உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜ பாதையில் குப்பையை அகற்றிய பிரதமர்; குடியரசு தின விழாவில் சுவாரஸ்யம்

ராஜ பாதையில் குப்பையை அகற்றிய பிரதமர்; குடியரசு தின விழாவில் சுவாரஸ்யம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் போது ராஜ பாதையில் கிடந்த குப்பையை பிரதமர் மோடி எடுத்து போட்ட நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.குடியரசு தினத்தை முன்னிட்டு, டில்லியில் தேசியக் கொடியை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றினார். ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியங்களை விளக்கும் வகையில் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து, இசைக்கருவிகள் முழங்கிய படி 300 கலைஞர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் சிறப்பு விருந்தினர் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி செய்த செயல் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருவதுடன், பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, துணை ஜனாதிபதி ஜக்திப் தன்கர் வருகை புரிந்தார். அவரை வரவேற்பதற்காக சென்ற பிரதமர் மோடி, ராஜபாதையில் குப்பை கிடப்பதை பார்த்துள்ளார். உடனே, சற்றும் யோசிக்காத அவர், அதனை எடுத்து, பாதுகாவலரிடம் கொடுத்து, குப்பைத் தொட்டியில் போடச் சொல்லியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடியின் இந்த செயல், மத்திய அரசின் முதன்மை திட்டமான, தூய்மை இந்தியா திட்டத்திற்கு சான்றாக இருப்பதாக பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

venugopal s
ஜன 27, 2025 22:48

இந்த டெக்னிக் எல்லாம் அரதப் பழசு ஆகிவிட்டது, இனி புதிதாக ஏதாவது முயற்சி செய்யலாமே!


Kanns
ஜன 27, 2025 10:07

Publicity Stunt?


Barakat Ali
ஜன 27, 2025 09:05

குப்பை அங்கே எப்படி வந்துச்சு??


ngopalsami
ஜன 27, 2025 07:00

பிரதமரின் இந்த செயல் போற்றத்தக்கது. ஆனால், இந்த தருணத்தில் அவர் இப்படி செய்தது ஏற்புடையது அல்ல. இது உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. பிரதமர் மற்ற நேரத்தில் தனியாக செல்லும்போது வேண்டுமானால் இவ்வாறு செய்யலாம். ஒன்று, கண்டும் காணாமல் சென்றிருக்கலாம் அல்லது சைகை மூலம் அருகில் உள்ள ஒருவரிடம் கூறி குப்பையை அகற்றி இருக்கலாம். He curtailed his protocol.


அப்பாவி
ஜன 27, 2025 06:37

பிரதமர் எடுப்பதற்காக குப்பையைப் போடவருக்கு பத்மவிபூஷன் கொடுக்கப்படும்.


D.Ambujavalli
ஜன 27, 2025 06:09

சொல்வதற்கில்லை பாதுகாவலர் குப்பையை எடுக்கக் குனிந்தால் பிரதமரை தாக்க வந்தார் என்றுகூட அவரைப் பிடித்திருப்பார்கள் மாமல்லபுரம், டில்லி சேவை ளானே எங்கும் பிரதமர் வரும்போது மட்டும் குப்பை இருக்கிறது? ஒருவேளை அதிகாரிகளே இந்த செட்டப் செய்து விளம்பரத்துக்கு ஏற்பாடு செய்வார்களோ? அந்தப் பகுதித் தூய்மைப்பணியாளர், மேற்பார்வையாளர் எல்லாருமே இத்தகைய நிகழ்ச்சியின் போது சுத்தமாக வைக்க தனிப்பட்ட அக்கறை காட்டவில்லையா?


Mani . V
ஜன 27, 2025 05:55

அத்தனை அதிகாரிகளையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும். ராஜபாதையில் குப்பையை அகற்றாமல் ஒரு பிரதமர் அகற்றும் அளவுக்கா மெத்தனமாக இருப்பார்கள்? ஏதே, ஸ்டார்ட், கேமெரா, ரோலிங்க், ஆக்ஷனா?


Priyan Vadanad
ஜன 27, 2025 01:02

பிரதமர் போகும் பாதையில் குப்பையா? அதெப்படி? யார் போட்டிருப்பார்கள்? யாரோ தனக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும் என்று குப்பையை போட்டிருப்பார். முதலில் அவரை பிடிக்கவேண்டும்.


Kasimani Baskaran
ஜன 27, 2025 00:18

அப்படியே திராவிட குப்பைகளையும் தூக்கி வெளியே போட வேண்டும்.


மணியன்
ஜன 26, 2025 23:18

அது ராஜபாதை அல்ல,கடமை பாதை.


புதிய வீடியோ