வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மர்ம பொருள் ? மர்ம நபர்கள் வீட்டில் வெடித்ததா? பெங்களூரில் , கோயம்பத்தூரில் என்று வெடித்தது போன்றா ?
லக்னோ: அயோத்தியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாக்லா பாரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மர்ம பொருள் வெடித்து சிதறியது. இந்த அந்த வீடு இடிந்து தரைமட்டமானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்தனர்.இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.மர்ம பொருள் வெடித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ''மர்ம பொருள் வெடிப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணத்தில் விசாரிக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மர்ம பொருள் ? மர்ம நபர்கள் வீட்டில் வெடித்ததா? பெங்களூரில் , கோயம்பத்தூரில் என்று வெடித்தது போன்றா ?