உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ மகிழ்ச்சி

கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான கிரையோஜெனிக் சிஇ 20 இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்தது என இஸ்ரோ கூறியுள்ளது.இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் நேற்று(டிச.,12) வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: விண்கலங்களை சுமந்து செல்லும் ராக்கெட்களில் கிரையோஜெனிக் இன்ஜின் பயன்படுத்தும் ஒரு சில நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.இது, இந்தியா அனுப்பிய ஆறு ராக்கெட்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கும் இந்த இன்ஜின் தேர்வாகியுள்ளது. இந்நிலையில், இந்த இன்ஜினின் திறனை மேம்படுத்துவதற்காக பல புதிய சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.அதன்படி, தமிழகத்தின் திருநெல்வேலியின் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில், கடந்த நவ., 29ம் தேதி புதிய சோதனை நடத்தப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து ராக்கெட்டை அனுப்புவது தொடர்பாக இந்த இன்ஜின் பரிசோதிக்கப்பட்டது.இது மிகவும் முக்கியமான மற்றும் சிக்கலான சோதனை. கடல் மட்டத்தில் உள்ள வெப்பத்தை தாங்கும் திறன் போன்ற சோதனை நடத்தப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Rpalni
டிச 13, 2024 02:00

இதற்கு மூல காரணமான இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். இவரை மேலை நாடுகளில் கையூட்டு பெற்று வேட்டையாடிய கேவலமான கேரளா போலீஸ். நீதியை நிலை நாட்டிய உச்ச நீதி மன்றம்.


RAMAKRISHNAN NATESAN
டிச 12, 2024 20:42

சுமார் முப்பதாண்டுகளாக இதற்கான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருந்தன ....


bal man
டிச 12, 2024 19:58

தமிழக அரசு, செய்ய வேண்டிய வேலை,மலை, மந்திரி, கிட்ட சொல்லுங்க ஐயா


Ramesh Sargam
டிச 12, 2024 19:41

விண்ணில் சாதனை. வாழ்த்துக்கள். மண்ணில்...? சோதனை!!! சாலைகள் சரியில்லை, பாலங்கள் சரியில்லை. விண்ணில் சாதிப்பதுபோல, மண்ணிலும் சாதிக்கவேண்டும்.


Rpalni
டிச 13, 2024 08:19

திருட்டு த்ரவிஷன்கள் ஒழிக்கப்பட்டு அண்ணாமலை ஆட்சி அமைந்தாலே சாத்தியம்


இறைவி
டிச 12, 2024 19:30

ஐயா, ராக்கெட் விடுவது மத்திய அரசின் நிறுவனம். அங்கு வேலை செய்யும் விஞ்ஞானிகளின் சம்பளம் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மேலாளரின் சம்பளத்தை விட குறைவு. ஆனாலும் அவர்கள் அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறார்கள். வெற்றி பெறுகிறார்கள். ஆனால் இங்கு சாலை அமைப்பவர்கள் திராவிட அரசுக்கு கமிஷன் கொடுத்து ஆர்டர் பெறுபவர்கள். அதனால்கமிஷன் போக மிச்சம் உள்ள அளவு தான் தரம் இருக்கும். வெள்ளத்தனைய மலர் நீட்டம் சரியான குரல்.


Sathish
டிச 12, 2024 19:04

வாழ்த்துக்கள் ..... அதுஎல்லாம் சரி எப்போ அய்யா சாலைகளை தரமா போடுங்க ,அதுக்கு ஏதாவது ராக்கெட் science formula இருக்கா


S. Venugopal
டிச 12, 2024 18:39

கிரேயோஜெனிக் என்ஜினை வெற்றிகரமாக நமது நாட்டில் உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கும் பொறியியல் வல்லுனர்களுக்கம் பாராட்டுக்கள்


Bala
டிச 12, 2024 18:28

மேலும் பற்பல வெற்றியை ஈட்டவும்


Selvasundharam NA
டிச 12, 2024 18:19

மக்கள் வரிப்பணத்தில் நிதி ஒதுக்கப்பட்டு, ஆராய்ச்சியாளர்களின் கடின உழைப்பால் இது நிறைவேறியுள்ளது. யார் உழைப்பில் யார் பேர் வாங்குவது?


Sankar Ramu
டிச 12, 2024 17:27

சிறப்பு. வாழ்த்துக்கள்


புதிய வீடியோ