உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு; பிரதமர் மோடி பெருமிதம்

நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு; பிரதமர் மோடி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியில் பா.ஜ., ஆட்சியமைத்து 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடி ஒரு வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 11 ஆண்டுகளாக இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை நமது அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், புதிய கல்வி கொள்கை, திறன் மேம்பாடு மற்றும் ஸ்டார்ட் அப்களின் மூலம், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற முன்னெடுப்பில் முக்கிய பங்காற்றுகின்றனர். நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்றுவதில் மகிழ்ச்சியை அளிக்கிறது, எனக் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து, மத்திய அரசின் 11 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் விதமாக இ-புத்தகத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 11 ஆண்டுகளாக நீடித்த, நிலையான வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு, அனைத்து மக்களுக்கும் சரிசமமான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது. 2001ம் ஆண்டு குஜராத் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பிரதமர் மோடி, 2014ம் ஆண்டு பிரதமரானார். சீர்திருத்தங்கள் மற்றும் நிர்வாகத்தில் அவர் செய்த குறிப்பிடத்தக்க மாற்றங்களின் மூலம், இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளுக்கும், முன்மாதிரியான உள்ளடக்கிய வளர்ச்சியை கொண்டு வந்துள்ளார், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

முருகன்
ஜூன் 06, 2025 23:12

அந்த இளைஞர்களுக்கு இது வரை எவ்வளவு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது


அப்பாவி
ஜூன் 06, 2025 15:26

ரிடையரானவங்களுக்கு பதவிக் காலம் நீட்டிப்பு.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 06, 2025 14:13

போதைக்கு அடிமைகளாகிவிட்ட இளைஞர்கள் பத்தி சொல்றீங்க போலிருக்கு .....


M.Malini
ஜூன் 06, 2025 14:01

பிஜேபி ஆட்சியில் பாரதம் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. உலகமே பாரதம் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.


J.Isaac
ஜூன் 06, 2025 20:45

தினமும். கிட்டத்தட்ட 70 கோடி மக்கள் மூன்று வேளை உணவின்றி தவிக்கிறார்கள் என செய்தி


vivek
ஜூன் 06, 2025 13:40

special mental stooges as kanns never keep enough mind


Ramesh Sargam
ஜூன் 06, 2025 13:30

அந்த இளைஞர்களை கட்டுக்கோப்பாக வளர்க்கவேண்டியது அவர்களின் பெற்றோர்களின் பங்கு.


vivek
ஜூன் 06, 2025 13:21

anti slums from kanns keep idiotic messages


vivek
ஜூன் 06, 2025 13:19

some kanns bluffing as idiot, but all others are smart to understand and keep such bluffer out of way and throw to dustbin.


Kanns
ஜூன் 06, 2025 12:38

ModiBJP CHEATS People NativeMajorityHindus& Nation With FALSE PROPAGANDAS WITHOUT ANY ACHIEVEMENTS except Art370Abolition by RSS Madhav, vvlong Pendg RamTemple& Recent WaqfAmendment Instead of its Abolishment Economic Growth is Automatic from PostNarasimhaRaoReforms, AntiChinaWest& PopulousMarketWorkforce Nation And NOT by AntiPeople/PowerMisusing DICTATOR-MODI& Co, StoogeLoot Ministers-MPs-MLAs etc through StoogeBureaucratsOfficials. NO LIVELIHOODS PROVIDED only Minm WageJobs from President to Labourer Required EVEN PEOPLES OWN-LIVELIHOODS DESTROYED By ModiMental All-Intrusive AADHAR-SpyMaster & GST Which Failed to Punish Any of Extensive PowerMisusers, MegaLooters, BillionsOfForeignInfiltrators etc esp Ruling-AllnceParties, StoogeOfficials esp CaseHungryInvestigator-POLICE-JUDGES& PowerHungry BUREAUCRATS NewsHungryBiasedMEDIA, VoteHungryPARTIES, PowerHungryGroups incl FALSECOMPLAINT GangsWomen, SCs, Unions/Groups, advocates etc, All UNCHECKED by RULER-BIASED COURTJUDGES. SHAMEFUL GOVERNANCE/JUSTICE & BANANA REPUBLIC.


Kanns
ஜூன் 06, 2025 12:38

ModiBJP CHEATS People NativeMajority Hindus& Nation With FALSE PROPAGANDAS WITHOUT ANY ACHIEVEMENTS except Art370Abolition by RSS Madhav, vvlong Pendg RamTemple& Recent Waqf Amendment Instead of its Abolishment Economic Growth is Automatic from PostNarasimhaRaoReforms, AntiChinaWest& PopulousMarketWorkforce Nation And NOT by AntiPeople/PowerMisusing DICTATOR-MODI& Co, StoogeLoot Ministers-MPs-MLAs etc StoogeBureaucratsOfficials etc. NO LIVELIHOODS PROVIDED only Minm WageJobs from President to Labourer Required EVEN PEOPLES OWN-LIVELIHOODS DESTROYED By ModiMental All-Intrusive AADHAR-SpyMaster & GST Which Failed to Punish Any of Extensive PowerMisusers, MegaLooters, BillionsOfForeignInfiltrators etc esp Ruling-AllnceParties, StoogeOfficials esp CaseHungryInvestigator-POLICE-JUDGES& PowerHungry BUREAUCRATS NewsHungryBiasedMEDIA, VoteHungryPARTIES, PowerHungryGroups incl FALSECOMPLAINT GangsWomen, SCs, Unions/Groups, advocates etc, All UNCHECKED by RULER-BIASED COURTJUDGES. SHAMEFUL GOVERNANCE /JUSTICE & BANANA REPUBLIC.


புதிய வீடியோ