உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்கு வங்கத்தில் வன்முறையாக மாறிய வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் மூன்று பேர் பலி; பாதுகாப்புக்கு விரைகிறது ராணுவம்

மேற்கு வங்கத்தில் வன்முறையாக மாறிய வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் மூன்று பேர் பலி; பாதுகாப்புக்கு விரைகிறது ராணுவம்

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், வக்ப் வாரிய திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் தந்தை - மகன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கலவரம் நடந்த பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படைகளை நிறுத்தும்படி கொல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் சம்சர்கஞ்ச், ஜாங்கிபூர் உள்ளிட்ட பகுதிகளில், மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வக்ப் வாரிய திருத்த சட்டத்துக்கு எதிராக, நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது. இதற்கு எதிராக மற்றொரு தரப்பினரும் போராட்டத்தில் குதித்தனர். இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், போலீஸ் வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் தீக்கிரையாகின. பாதுகாப்பு படையினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதோடு, பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த கலவரம், மால்டா, ஹூக்ளி, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களிலும் எதிரொலித்தது. தொடர்ந்து, இந்த மாவட்டங்களில் உள்ள முக்கிய சாலைகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன.இந்நிலையில் முர்ஷிதாபாதில் நிகழ்ந்த வன்முறையில், மூன்று பேர் உயிரிழந்தனர். இதில், ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்சர்கஞ்ச் பகுதியில், தந்தை - மகனை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர். கலவரத்தை தொடர்ந்து, முர்ஷிதாபாதின் ஜாங்கிபூர் உள்ளிட்ட பதற்றமான பகுதிகளில், மத்திய பாதுகாப்பு படைகளை நிறுத்தும்படி கொல்கட்டா உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.இந்த கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்றும், சமூக ஊடகங்களில் பரவிய வதந்தியே வன்முறைக்கு காரணம் என்றும், போலீசார் தெரிவித்துள்ளனர். சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட மம்தா தவறி விட்டதாக, எதிர்க்கட்சியான பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்கிடையே, வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் உனகோடி மாவட்டத்தில், வக்ப் திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி நேற்று நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில், 18 போலீசார் காயமடைந்தனர். எதற்கு இந்த கலவரம்?வக்ப் வாரிய திருத்த சட்டத்தில், எங்களது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டேன். இந்த சட்டத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. மேற்கு வங்கத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்படாது. பின், இந்த கலவரம் எதற்காக?- மம்தா பானர்ஜிமேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Gopal
ஏப் 13, 2025 20:08

மிக கேவலம். ஒரு கையாலாகத முதல் அமைச்சர் தன் மக்களை காக்க தெரியாத அல்லது காக்க மறுத்த மிக கேவலமான ஒரு நிகழ்வு. இவள் ஒரு சட்ட மன்ற உறுப்பினராக இருக்க கூட தகுதி இல்லாத நபர்.


Sridhar
ஏப் 13, 2025 13:11

இதற்குத்தான் 1947 லேயே முழுவதுமான மக்கள் பரிமாற்றம் நடக்கவேண்டும் என விசயமறிந்தவர்கள் வற்புறுத்தினார்களோ? நம் துரதிர்ஷ்டம் காந்தி போன்றவர்கள் குட்டையை குழப்பி மதச்சார்பின்மைனு ஏதேதோ பேசி இந்திய தேசத்திற்கு மாபெரும் தீங்கை இழைத்துவிட்டு சென்றுவிட்டார்கள். முந்தய வரலாற்றை அறிந்தவர்கள் தொலைநோக்கு பார்வை உடையவர்களாக இருந்திருந்தால், சிறுபான்மையின மக்களுக்கு தனி நாடு கொடுப்பதென்று முடிவானபிறகு அவர்களை அவர்களுடைய நாட்டில் அவர்கள் இஷ்டம்போல் வாழ்வதற்கு வழிவகை செய்து கொடுத்திருக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு அவர்கள் இந்தியாவிலேயே இருக்கட்டும் என்று சொல்லி இன்று அவர்களுக்கு எவ்வளவு துன்பம் பாருங்கள் நடுரோட்டில் நமாஸ் செய்யமுடியவில்லை, வக்ப் சொத்து என்று நிலங்களை சொந்தம் கொண்டாட முடியவில்லை இப்படியே சென்றால் என்றைக்குமே சிறுபான்மையினராக இருக்கவேண்டியதுதானா? இந்தியாவை இஸ்லாம் வசம் கொண்டுவருவது முடியாத கனவாகிவிடுமே னு எண்ணற்ற கவலைகளுக்கு அவர்கள் உள்ளாக்கப்பட்டதின் வெளிப்பாடே இக்கலவரங்கள். இதுவே இந்தியா முற்றிலும் ஹிந்துக்கள் நாடாக இருந்திருந்தால், இத்தனை மதக்கலவரங்கள் நடந்திருக்காது. நாடும் அரசியலும் மற்றபல ஆக்கபூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்தி வேகமாக முன்னேறியிருக்கலாம். ஏன் பாகிஸ்தானுமே கூட முன்னேறியிருக்கும். நாடு இன்று தத்தளிப்பதற்கு முழுமுதல் காரணம் காந்தியும் நேருவும்தான் என்பதில் சந்தேகமே இல்லை.


Rasheel
ஏப் 13, 2025 11:49

பெண்களுக்கும் தாழ்ந்த சாதி இஸ்லாமியர்க்கும் இந்த சட்டம் உதவி செய்கிறது. ஆனால் அங்கே பங்களாதேஷிகள் ஹிந்துக்களை அவர்கள் வீடுகளில் இருந்து விரட்டும் நிலை தொடர்கிறது.


vinoth kumar
ஏப் 13, 2025 01:12

இந்த புதிய சட்டத்தால் பயனடையப்போவது ஏழை இஸ்லாமியர்களே, பெரும்பாலான வஃப்பு சொத்துக்கள் உயர் சாதி இஸ்லாமியர்களான அஷ்ரப் களிடம் உள்ளது, அதிலிருந்து வரும் வருமானம் அனைத்து இஸ்லாமியர்களிடம் சென்றடைவதில்லை . பெரும்பாலான இஸ்லாமிய தலைவர்களும் , அரசியல் கட்சி சாராத இஸ்லாமியர்களும் ஆதரிக்கவே செய்கிறார்கள். பி ஜெ பி ஐ எதிர்ப்பதற்காக மட்டுமே ராகுல், ஸ்டாலின் , மம்தா போன்றோர் அப்பாவி இஸ்லாமியர்களை தூண்டிவிடுகிறார்கள்.


முக்கிய வீடியோ