உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி இல்லத்தில் சிந்தூர் மரக்கன்றை நட்டார் பிரதமர் மோடி; இணையத்தில் வீடியோ வைரல்!

டில்லி இல்லத்தில் சிந்தூர் மரக்கன்றை நட்டார் பிரதமர் மோடி; இணையத்தில் வீடியோ வைரல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் தனது இல்லத்தில் பிரதமர் மோடி 'சிந்தூர்' மரக்கன்றை நட்டார். அவர் மண்வெட்டி வைத்து குழி தோண்டி, மரக்கன்றை நடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 5ல் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக சுற்றுச்சூழல் தினமான இன்று டில்லியில் உள்ள தனது இல்லத்தில் பிரதமர் மோடி 'சிந்தூர்' மரக்கன்றை நட்டார். அவர் மண்வெட்டி வைத்து குழி தோண்டி மரக்கன்றை நடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kj6hpaog&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சமீபத்தில் கட்ச் நகருக்கு விஜயம் செய்தபோது, ​​1971ம் ஆண்டு போரில் குறிப்பிடத்தக்க துணிச்சலை வெளிப்படுத்திய பெண்கள் குழு பிரதமர் மோடியைச் சந்தித்து சிந்தூர் மரக்கன்றுகளை வழங்கியது. இந்த மரக்கன்றை நடவு செய்து பராமரிப்பேன் என அந்த பெண் குழுவிடம் பிரதமர் மோடி கூறியிருந்தார். தற்போது அந்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றி உள்ளார்.

பஸ் சேவை!

இதற்கிடையே, சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு டில்லியில் 200 எலெக்ட்ரிக் பஸ் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி உடன் டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா, டில்லி முதல்வர் ரேகா குப்தா, மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Arul. K
ஜூன் 05, 2025 15:30

எங்கள் ஊரில் செந்தூரம் என்ற மரம் உள்ளது. ஆரஞ்சு நிறத்தில் கொத்து கொத்தாக அழகிய பூக்களை தரும்


அசோகன்
ஜூன் 05, 2025 15:11

மோடிஜியின் காலம் இந்தியாவின் பொற்காலம்


பாரத புதல்வன்
ஜூன் 05, 2025 15:10

வாழ்த்துக்கள் அய்யா...!!!! பாரத பிரதமர் மோடி அவர்களை சிரம் தாழ்த்தி, மனமுவந்து பாராட்டுகிறோம்.


சிட்டுக்குருவி
ஜூன் 05, 2025 14:25

இதை நாடுமுழுவதும் மக்கள் செய்திருக்கலாமே


முக்கிய வீடியோ