உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சக போலீஸ்காரரை சுட்டுக் கொன்ற போலீஸ்; பீஹாரில் அதிர்ச்சி

சக போலீஸ்காரரை சுட்டுக் கொன்ற போலீஸ்; பீஹாரில் அதிர்ச்சி

பாட்னா: பீஹாரின் மேற்கு சம்பாரன் பகுதியில் நேற்றிரவு போலீஸ் சக போலீசை தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பீஹாரின் மேற்கு சம்பாரன் பகுதியில் போலீஸ் கான்ஸ்டபிள் சர்வ்ஜீத் குமார் சக போலீசை தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். உயிரிழந்த கான்ஸ்டபிள் சோனு குமார் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் சம்பவ இடத்தில் இருந்து தோட்டாக்களை மீட்டுள்ளனர். இது குறித்து போலீஸ் அதிகாரி விவேக் தீப் கூறியதாவது: இருவரும் ஒன்றாக வேலை செய்து வந்தனர். கான்ஸ்டபிள் சர்வ்ஜீத் குமார் சில குடும்ப பிரச்னைகள் காரணமாக மன உளைச்சலில் இருந்துள்ளார். கான்ஸ்டபிள் சோனு குமாருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தில் சோனு குமாரை சர்வ்ஜீத் குமார் சுட்டுக்கொன்றுள்ளார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sampath Kumar
ஏப் 20, 2025 17:24

மூளை சலவை செய்ய பட்ட ரோபோ தன பீகாரிகள் பிஜேபி எப்படி ஜெயிச்சு வந்தது என்று இப்போ குறிக்கின்றது


முக்கிய வீடியோ