உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  கர்நாடக கவர்னருக்காக போக்குவரத்து நிறுத்தம் எதிர்த்து போராடியவரால் பரபரப்பு

 கர்நாடக கவர்னருக்காக போக்குவரத்து நிறுத்தம் எதிர்த்து போராடியவரால் பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகாவில், கவர்னர் செல்வதற்கு வசதியாக, அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதை கண்டித்து, சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியவரால் பரபரப்பு ஏற் பட்டது. கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், நேற்று காலை மங்களூ ரில் இருந்து பெங்களூருக்கு விமானம் மூலம் எச்.ஏ.எல்., விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து லோக்பவன் வரை கவர்னர் கார் அணிவகுப்பு, எந்த தடையும் இன்றி செல்வதற்கு வசதியாக, 'ஜீரோ டிராபிக்' முறை செயல்படுத்தப் பட்டது. இதனால், பழைய விமான நிலைய சாலையில் அரை மணி நேரத்திற்கு மேல் வாகனங்களை, போக்குவரத்து போலீசார் நிறுத்தி வைத்தனர். இதனால், விரக்தியடைந்த ஒருவர், தன் காரில் இருந்து இறங்கி, சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். பாதுகாப்பு போலீசார் அங்கு வந்து, அந்த நபரை எழுந்து செல்லும்படி கூறினர். அந் த நபர், 'கவர்னர் மட்டும் தான் வி.ஐ.பி.,யா, நானும் வி.ஐ.பி., தான்; கவர்னர் விமானம் தரையிறங்குவதற்கு முன்பே, ஜீரோ டிராபிக்கை செயல்படுத்தி வாகனங்களை நிறுத்தி வைப்பது ஏன்? என் மனைவி கர்ப்பிணி. 'அவர் காருக்குள் அமர்ந்திருக்கிறார். அவருக்கு ஏதாவது நடந்தால் யார் பொறுப்பு ?' என, கேள்வி எழுப்பினார். அப்போது, துாரத்தில் கவர்னர் கார் அணிவகுப்பு வருவதை கவனித்த போலீசார், அந்த நபரை சமாதானம் செய்து சாலையில் இருந்து எழுப்பி அழைத்து சென்றனர். 'இனி இதுபோன்று செய்யக் கூடாது' என, எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தை, அங்கிருந்த வாகன ஓட்டிகள் மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, போராட்டம் நடத்திய நபருக்கு ஆதரவாக சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

aaruthirumalai
ஜூன் 02, 2026 16:03

கவர்னரா கடவுளா?


Bharathanban Vs
ஜூன் 02, 2026 15:23

காவல்துறையினர் பொதுமக்களை அதிகம் காக்க வைக்காமல் தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இங்கு கவர்னருக்கு அறிவுரை கூறும் பொதுமக்கள் நாம் எப்படி இருக்கிறோம்? சிக்னலை மதிப்பதில்லை, கோயில்களில் கூட பணம் கொடுத்து குறுக்குவழியில் தரிசனத்திற்கு செல்வது, பஸ், ரயில், ஏன் விமானத்தில் கூட வரிசையில் நிற்காமல் முண்டியடித்துக் கொண்டு ஏறி இறங்குவது....நாம் திருந்துவோம்... நாடு திருந்தும்


Ramesh Sargam
ஜூன் 02, 2026 12:41

நேர்மையாக போராட்டம் செய்த நபரை அங்கிருந்த ஒரு திருட்டு போலீஸ் இனி இது போல செய்யக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினாராம். இனி கவர்னர், முதலமைச்சர், மற்ற அமைச்சர்களுக்கு அப்படியாப்படா போக்குவரத்து நிறுத்தம் செய்யக்கூடாது என்று நான் அந்த திருட்டு போலீசை எச்சரிக்கிறேன்.


Ram
ஜூன் 02, 2026 12:07

இந்த முதல்வர்கள் கவர்னர்கள் எப்போது திருத்துவார்களோ


Mahesh Rajan
ஜூன் 02, 2026 10:38

நம் நாட்டில் இந்த சாபக்கேடான விஐபி கலாச்சாரம் எப்போது முடிவுக்கு வரும்? வெயிலிலும், மழையிலும் மக்கள் வியர்வை சிந்தி சம்பாதித்த வரிப்பணம், மனசாட்சியே இல்லாத ஒரு சிலரால் எந்தவித மனவருத்தமோ குற்றவுணர்வோ இன்றி ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.


அப்பாவி
ஜூன் 02, 2026 09:09

அப்பிடியே எலிகாப்டரில் போக வேண்டியது தானே


Ganesh
ஜூன் 02, 2026 09:01

மக்களின் வரியில் உழைப்பவர்கள் ஏன் காலை 7 மணிக்கு முன்னதாகவும் மாலை 5 மணிக்கு முன்னதாகவும் தங்கள் வேலையை முடித்து கிளம்ப கூடாது... இவர்கள் மக்களுக்கு ஏன் முன் மாதிரியாகவும் இருக்க கூடாது?


V S Venkataramani
ஜூன் 02, 2026 08:17

Everyone should start questioning this kind of actions.


VENKATASUBRAMANIAN
ஜூன் 02, 2026 08:05

இந்தியாவில் மட்டுமே இதெல்லாம் நடக்கும். இதை முதலில் நிறுத்த வேண்டும். அரசியல்வாதிகள் அட்டகாசம் அதிகம். அதிகாரிகள் இதற்கு உடந்தையாக உள்ளனர்.


V RAMASWAMY
ஜூன் 02, 2026 07:41

சிங்கப்பூரில் எந்த மந்திரிக்கும் நம் நாடு மாதிரி பாதுகாப்பு வாகன கூட்டங்களோ, போக்குவரத்து நிறுத்தமோ கிடையாது. மக்களுக்கு மந்திரிகளை வருகிறார்கள், போகிறார்கள் என்பதே தெரியாத வகையில். அவர்களும் சாதாரண மக்கள் மாதிரி தான் வாகனங்களில் செல்வர். எதற்கும் சிங்கப்பூர் ஒரு முன்மாதிரி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை