உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகை ஷோபனா உள்ளிட்ட 68 பேருக்கு பத்ம விருது: வழங்கினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

நடிகை ஷோபனா உள்ளிட்ட 68 பேருக்கு பத்ம விருது: வழங்கினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நடிகை ஷோபனா, நல்லி குப்புசாமி உட்பட 68 பேருக்கு, டில்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.நாட்டின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ என மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு மற்றும் சிவில் சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பு வாய்ந்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு மத்திய அரசு 139 பத்ம விருதுகளை அறிவித்தது, இதில் ஏழு பத்ம விபூஷன், 19 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் அடங்கும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=94mef39s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முதல்கட்டமாக 71 பிரபலங்களுக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி ஏற்கனவே வழங்கிய நிலையில், இன்று 2வது கட்டமாக 68 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த முறை பத்ம விருது பெற்றவர்களின் பட்டியலில் 23 பெண்கள் இடம் பெற்றிருந்தனர்.அவர்களில், நடிகை ஷோபனா, நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்மபூஷன் விருதுகள் வழங்கப்பட்டன. முன்னாள் இந்திய தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர் மற்றும் குமுத்னி ரஜினிகாந்த் லக்கியா ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.ஜதின் கோஸ்வாமி, கைலாஷ் நாத் தீட்சித், சாத்வி ரிதம்பரா ஆகியோர் பத்ம பூஷண் விருதுகளும், பிரபல பொருளாதார நிபுணர் பிபேக் தேப்ராய் மறைவுக்குப் பிறகு கவுரவிக்கப்பட்டனர். மந்த கிருஷ்ண மடிகா, டாக்டர் நீர்ஜா பட்லா, சாந்த் ராம் தேஸ்வால் மற்றும் சையத் ஐனுல் ஹசன்,கண்ணப்பா சம்பந்தன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டடது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

RAAJ68
மே 28, 2025 07:12

மகாபாரத திரௌபதி கூந்தலை விரித்துப் போட்டுக் கொண்டு சபதம் எடுத்தாள். ஆனால் இங்கே திரௌபதியிடம் விருது வாங்க வந்த ஷோபனா கூந்தலை விரித்துப் போட்டுக் கொண்டு வந்திருந்தார். அவருக்கு அடுத்ததாக வந்த ஆண் நபர் குடுமி வைத்துக்கொண்டு அதை நன்றாக கட்டியிருந்தார். இதுதான் வளர்ச்சி அடைந்த இப்போதைய நாகரீகம்.


RAVI
மே 28, 2025 14:02

ஜனாதிபதியின் கைகளினால் விருது வாங்கும் வரை விரித்த கூந்தலை முடிய மாட்டேன் என்று ஷோபனா சபதம் எடுத்திருப்பார்


sankaranarayanan
மே 27, 2025 21:26

திருட்டு தொழிலை ஒழுங்காக செய்கிறார்கள் என்று கருதி திராவிட மாடல் அரசுக்கும் பதம் விருது அளித்திருக்கலாம் ஏனோ விட்டுப்போயிடுச்சு


Ramesh Sargam
மே 27, 2025 19:49

நம்ம கட்சி காரங்க யாருக்கும் இல்லையா? அதான்பா திமுக கட்சிக்காரங்க யாருக்கும் கிடைக்கலையா?


Suresh Velan
மே 27, 2025 20:34

ஏங்க , எங்க வந்து என்ன கேள்வி ? DMK திருடர்களுக்கும் இந்த விருதுக்கும் என்ன சம்பந்தம் ?


Suresh Velan
மே 27, 2025 19:26

ஏங்க , நான் எங்க பிளாட்ஸ்க்கு ஒரு volunteer ஆக 24 X 7 வாட்டர் சப்ளை சேவை செய்கிறேன் . எனக்கு சமூக பனியின் கீழ் பத்ம விருது கிடைக்குமா ? கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும் என்று இங்கே அதை பற்றி தெரிந்தவர்கள் guide பண்ணுங்க பார்ப்போம் . இங்கே கருத்து தெரிவிக்கும் தினமலர் வாசகர்கள் எல்லோரும் இல்லாட்டாலும் முக்கால் வாசி பேர் நாமும் மக்களுக்கு சேவை செய்து நாட்டிற்கு நற்பெயர் எடுத்து கொடுக்க வேண்டும் என்று நிணைப்பவர்களே .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை