உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் பிரசாந்த் கிஷோர்

பீஹார் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் பிரசாந்த் கிஷோர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹார் சட்டசபை இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பீஹார், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு இந்த மாதம் 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீஹாரில் கடந்தாண்டு நடந்த தேர்தலில் பாங்கிபூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜவின் தேசிய தலைவர் நிதின் நபின் 5வது முறையாக வெற்றி பெற்றார். தற்போது, இவர் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால், பாங்கிபூர் தொகுதி காலியனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dd5vf1yg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர் பாங்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் மனோஜ் பாரதி அறிவித்துள்ளார். கடந்தாண்டு நடந்த பீஹார் சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அதேவேளையில், பாங்கிபூர் தொகுதி பல ஆண்டுகளாக பாஜவின் கோட்டையாக இருந்து வருகிறது. பாஜ இன்னும் அதிகாரப்பூர்வமாக வேட்பாளரை அறிவிக்கவில்லை என்றாலும், அஜய் அலோக், நீல் ரத்தன் கோஷ் மற்றும் அஜீத் குமார் லாலி ஆகியோரது பெயர்களைப் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
ஜூலை 06, 2026 14:42

பிஹாரி களுக்கு அங்க அரசியல் நல்லா இருக்க தேவையில்லை. இங்கே அமைதியா சமுசா, பானி பூரி விக்க முடிஞ்சா போதும்.


Nathansamwi
ஜூலை 06, 2026 09:04

நிஷாந்த் குமார் மகனெல்லாம் மந்திரி ஆக இருக்கிறப்போ இது தவறு


ராமகிருஷ்ணன் பரமக்குடி
ஜூலை 06, 2026 04:07

இவர் தமிழக மக்களுக்கு செய்த துரோகங்களுக்கு, பாவங்களுக்கு விமோசனமே கிடையாது. ஆயிரம் பிறவிகள் கொடூர தண்டனையை பெற்று உள்ளார்.


Ramesh Sargam
ஜூலை 05, 2026 20:13

டெபாசிட் கூட கிடைக்காது.


sankaranarayanan
ஜூலை 05, 2026 19:10

பிரசாந்த் கிஷோரால் அமைக்கப்பட்ட ஒரு அரசுகூட நிம்மதியாக ஆட்சியில் எங்குமே இப்போது இல்லை பாவம் அதிர்ஷ்ட சாலி அல்ல தன்னாலேயே ஒரு இடம்கூட தனக்கு கட்சிக்கு வெற்றி பெற முடியவில்லை இவை எதற்காக சம்பாதித்த பல கோடி பணத்தை விரயமாக்க வேண்டும் இவரால் அமைக்கப்பட்ட திராவிட மாடல் அரசு அம்போ என்று போய்விட்டது இனி இவரது உறவோ உதவியோ நாட்டில் யாருக்குமே தேவை படாது பேசாமல் அருகில் உள்ள காசிக்கு சென்று ஓர் ஆசிரமத்தில் தங்கி சொச்ச காலத்தை போக்கினால் இவர் அரசியலில் செய்த பித்தலாட்டம் அக்கிரமங்களுக்கு பாபங்களுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும் போவாரா


duruvasar
ஜூலை 05, 2026 17:26

சாமியாராக போக போவதாக வந்த செய்தி பொய்யா கோபால்.