| ADDED : அக் 29, 2025 07:43 PM
அம்பாலா: இன்று (அக்.29ம் தேதி) ரபேல் விமானத்தில் பறந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, அம்பாலா விமானப்படை தளத்தில் ஸ்குவாட்ரன் லீடர் ஷிவாங்கி சிங்குடன் படம் எடுத்துக் கொண்டார். ஆபரேஷன் சிந்துார் நடந்தபோது, ஷிவாங்கியை பிடித்து விட்டதாக பாகிஸ்தான் ராணுவம் பொய் புளுகியது குறிப்பிடத்தக்கது.ஆபரேஷன் சிந்துார் நடந்தபோது, பாகிஸ்தான் ராணுவம் ஏராளமான பொய்களை அவிழ்த்து விட்டது. அதன் அண்டப்புளுகு, ஆகாசப்புளுகுகள் எல்லாம் சர்வதேச ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தன.தங்கள் நாட்டு போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதை மூச்சு விடாத பாகிஸ்தான், இந்தியாவின் போர் விமானங்களை வீழ்த்தி விட்டதாகவும், இந்திய பெண் விமானி ஷிவாங்கி சிங்கை தங்கள் நாட்டு ராணுவம் பிடித்து விட்டதாகவும் பொய்யான தகவல்களை பரப்பியது. இதை இந்தியா மறுத்தது.இந்நிலையில் இன்று ரபேல் விமானத்தில் பறப்பதற்கான அம்பாலா விமானப்படை தளம் சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, அங்கிருந்த ஸ்குவாட்ரன் லீடர் ஷிவாங்கி சிங்குடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.பாகிஸ்தான், தங்கள் நாட்டு ராணுவம் பிடித்து விட்டதாக பொய் புளுகிய நிலையில், ஜனாதிபதி வெளியிட்டஇந்த படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.வாரணாசியை சேர்ந்த 29 வயது ஷிவாங்கி, 2017 ம் ஆண்டு இந்திய விமானப்படையில் பணியில் சேர்ந்தார். தற்போது ரபேல் விமானங்களை இயக்கி வரும் இவர், முன்னதாக மிக் 21 விமானங்களையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.