உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமரின் வெளிநாட்டு பயணம் முக்கியமானது: பாஜ

பிரதமரின் வெளிநாட்டு பயணம் முக்கியமானது: பாஜ

புதுடில்லி: தற்போது பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என பாஜ கூறியுள்ளது.பிரதமர் மோடி அரசு முறை பயணமாக 5 நாடுகள் சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளார். இதில் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்த பயணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்தியர்களை வெளிநாடு செல்ல வேண்டாம் எனக்கூறிவிட்டு பிரதமர் சென்றது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளன.இது தொடர்பாக பாஜ செய்தித் தொடர்பாளர் சுதான்ஷூ திரிவேதி கூறியதாவது: தற்போதைய உலகலாளவிய சூழ்நிலையில் , தொலைநோக்கு பார்வையுடன் ஒவ்வொருஇந்தியரின் நலன்களை பாதுகாக்க வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டு உள்ளார். பல ஆண்டுகளாக உலகின் மிகவும் பிரபலமான தலைவராக உள்ளார். அவுரது பதவிக்காலத்தில் சர்வதேச அளவில் 32 உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.பிரதமர் மோடி தலைமையில் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளும் வகையில் உலகளவில் இந்தியா முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இந்த கவுரவம் பிரதமர் மோடிக்கு மட்டும் கிடைத்த கவுரவம் அல்ல. இவ்வாறு அந்த அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை