உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசிய நல்லாசிரியர் விருது வழங்கினார் ஜனாதிபதி; தமிழக ஆசிரியர்கள் இருவருக்கு விருது!

தேசிய நல்லாசிரியர் விருது வழங்கினார் ஜனாதிபதி; தமிழக ஆசிரியர்கள் இருவருக்கு விருது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கல்வியில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களுக்கு, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் தேசிய நல்லாசிரியர் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். ஆசிரியராக பணியாற்றி, ஜனாதிபதியாக உயர்ந்தவர் ராதாகிருஷ்ணனை கவுரவிக்கும் விதமாக, அவரது பிறந்த நாளான செப்., 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த நாளில், கல்வியில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி, மத்திய அரசு கவுரவிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு, தமிழகத்தில் இருவர், புதுச்சேரியில் ஒருவர் உட்பட 45 ஆசிரியர்கள், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில், டில்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். சென்னை, மயிலாப்பூரில் உள்ள, பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ரேவதி பரமேஸ்வரன், திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள, பாரதியார் நுாற்றாண்டு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Oviya Vijay
செப் 05, 2025 16:08

இந்த விருது வழங்கும் விழா மட்டுமல்ல பொதுவாகவே தற்போதைய ஜனாதிபதி விருது வழங்கும் பல விழாக்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களைப் பார்த்திருக்கிறேன்... அவரது முகத்தில் புன்முறுவல் மட்டும் மிஸ்ஸிங்... விருது வாங்குபவர்களின் பட்டியலில் தங்கள் பெயர் அறிவிக்கப்படும் போது எவ்வளவு மகிழ்ந்திருப்பர்... அவர்கள் இந்த புகைப்படங்களை ஃபிரேம் போட்டு பாதுகாப்பர் அல்லவா... அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் எடுக்கப்படும் புகைப்படத்தில், விருது பெறுபவர் முகத்தில் மட்டும் புன்னகையும் விருது கொடுப்பவர் முகத்தில் அமைதியும் இருந்தால் எப்படி இருக்கும்... ஆக தற்போதைய ஜனாதிபதி, மக்கள் கொடுக்கும் மரியாதை அவருடைய பதவிக்குத் தானேயன்றி அவருக்கல்ல என்பதை உணர்வாரோ... இந்நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்களை நினைவு கூர்கிறேன்... அவர் கலந்து கொள்ளும் அனைத்து விழாக்களிலும் அவரது முகம் மிகுந்த புன்னகையுடன் காட்சியளிக்கும்...


வாய்மையே வெல்லும்
செப் 05, 2025 19:31

எங்களுக்கு கூடத்தான் ராவுளு வின்சி இரண்டு நாட்டு குடியுரிமை வைத்துள்ளார். அவரை சகித்துக்கொடுத்தான் இங்கு இருக்கிறோம். இன்றைக்கு ஜனாதிபதி.. புன்னைகைக்க வில்லையாம் அதற்கு முழுநீள உங்களின் உரை. இதே மன்மோகன் சிங்க் ஆட்சியில் வெளிநாட்டு அமைச்சர்கள் வரும்போது மன்மோகன் என்கிற பிரதமர் அந்தஸ்து மேதையை ஓரங்கட்டி சோனியா முன்னின்று பிலிம் காட்டியது மறந்து போச்சு போல...


Subramanian
செப் 05, 2025 15:00

எல்லா ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்


Vasan
செப் 05, 2025 14:17

Congratulations to all the teachers What a proud moment this is