உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மின்சாரம் தாக்கி 3 பேர் பலி

மின்சாரம் தாக்கி 3 பேர் பலி

மூணாறு : கேரளா இடுக்கி மாவட்டம், கட்டப்பனை அருகேமின்சாரம் தாக்கி மூன்று பேர் பலியாகினர். கட்டப்பனை அருகே உள்ளகோழிமலை பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பன். இவரது மனைவி ராஜம்மாள் (54), மகன் ஷனோஜ் (26). இவர்கள் வீட்டின் அருகில் காய்த்துள்ள பலாப்பழங்களை பறித்தனர். ஷனோஜ் நீளமான இரும்பு கம்பியால் பழங்களை பறித்தார். கம்பி, அருகில் உள்ள உயர் மின் அழுத்த மின்கம்பியில் சிக்கியதால், ஷானேஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. மகனை காப்பாற்ற முயன்ற ராஜம்மாள் மீதும் மின்சாரம் தாக்கியது.

இவர்களது அலறல் சப்தம் கேட்டு காப்பாற்றச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த திவாகரன் (52) மீதும் மின்சாரம் பாய்ந்தது. மூவரும் அதே இடத்தில் இறந்தனர். இதை பார்த்த தங்கப்பன், திவாகரனின் உறவினர் கிருஷ்ணன் மயக்கமடைந்தனர். இருவரும் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கட்டப்பனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை