உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரிமீயர் லீக் கிரிக்கெட்: 8 விக்கெட் வித்தியாசத்தில் டில்லி அணி வெற்றி

பிரிமீயர் லீக் கிரிக்கெட்: 8 விக்கெட் வித்தியாசத்தில் டில்லி அணி வெற்றி

லக்னோ: பிரிமீயர் லீக் கிரிக்கெட்இன்றைய போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி டில்லி அணி வெற்றி பெற்றதுபிரீமியர் லீக் தொடரின் 40 வது லீக் போட்டி இன்று உ.பி. மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ அணியும், டில்லி அணியும் மோதின..முதலில் டாஸில் வென்ற டில்லி அணி, பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து பேட்டிங்கில் களம் இறங்கிய லக்னேவா அணியின் துவக்க ஆட்டக்காரர்களான மார்க்ரம், மிட்சல் மார்ஷ் இருவரும் நல்ல துவக்கம் தந்தனர்.32 பந்துகளில் 52 ரன்கள் விளாசிய லக்னோ வீரர் மார்க்ரம், சமீரா பந்தில் ஆட்டமிழந்தார்.அவரை தொடர்ந்து 36 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த மிட்சல் மார்ஷ் முககேஷ் குமார் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.பூரன் 5 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சமத் 2ரன்களில் முகேஷ் குமார் பந்தில் ஆட்டமிழந்தார்.படோனி ஒரளவுக்கு நிலைத்து ஆடி, 21 பந்தில் 36 ரன்கள் சேர்த்து முகேஷ் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். ரிஷாப் பன்ட் ரன் ஏதும் எடுக்காமல் முகேஷ் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 14 ரன்கள் சேர்க்க, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து லக்னோ அணி 159 ரன்கள் எடுத்தது.160 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய டில்லி அணியில் அபிஷே க் போரல் 51 ரன்களிலும், கருண் நாயர் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் .17.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.இதில் ராகுல் 57 ரன்களும், அக்சர் படேல் 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் டில்லி அணி வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி