உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!

சண்டிகர்: எல்லையோர மாநிலமான பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி வீரர்களுடன் கலந்துரையாடினார். இன்று ஆதம்பூர் விமானப் படை தளத்திற்கு சென்று நமது துணிச்சலான வீரர்களைச் சந்தித்தேன் என சமூக வலைதளத்தில் மோடி பதிவிட்டுள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இந்தியா-பாக்., போரில் பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளம் முக்கியப் பங்காற்றியது. இந்த விமானப்படை தளத்தில் இருந்து வீரர்கள் பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை துல்லியமாக சுட்டு வீழ்த்தினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jdz8qkfm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இன்று (மே 13) ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி வீரர்களுடன் கலந்துரையாடினார். பிரதமர் மோடிக்கு பாகிஸ்தானுக்கு அளித்த பதில் தாக்குதல் குறித்து வீரர்கள் விளக்கம் அளித்தனர்.விமானப்படை தளத்தில் வீரர்களுடன் பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தற்போது இந்த புகைப்படம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.இந்த விமானப்படை தளத்தை தான், பாகிஸ்தான் ராணுவம் குண்டு வீசி அழித்து விட்டதாக முற்றிலும் பொய்யான தகவல்களை பரப்பியது. அதை பொய் என்று நிரூபிக்கும் வகையில், இன்று பிரதமர் மோடியின் பயணம், வீரர்களின் கலந்துரையாடல் அமைந்துள்ளது.

வீரர்களைச் சந்தித்தேன்!

ஆதம்பூர் விமானப் படை தளத்திற்கு சென்ற புகைப்படத்தை வெளியிட்டு பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: இன்று ஆதம்பூர் விமானப் படை தளத்திற்கு சென்று நமது துணிச்சலான வீரர்களைச் சந்தித்தேன்.துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் அச்சமின்மை ஆகியவற்றின் உருவகமாக இருப்பவர்களுடன் இருப்பது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. நமது நாட்டிற்காக நமது ஆயுதப் படைகள் செய்யும் அனைத்திற்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடன் இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

சிட்டுக்குருவி
மே 13, 2025 17:41

சிந்தூர் ஒரு நிரந்தர சித்தாந்த சட்டமாக்கபடவெண்டும்.எப்பொழுதெல்லாம் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏவி விடுகின்றதோ அதையெல்லாம் நம்மீது தொடுத்த போராக கருதபடவெண்டும். அமைதிவெண்டுமென்றால் தற்போது அவர்களிடமுள்ள எல்லா அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகளையும்ம் நம்மிடம் ஒப்படைக்கவேண்டும்.


Varadarajan Nagarajan
மே 13, 2025 15:18

நமது ராணுவ வீரர்களுக்கு நாம் தலை வணக்க்குகின்றோம். அவர்கள் எல்லையில் கண்விழிப்பதால்தான் நாம் வீட்டில் நிம்மதியாக உறங்கமுடிகின்றது. இந்த இக்கட்டான நேரத்தில் துணிச்சலாக பாகிஸ்தான் உள்ளே புகுந்து அவர்களது விமானப்படைத்தளத்தை தும்சம் செய்து, அவர்கள் அனுப்பிய ட்ரோன்களை அனாயாசமாக இடைமறித்து அழித்து நமது வலிமையை உலகிற்கு எடுத்துக்காட்டிய வீரர்களுடன் நேரில் சந்திப்பது அவர்களை மிகவும் உற்ச்சாகப்படுத்தும். அதேநேரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மற்ற உலகநாடுகளை ராஜதந்திரமாக கையாண்டு அனைவரும் நாம் எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் நிலைமையை அதி நுட்பமாக கையாண்டவிதம் நமது பிரதமருக்கே சாரும். அவரது தலைமையில் உள்ள தற்கால இரும்பு மனிதராக வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் எத்தகைய சூழலையும் அசால்ட்டாக கையாளும் உள்துறை அமைச்சர் மற்றும் நமது ராணுவத்தை முழுவதுமாக மறுசீரமைத்த நமது ராணுவ அமைச்சர் அனைவரும் மிகவும் பாராட்டப்படவேண்டியவர்கள். வாழ்க பாரதம்.


ராமகிருஷ்ணன்
மே 13, 2025 14:58

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சியாவது நடந்ததாக நினைவு இல்லை.


P. SRINIVASAN
மே 13, 2025 17:53

உனக்கு வரலாறு தெரியல...


NaanPeriyavan
மே 13, 2025 14:07

பயமரியாதவர் நமக்கு கிடைத்த பொக்கிஷம் தென்னாட்டு மக்கள் மேதகு காமராஜரை தோற்க வைத்து செய்த பாவத்தை இன்னும் தொலைக்காமல் அடுத்த தலைமுறைக்கும் ஒரு நல்ல பிரதமரை வசை பாடும் நன்றி கேட்ட அல்லது அறிவிலிகள்.


N.Purushothaman
மே 13, 2025 13:58

நேத்து அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி பாரத ராணுவத்தின் ஒழுக்கம் மற்றும் செய்லபாடுகளை வெகுவாக பாராட்டியதோடு நில்லாமல் பாகிஸ்தான் ராணுவத்தை கடுமையாக விமர்சித்தார் ...வாழ்க இந்திய ராணுவம் ....பாரத இளைஞர்களுக்கு மிகச்சிறந்த முன் உதாரணமாக இருக்கிறார்கள்.


Mr Krish Tamilnadu
மே 13, 2025 13:54

இது தான் நம் பிரதமரின் அன்பான பண்பு. உங்களுடன் ஒருநாள் என நேரடி சந்திப்பு. முந்தைய, அன்றைய, தற்போதைய மனநிலையின் எடைகள். ஏதேனும் குறைகள் என நேரடி சந்திப்பில் பல தெளிவுகள். இந்த தாக்குதலில் நிறைய கேள்விகள் உழன்று கொண்டே தான் இருக்கின்றன. 1. இன்னும் காஷ்மீர் தாக்குதல் பயங்கரவாதிகள் பிடிபடவில்லை. அவர்கள் எங்கே?. ஏன்?. பிடிக்க முடியவில்லை. 2. உலக நாடுகளிடம் தாக்குதலுக்கான தண்டனை என்ன? என்ற ஐடியாக்கள் கேட்கப்பட்டன. தன்னிச்சை செயலுக்கு உலக நாடுகளிடம் பதில் சொல்லாமல், ஆலோசிப்பது போல் செய்து தாக்குதல் நடத்தப்பட்டது. இப்போது அமெரிக்கா தலையீடு. வளரும் நேரத்தில் யாரையும் பகைக்க கூடாது என்றாலும், அமெரிக்க பேச்சுக்கு உலக நாடுகளின் பார்வையில் நமது நிலை?. 3. இந்த தாக்குதல் நமக்கு சாதகமாக இருந்ததா?. இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் பணிக்கு நாம் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை?. இன்னொரு அரசியல் சூழல், சந்தர்ப்பம் எப்போது அமையும்?. தற்போதைய நமது ப்ளஸ், மைனஸ் அவர்களுக்கு தெளிவை தரும். நாம் மேலும் வலிமையாக வேண்டும். 4. அணு ஆயுத பூச்சாண்டி, அணு ஆயுதத்திற்கு பாக். வெறும் பினாமி தான். அவர்களால் எப்போதும் அதை பயன்படுத்த முடியாது. அதை வைத்து தான் தப்பிக்கிறது. உடனே பெரிய நாடுகள் தலையீடும், சமரசம் என பேசும். அணு ஆயுத பூச்சாண்டிக்கு முற்றுப்புள்ளி என்ன?. 5. காஷ்மீர் தீர்வு எப்போது?. காஷ்மீர் அரசர் காஷ்மீரை எங்களுடன் இணைக்க ஒப்புக்கொண்டார். அதற்குள் சில பகுதிகளை ஆக்கிரமித்தது விட்டது. ஆங்கிலேயர்கள் தரப்பட்ட பகுதிகளை தவிர, மீதி பகுதியை விட்டு அவர்களாகவே வெளியேற வேண்டும். என்பதை நாம் தெளிவு படுத்தி எவ்வாறு பெறுவது. பாக். கே இந்திய பகுதி தான். ஆங்கிலேயர்கள் பிரித்து விட்டார்கள். அவர்களாக ஆக்கிரமித்த பகுதியை விட்டு செல்ல வேண்டும் எவ்வாறு?.ரகசியமான விடைகள் இருந்தால் நல்லது. இல்லையென்றால் கண்டு பிடிக்க வேண்டும்.


Rathna
மே 13, 2025 13:33

பயம் அறியாத தலைவர்.


SUBBU,MADURAI
மே 13, 2025 13:30

India has now become the only nation in the world to damage a dozen air bases of a nuclear armed country within 23 minutes


SUBBU,MADURAI
மே 13, 2025 13:14

If talks happen with Pakistan, it will only be on two topics: 1. Terrorism 2. Pakistan occupied Kashmir, POK. No other topics like the Indus Water Treaty abeyance will be entertained.


தேச நேசன்
மே 13, 2025 13:14

ஜெய் பாரத். ஜெய் பாரத ராணுவம் ஜெய் மோடிஜி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை