உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிஎன்எஸ் சட்டத்தால் 3 ஆண்டுகளுக்குள் நீதி கிடைக்கும்: அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்

பிஎன்எஸ் சட்டத்தால் 3 ஆண்டுகளுக்குள் நீதி கிடைக்கும்: அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்

போபால்: பிஎன்எஸ் எனப்படும் புதிய குற்றவியல் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்ட உடன், முதல் தகவல் அறிக்கை முதல் உச்ச நீதிமன்றம் வரையிலான வழக்குகள் 3 ஆண்டுகளில் முடித்து வைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார். போபாலில் புதிய குற்றவியல் சட்டம் குறித்த கண்காட்சியை அவர் திறந்து வைத்தார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மாநாட்டில் பேசியதாவது; போபாலில் இன்றைய தினம் இரு நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. பிஎன்எஸ் பற்றிய கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. கால்நடை வளர்ப்போர் மாநாடு நடைபெற்றது. இங்கு பெரியளவிலான கால்நடைகள் வளர்ப்போர் வந்திருப்பது மத்திய பிரதேசத்தில் வர இருக்கும் பால் புரட்சிக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். புதிய குற்றவியல் சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளதால், 3 ஆண்டுகளுக்குள் நீதி வழங்கப்படும். ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட சட்டங்கள் அவர்களின் ஆட்சியை பாதுகாப்பதற்காகவே இருந்தன. புதிய குற்றவியல் சட்டங்கள் இந்திய மக்களின் கவுரவம் மற்றும் சொத்து. இந்த சட்டங்களின் அடிப்படை கொள்கை நீதியே தவிர, தண்டனை அல்ல. அவை குற்றம் செய்வதில் இருந்து தடுக்க மட்டுமே தண்டனை வழங்கப்படுகிறது. இந்த சட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்ட பிறகு நம் குற்றவியல் நீதி அமைப்பு மிக நவீன அமைப்புகளில் ஒன்றாக மாறிவிடும்.இவ்வாறு அமைச்சர் அமித் ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Santhakumar Srinivasalu
அக் 03, 2026 19:31

இது ஒரு நல்ல சட்ட முடிவு !


GMM
அக் 03, 2026 19:30

முதல் தகவல் அறிக்கை முதல் உச்ச நீதிமன்றம் வரை தீர்வுக்கு 3 ஆண்டுகள். சரி மாநில போலீஸ் முதல் அறிக்கை தயாரிக்க கால எல்லை இல்லை. அதற்கு ஒரு சிவில் வழக்கு போட்டால், குற்றவியல் சட்டம் கூனி குறுகி விடும். அனைத்து அரசு நிர்வாக பணி, சிவில் நீதிமன்ற பணி மீது கால அவகாசம் வேண்டாமா? முன் பின் சட்ட நடைமுறைக்கு கால நிர்ணயம் செய்யாமல் பி என் எஸ் சட்டம் விசாரணையில் சிக்கலை சந்திக்கும். காங்கிரஸ் வகுத்த ஊழல், சாதி மத பிரச்சனை சட்டம் மறு பரிசீலனை காலத்திற்கு ஏற்றார் போல் செய்து மாற்ற வேண்டும்.


ஊர்குருவி
அக் 03, 2026 17:27

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றமே மதிப்பதில்லை .உயர்நீதிமன்றங்களும் மதிப்பதில்லை அதற்க்கு உதாரணம் தான் தற்போது உச்சநீதிமன்றத்தின் உள்ள ஹிந்து கோவில்கள் பற்றிய வழக்கு . 1954 ஆம் ஆண்டு சிறுர் மடத்தின் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை இதுவரையில் அமல்படுத்தவில்லை .எப்படி சட்டம் இயற்றுவது மட்டுமே மக்களுக்கு விரைவாக நீதிகிடைக்க செய்யும் .?மத்திய அரசுக்கு இதில் எல்லாம் எந்த விதமான பொறுப்பும் இல்லையா ?


Aarbinms
அக் 03, 2026 17:06

ஜெயாவை வைத்து சசிகலா அடித்த கொள்ளைகள் வெளிச்சத்துக்கு வருமா? வித்தவுட் ரயில் குடும்பம் ஊழலால் உலக பெரும் பணக்காரர் ஆனது எப்படி? எல்லா வழக்குகளிலும் தப்பிப்பது எப்படி? அமிட்ஷா பதிலளிப்பாரா.


VIJAYALAKSHMI Vijayakumar
அக் 03, 2026 19:19

காசு இருப்பவருக்கு அரசியல்வாதிக்களுக்கு தனி சட்டம் .


ஊர்குருவி
அக் 03, 2026 17:03

சட்டங்களை இயற்றுவது மட்டுமே மக்களுக்கு நீதி விரைந்து கிடைக்க உதவாது என்பது தான் உண்மை வரலாறு .நாம் சுதந்திரம் அடைந்து உலகமெல்லாம்பாராட்டப்பட்ட ஒரு உன்னதமான பேரறிஞ்சராகிய அம்பேத்கார் அவர்களால் மிகவும் எளிமையான ஆங்கிலத்தில் சுலபமாக புரிந்துகொள்ளக்கூடி வடிவமைக்கப்பட்ட சட்டத்தையே இன்றுவரை நீதிமன்றங்களினாலேயே சரியாக புரிந்தறியப்படவில்லை என்பதுதான் உண்மை .அதனால்தான் தேவை இல்லாத வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கின்றன .என்பதற்கு தற்போது நடந்துவரும் ஹிந்து கோவில்கலை பற்றிய சர்ச்சை வழக்குகளே சாட்சி .சட்டத்தில் தெளிவாக அரசுகள் எல்லாம் மதசார்பாற்றவை யாக சட்டம் சொல்லுகிறது .பிரிவு 26 இல் அரசுகள் மத விவகாரங்களில் தலையிடுவதை தடை செயகிறது .மக்களின் வரிப்பணத்தில் மதவிவகாரங்களுக்கு செலவிடுவதை பிரிவு 27 தடை செயகின்றது .அரசுகளுக்கு மத விவக்கராங்க்ளில் சிலவற்றிக்காக சட்டம் இயற்ற மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கின்றது .அப்படி இருக்கும்போது கடந்த 60 வருடங்களாக உச்சநீதிமன்றம் வரையிலும் தீர்க்கப்படாத விவகாரமாக எப்படி இன்னும் ஹிந்து கோவில்க்ளை பற்றிய விவகாரங்களில் வழக்குகள் இருக்கின்றன .அதற்க்கு புதியதாக ஆ ஹம்மமா இல்லையா என்ற விவாதத்திற்கு உச்சநீதிமன்றத்திற்ற்கு எந்த சட்டத்திலிருந்து அனுமதி அளிக்கப்பட்டிருக்கின்றது ?எதற்கு போகாத ஊருக்கு உச்சநீதிமன்றம் வழிதேடவேண்டும் ? இதையேயெல்லாம் சீரமைக்க சட்டங்கள் இயற்ற்றினால் மட்டும் போதாது .அந்த சட்டங்களையெல்லாம் அதன் நோக்கங்களின் படி நிறைவேற்றும் மனநிலையில் நீதிமன்றங்கள் செயல்படவேண்டும் .அதற்க்கான திறமைகளை வளர்க்கும் நடைமுறையும் ,பயிற்சியும் தேவை .இல்லையென்றால் சட்டங்களின் பழங்கள் எல்லாம்மக்களுக்கு கானல் நீரே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை