உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., ஆதரவு பயங்கரவாத கும்பல் சிக்கியது: ஆயுதங்கள் பறிமுதல்

பாக்., ஆதரவு பயங்கரவாத கும்பல் சிக்கியது: ஆயுதங்கள் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தான் பயங்கரவாத மற்றும் கிரிமினல்களுடன் தொடர்புடைய 7 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.இந்தக் கும்பல் பாகிஸ்தானை சேர்ந்த ஷஜாத் பாட்டி மற்றும் அவனது உதவியாளர் அஜ்மல் குஜார் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இந்த கும்பல் செயல்பட்டு வந்துள்ளது. இருவரிடமும் இருந்து, இக்கும்பல் பஞ்சாப் வழியாக ஆயுதங்களை கடத்தி கொண்டு வந்து டில்லியில் விநியோகித்துள்ளனர். இக்கும்பலிடம் இருந்து 5 துப்பாக்கிகள், 41 தோட்டாக்கள், மொபைல் போன்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். சமூக வலைதளங்கள் மூலம் விரைவாக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி, இளைஞர்களை சேர்த்துள்ளனர். மேலும், போதை மருந்து மற்றும் ஆயுதங்களையும் கடத்தலிலும் ஈடுபட்டுள்ளனர்.பாகிஸ்தானில் இருக்கும் சதிகாரர்கள் டில்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக 7 பேர் கொண்ட கும்பல் டில்லி, காசியாபாத் உள்ளிட்ட பல முக்கியமான இடங்களை சென்று உளவுபார்த்ததுடன், முக்கியமான இடங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து பாகிஸ்தானிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இக்கும்பல் மீது ஏற்கனவே, கொலை,கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Barakat Ali
ஜூன் 17, 2026 09:07

தில்லி வரை பாகிஸ்தான் தனது சதியை, ஆயுத விநியோகத்தைச் செய்ய முடிகிறது ..... அரசியல் சாணிக்கியர், ராஜ குதந்திரர் என்ன செய்கிறாரோ ????


V S Venkataramani
ஜூன் 17, 2026 08:07

தேசதுரோகிகள் மனிதர்களே அல்ல. இவர்களுக்கு மனித உரிமைகள் எதுவும் பொருந்தாது. எனவே இவர்களை கலை எடுப்பதில் தவறில்லை.


சிவகுமார்
ஜூன் 17, 2026 08:02

சிறையை விட்டு வெளிய விட முடியாத படி சட்டம் கொண்டு வர வேண்டும்...


Kasimani Baskaran
ஜூன் 17, 2026 05:53

தீவிரவாதிகளுக்கு சிவில் சட்டம் பொருந்தாது. கள்ளக்குடியேறிகளாக வந்து தீவிரவாதம் செய்பவர்களுக்கு பிரியாணி போடாமல் சுட்டுத்தள்ளுவதுதான் தர்மம்.


Sampath
ஜூன் 17, 2026 04:18

ராகுல் கான் சொன்னாலும் இவர்களை ⁰விட கூடாது


Kumar Kumzi
ஜூன் 17, 2026 02:20

இந்த கற்கால மூர்க்க காட்டுமிராண்டிகளை சுட்டுக்கொல்லுங்கள்


RAJ
ஜூன் 16, 2026 21:26

இந்த மிருகங்களை நடுத்தெருவில் கல்லால் அடித்தே கொல்லவேண்டும் ..மிச்சம் மீதி உள்ள துரோகிகளையும் வேட்டையாட வேண்டும் … கருணை கட்டினால் பெரும் பிழை ஆகிவிடும்..


முக்கிய வீடியோ