உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் நடைமுறையை வலுப்படுத்த கூட்டம்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு

தேர்தல் நடைமுறையை வலுப்படுத்த கூட்டம்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேர்தல் நடைமுறையை வலுப்படுத்துவது தொடர்பான கூட்டத்தில் பங்கேற்கும்படி அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதி உள்ளது.மஹாராஷ்டிரா மற்றும் டில்லி சட்டசபை தேர்தல்களின் போது வாக்காளர் பட்டியலில் குளறுபடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேற்கு வங்கத்திலும், ஒரே எண்ணுடன் பல வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளதாக திரிணமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டி அது குறித்து ஆதாரங்களை வெளியிட்டு இருந்தது. இது தொடர்பான விவகாரம் பார்லிமென்டில் எதிரொலித்தது. இச்சூழ்நிலையில் கடந்த வாரம் தேர்தல் கமிஷன் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் ஆலோசனை நடத்தும்போது, ' அரசியல் கட்சிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி அவர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தீர்வு கண்டு அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்,' என உத்தரவிட்டு இருந்தார்.இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் கமிஷன் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: சட்ட விதிகளுக்கு உட்பட்டு தேர்தல் நடைமுறைகளை சீர்படுத்துவது தொடர்பாக நடக்கும் கூட்டத்தில் கட்சிகள் பங்கேற்க வேண்டும். கட்சிகளின் வசதிக்கு ஏற்ற தேதியில் இக்கூட்டம் நடத்தப்படும். ஏதேனும் தீர்க்கப்படாத பிரச்னைகள் இருந்தால், அது குறித்து ஆலோசனைகளை ஏப்.,30ம் தேதிக்குள் தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தத்வமசி
மார் 11, 2025 23:29

இந்த கூட்டங்களில் கலந்து கொள்ளாமல், தங்கள் மாநிலங்களில் மற்றும் மாமன்றங்களில் போராட்டங்களை நடத்தி குழப்பங்களை ஏற்படுத்தும் கட்சிகளின் உரிமையை முடக்கினால் அனைவரும் கூட்டத்திற்கு தவறாமல் வருவார்கள். என்னதான் தேர்தல் உயர் அதிகாரிகள் மத்திய அரசின் கீழே இருந்தாலும், அந்தந்த மாநிலங்களில் தேர்தல் துறைகளில் வேலை செய்பவர்கள் அந்தந்த மாநிலத்து மக்கள் தானே. அவர்களுக்கு பிராந்திய கட்சியின் மீது ஒரு ஈர்ப்பு பக்தி இருக்கத்தானே செய்யும். அதனால் அவர்களின் தொடர்புகளின் மூலம் தில்லுமுல்லு செய்வதற்கு முகாந்திரம் உள்ளது. அதையும் கவனித்து களையெடுக்க வேண்டும். தங்களுக்கு சாதகமாக எண்ணிக்கை உயரும் போது அமைதியாக இருக்கும் கட்சிகள், தனக்கு எதிராக மக்கள் திரும்பும் போது தேர்தல் துறை மீதும், ஓட்டு மிஷின் மீதும் குறை சொல்வார்கள்.


சுந்தர்
மார் 11, 2025 23:18

பணம் கொடுத்து ஓட்டு வாங்கறத தடுக்க, தண்டிக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கறதில்ல. நீதிமன்றத்தை விட சக்தி வாய்ந்தது. உபயோகப்படுத்தறதில்ல... என் சொல்வது...


KRISHNAN R
மார் 11, 2025 21:18

ஓஹோ ஓஹோ


சமீபத்திய செய்தி