உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போர் விமானிகளின் கைகளை கட்டிப்போட்டு விட்டீர்கள்: லோக்சபாவில் ராகுல் குற்றச்சாட்டு

போர் விமானிகளின் கைகளை கட்டிப்போட்டு விட்டீர்கள்: லோக்சபாவில் ராகுல் குற்றச்சாட்டு

புதுடில்லி: ''ஆபரேஷன் சிந்துாரில் ஈடுபடுத்தப்பட்ட போர் விமானிகளின் கைகளை கட்டிப் போட்டு விட்டீர்கள். முழு சுதந்திரம் கொடுக்கவில்லை,'' என லோக்சபாவில் ராகுல் குற்றம் சாட்டினார்.

அரசுக்கு ஆதரவு

' ஆபரேஷன் சிந்தூர்' மீதான நடவடிக்கையில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியதாவது: பஹல்காமில் கொடூரமான தாக்குதலை ஒருங்கிணைத்து நடத்தியது பாகிஸ்தான். இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். இந்த அவையின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தோம். ஆபரேஷன் சிந்தூர் துவக்கிய உடனும், அதற்கு முன்னரும், எதிர்க்கட்சிகள் அனைத்தும், ஆயுதப்படைகளுக்கும், அரசுக்கும் உறுதியாக ஆதரவு தெரிவித்தனhttps://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2r94te8w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எந்த ஒரு ராணுவ வீரருடன் நான் கை குலுக்கும்போது எல்லாம், அந்த வீரரை நாட்டுக்காக போராட தயாராக இருக்கும் புலியாக இருக்கிறேன். ஆனால், புலிக்கு முழு சுதந்திரம் தேவை. அவற்றை கட்டிப்போடக்கூடாது. இரண்டு முக்கிய வார்த்தைகள் உள்ளன. அரசியல் உறுதி மற்றும் நடவடிக்கையில் சுதந்திரம்.

கண்டனம்

இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், முதலில் 100 சதவீதம் அரசியல் உறுதி இருக்க வேண்டும்.பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவரின் உறவினரை உ.பி.,யில் சந்தித்தேன். மனைவி முன்பு ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார். இது அனைத்து இந்தியர்களுக்கும் வேதனை அளித்தது. நடந்தது அனைத்தும் தவறு. நாம் அனைவரும் கண்டனம் தெரிவித்தோம்.நான் ராஜ்நாத் சிங்கின் பேச்சை உன்னிப்பாக கவனித்தேன். அவர், ஆபரேஷன் சிந்தூர் அதிகாலை1:05 மணிக்கு துவங்கி, 22 நிமிடங்கள் நீடித்ததாக தெரிவித்தார். பிறகு, மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயத்தை தெரிவித்தார். அவர், ' நாம் பாகிஸ்தானை அதிகாலை1: 35 மணிக்கு அழைத்து, பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை. ராணுவம் இல்லாத இடங்களை மட்டுமே குறிவைத்தோம் எனக்கூறியதாக ' இங்கு தெரிவித்தார். ஒரு வேளை அவர் என்ன வெளிப்படுத்தினோம் என்பதை அவருக்கு தெரியாமல் இருக்கலாம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என பாகிஸ்தானிடம் அவர் கூறியுள்ளார்.

ஒப்பீடு

நேற்று ராஜ்நாத் சிங், 1971ம் ஆண்டு நடந்த போரையும் ஆபரேஷன் சிந்தூரையும் ஒப்பிட்டு பேசினார். அப்போது இந்தியப் பெருங்கடல் வழியாக அமெரிக்காவின் ஏழாவது கடற்படை பிரிவு நெருங்கிக் கொண்டு இருந்தது. அப்போதைய பிரதமர் இந்திரா, வங்கதேசத்துக்காக நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும்.எங்கு செல்ல வேண்டுமோ செல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்.ராணுவ தளபதி ஜெனரல் மானெக்ஷாவிடம் 6 மாதங்கள், 1 வருடம் உங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு சுதந்திரம் உள்ளது என இந்திரா தெரிவித்தார். ஒரு லட்சம் பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்தனர். ஒரு புதிய நாடு உருவாக்கப்பட்டது.நீங்கள் பாகிஸ்தானுக்குள் சென்றீர்கள். பாகிஸ்தானின் வான் பாதுகாப்பை தாக்கவேண்டாம் என சொல்லி விமானிகளின் கைகளை நீங்கள் கட்டிப் போட்டு விட்டீர்கள்.

உறுதி வேண்டும்

நமது படைகள் திறமையாக செயல்பட, அவர்களுக்கு அரசியல் உறுதியும், சுதந்திரமும் தேவைப்படுகிறது. இந்திய ஆயுதப்படைகளை களமிறக்க விரும்புபவர்கள், அவர்களுக்கு முழுமையான சுதந்திரம் மற்றும் வலிமையான அரசியல் உறுதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட நான் தான் காரணம் என டிரம்ப் 29 முறை சொல்லி உள்ளார். அவர் பொய் சொல்கிறார் என்றால், டிரம்ப் சொல்வது பொய் என பிரதமர் மோடி இந்த அவையில் தெளிவாக கூற வேண்டும். இந்திராவின் தைரியம் அவருக்கு இருந்தால், அவர் தைரியமாக எழுந்து, 'டிரம்ப நீங்கள் பொய் சொல்கிறீர்கள்' எனக்கூற வேண்டும்.

தோல்வி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த அவையில் நான் சொல்லியதை பார்த்து சிரித்தீர்கள். பாகிஸ்தானையும், சீனாவையும் தனித்தனியாக வைத்து இருப்பதே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு மிகப்பெரிய சவால் எனத் தெரிவித்தேன். ஆனால், நாம் தோல்வியடைந்துவிட்டோம். அவர்கள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அழித்துவிட்டனர். பாகிஸ்தானுக்கு எதிராக மட்டுமே போரிட்டு கொண்டு இருக்கிறோம் என இந்திய அரசு நினைக்கிறது. ஆனால், அவர்கள் வந்த பிறகு தான், பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிராக போரிடுகிறோம் எனத் தெரிகிறது.பாகிஸ்தான் ராணுவம் மற்றும் கடற்படை சீனாவுடன் கூட்டணி அமைத்துள்ளன. பாகிஸ்தான் விமானப்படையின் கோட்பாடு முற்றிலும் மாறிவிட்டது. மேலும் பாகிஸ்தானுக்கு தேவையான செயற்கைக்கோள் தரவுகள் உள்ளிட்ட போர்க்கள தகவல்களை சீனா அளித்து வருகிறது.

நாடு மேலானது

பெரிய சக்திகள் சண்டையிடும் போர்க்களமாக இந்தியாவை மாற்ற அனுமதிக்கக்கூடாது. நாம் கவனமாக செயல்பட்டு நமது நலன்களை பாதுகாக்க வேண்டும். இரண்டாவதாக, இந்த நாடு உங்களின் பிம்பத்துக்கும், பிஆர்க்கும் மேலானது நாடு. இதனை அவர் புரிந்து கொள்வதுடன், அற்ப அரசியல் விளையாட்டுகளுக்காக ஆயுதப்படைகளையும, நாட்டின் நலன்களையும் தியாகம் செய்யாதீர்கள். இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

Rajasekar Jayaraman
ஜூலை 30, 2025 15:31

ஒரு போக்குதான் இதுபோல் பேச முடியும்.


MARUTHU PANDIAR
ஜூலை 31, 2025 01:02

ஒரு காலை எடுங்க , பேக்கு வரும்


அப்பாவி
ஜூலை 30, 2025 06:25

இவர்கள் ஆட்சியில் ராணுவத்துக்கு தேவையானவை வாங்கித் தரவே வக்கில்லை பேச வந்துட்டாரு


Kasimani Baskaran
ஜூலை 30, 2025 04:07

ஒவ்வொருவரும் பொய் சொல்லும் பொழுதும் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தால் காங்கிரஸ் சொல்லும் பொய்களுக்கு எதிர்ப்பு மட்டுமே தெரிவித்துக்கொண்டு இருக்கமுடியும் - ஆட்சி செய்ய முடியாது.


saravanan
ஜூலை 29, 2025 23:07

ராகுல் வரலாற்றை முழுமையாக புரிந்து கொண்டு தான் பேசுகிறாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. 1965 சீன ஆக்கிரமிப்பில் மிகப்பெரிய நிலப்பரப்பை இழந்துவிட்டோம். பின்பு பாகிஸ்தானுடனான போர்களில் காஷ்மீரின் ஒரு பகுதி பறிபோனது. இதே ராகுல் சார்ந்த காங்கிரஸ் ஆட்சியின் போதுதான் அருணாச்சல பிரதேசம் முதல் லடாக் உள்ளிட்டவற்றை சீன பழைய நினைப்பில் உரிமை கொண்டாட ஆரம்பித்தது அதன் தொடர்ச்சியாக டோக்லாம் மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு விவகாரங்களும் அதற்கு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு செய்த முஸ்தீபுகளும் கொடுத்த பதிலடிகளுமே சான்று இருப்பினும் நமது இருபது வீரர்களை இழந்தது தீராத வடு. அனைத்துக்கும் தீர்வாக சமீபத்திய தாக்குதலில் பாகிஸ்தானை மட்டுமல்ல அதற்கு ஆலவட்டம் சூட்டிய சீனாவின் ஆயுத தொழில் நுட்ப அவலங்களையும் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறோம் என்பதே வெற்றியான தொடக்கம்


Rajan A
ஜூலை 29, 2025 22:56

உனக்கு என்ன, நீ என்ன வேணும்னாலும் பேசலாம், - சீமான் பேச்சு ஞாபகம் வந்தது. இந்த மாதிரி சீரியஸாக உளறி சிரிக்க வைக்கும் ஒரே நபர் இவராகத்தான் இருக்க முடியும். டிரம்ப் சொன்னால் சொல்லிட்டு போகட்டும். அது அவரின் கருத்து சுதந்திரம்னு சொன்னால் போச்சு. நாட்டு மக்கள் வரி பணத்தில் காமெடி தான்


M Ramachandran
ஜூலை 29, 2025 22:22

ஆம் அயல்நாட்டு ஐந்தாம் படை தலையயவர் சொல்லிட்டார் தெரிஞ்சிக்கோங்க.முத்தி போன கேசையை யெல்லாம் தேர்ந்தெடுத்து மக்கள் தாங்கள் கவனபிசகாக பாராளுமன்றத்திற்கு அனுப்பியதைய்ய எண்ணி இப்போனது நினைத்து வருத்த படுகிறார்கள்.


theruvasagan
ஜூலை 29, 2025 22:08

இன்றைய சூழ்நிலையில் போர் மூண்டால் நாட்டின் பாதுகாப்பு பொருளாதாரம் இரண்டும் பாதிக்கப்படும். உக்ரேன் ரஷ்யா போர் இஸ்ரேல் ஹமாஸ் சண்டை இதற்கு எடுத்துக்காட்டு. நாட்டுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. மோடி அரசு சங்கடத்தி்ல் மாட்டிக்கொண்டு தவிக்கணும் அதை குறை சொல்லி நாம் ஆனந்தம் அடையுணும் என்கிற நல்ல மனசுக்காரர்.


vadivelu
ஜூலை 29, 2025 21:22

இந்து அல்லாதோர், எதையும் துணிந்து செய்யும் பிறவி தவறு புரிபவர்கள் 50 கோடி பேர் நம்முடன் இருக்கிறார்கள் என்று ஓவரா கூச்சல்


MARUTHU PANDIAR
ஜூலை 29, 2025 21:20

உங்க அம்மாவின் களிமண்ணு சிங்கு ஆட்சீல உளவுத் துறையை சுதந்திரமா செயல் பட விட்டீர்களா? அப்படி செயல்பட்டிருந்தால் எப்படி , மும்பை குண்டு வெடிப்பு மற்றும் எல்லா பயங்கரவாத சாவுகளும் நிகழ்ந்தது?


N Sasikumar Yadhav
ஜூலை 29, 2025 21:13

ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் களவானிங்க ஆட்சியில் நமது ராணுவத்துக்கு கொடுத்த சுதந்திரம் பாரதம் நன்கு அறியும்


சமீபத்திய செய்தி