உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிசம்பர் 4ல்., விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.,!

டிசம்பர் 4ல்., விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.,!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவன செயற்கைக் கோளான ப்ரோபாவை சுமந்தபடி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து டிச.,4ல் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் விண்ணில் பாய்கிறது.விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ, நம் நாட்டுக்கு தேவையான செயற்கைக்கோள்கள் மட்டுமின்றி, வர்த்தக ரீதியாக வெளிநாடுகளுக்கும் செயற்கைக்கோள்களை ஏவி வருகிறது. அந்த வகையில், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவன செயற்கைக் கோளான ப்ரோபாவை டிச.,4ல் விண்ணில் செலுத்துகிறது. இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., சி 59 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து இந்த செயற்கைக்கோள் ஏவப்படுகிறது.மொத்தம் 1800 கிலோ எடையுள்ள ப்ரோபா செயற்கைக் கோள், சூரியனை சுற்றியுள்ள வளிமண்டலத்தில் ஆய்வு செய்வதற்காக, ஐரோப்பிய விண்வெளி மையத்தால் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் ஏவப்படும் நிகழ்ச்சியை நேரில் காண விரும்புவோர், இன்று 28ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
நவ 28, 2024 22:02

வாழ்த்துக்கள். அடுத்தமுறை விண்ணில் செலுத்தும்போது திமுகவினருக்கு தெரியாமல் செலுத்தவும். தெரிஞ்சா? தெரிஞ்சா ஒரு கலைஞர் கருணாநிதி சிலையை கொடுத்து, விண்ணில் வைக்க சொல்வார்கள்


raja
நவ 28, 2024 15:44

மேக் இன் இந்தியா... பிரதமர் மோடியின் சாதனை...எல இறநூறு உடன் பருப்புகளே சிங்கம்டா மோடி..


MARI KUMAR
நவ 28, 2024 15:17

இஸ்ரோவின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்


முக்கிய வீடியோ