ஏற்பாடுகள் தயார்!
ஜூலை 3ல் அமர்நாத் யாத்திரை துவங்கஉள்ள நிலையில், தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. பக்தர்கள் அதிகளவில் கோவிலுக்கு வரும்படி கேட்டுக் கொள்கிறேன். பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்த குறையும் இருக்காது. இந்தாண்டு யாத்திரை அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.மனோஜ் சின்ஹா, துணைநிலை கவர்னர், ஜம்மு - காஷ்மீர் முறியடிக்க உதவும்!
ஜம்மு - காஷ்மீரின் விரைவான வளர்ச்சி, அமைதி, செழிப்பு ஆகியவை, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சதித்திட்டங்களை முறியடிக்க உதவும். செனாப் நதியின் மேல் கட்டப்பட்ட மிக உயரமான ரயில் பாலம், ஒரு மைல்கல் நிகழ்வு. விரைவில் காஷ்மீரில் மேலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும்.ஒமர் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சிதெலுங்கானா எதிரிகள்!
பாரத் ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவும், அவரது குடும்பத்தினரும் தெலுங்கானாவின் எதிரிகள். காங்கிரசில் அவர்களை ஒருபோதும் சேர்க்க மாட்டோம். நான் உயிருடன் இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது. மக்களின் கவனத்தை ஈர்க்கவே, குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் நாடகமாடுகின்றனர்.ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா முதல்வர், காங்.,