத் தேவையில்லை. இன்று பெரும்பாலும் பலரும் 5ஜி சேவைக்குப் பயன்படத்தக்க மிக மலிவான விலையில் கைபேசி வைத்திருக்கிறார்கள். எனவே இனியாவது பி எஸ் என் எல் அமைப்பும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் இல்லையேல் அதனையும் மூடிவிடலாம் அல்லது தனியார் மயமாக்குவதில் தவறில்லை.


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 27, 2025 17:20

இந்த திட்டம் வெற்றி பெற்றால் இது இந்திய தொலைத்தொடர்பு வரலாற்றில் ஒரு மைல் கல். பெரும் புரட்சியின் ஆரம்பம். இதன் வெற்றியை உலகம் கொண்டாடும் நாள் வெகு தொலைவில் இல்லை. மிகவும் பின்தங்கிய ஆப்பிரிக்க மற்றும் உலகின் பல நாடுகளிலும் வரவேற்கப்படும். நம் இளம் தலைமுறை தொழில்நுட்ப வல்லுநர்களின் நல்முயற்சி வெற்றிபெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.


ஆரூர் ரங்
செப் 27, 2025 16:41

பத்தில் ஒருவருக்குத்தான் 5 ஜி போன்ற வேகமான இணையம் தேவைப்படும். கடும் நஷ்டத்தில் இயங்கி வந்த பிஎஸ்என்எல் ஐ உயிர்ப்பிக்க மத்திய அரசு 25000 கோடி முதலீடு அளித்துள்ளது. எல்லைப் பகுதிகளில் மற்றும் பிற்பட்ட மலைப் பகுதிகளில் செல்பேசி இணைப்பு தனியார் நிறுவனங்களுக்கு லாபகரமாக இருக்காது. அங்கெல்லாம் லாப நோக்கமின்றி சேவையை அளிப்பதே பிஎஸ்என்எல் க்கு முக்கியம். 5 ஜி அல்ல. 80 சதவீத மக்களிடம் 5ஜி கைபேசி வாங்கும் வசதி கூட கிடையாது. உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட சாதனங்களை பிஎஸ்என்எல் கட்டமைப்புக்கு பயன்படுத்துவது சிறப்பு .


Gokul Krishnan
செப் 27, 2025 16:27

இனி வயசுக்கு வந்த என்ன வராவிட்டால் என்ன ஒரு வேலை அம்பானிஜி உத்தரவு கொடுத்து விட்டார் போல


vivek
செப் 27, 2025 16:42

உன்னை போல டாஸ்மாக் எடுபிடிகளுக்கு என்ன கவலை..கோகுலா


Gokul Krishnan
செப் 27, 2025 18:17

ஆமாம் விவேக் நீ தான் எனக்கு சரக்கு ஊற்றி கொடுத்த பார். என் கருத்தில் எங்கேயாவது தி மு க ரொம்ப நல்ல கட்சி அதற்கு வோட்டுபோடுங்க என்று கூறினேனா பிஜேபி அரசு மீது குற்றம் வைத்தால் சங்கி கூடத்திற்கு தெரிந்த ஒரே ஒரு வார்த்தை டாஸ்மாக்


vivek
செப் 27, 2025 18:55

அட அறிவிலியே...உன் சுயபுத்தி தெரிகிறதே


Gokul Krishnan
செப் 27, 2025 19:39

கேட்ட கேள்விக்கு பதில் வராது அது தான் திருட்டு சங்கி கூட்டம்


KOVAIKARAN
செப் 27, 2025 16:25

மிகவும் நல்லது. ஆத்மநிர்பர் மூலம் மேலும் மேலும் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து நாட்டின் வளம் பெருகட்டும். மக்களின் வாழ்வும் மேன்படட்டும். வாழ்க பாரதம். வளர்க அகண்ட பாரதம்.


புதிய வீடியோ