உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீடு வீடாக சென்று போதைப்பொருள் பயன்படுத்துவோர் கணக்கெடுப்பு: பஞ்சாப் அரசின் புது திட்டம்

வீடு வீடாக சென்று போதைப்பொருள் பயன்படுத்துவோர் கணக்கெடுப்பு: பஞ்சாப் அரசின் புது திட்டம்

சண்டிகர்: மாநிலம் முழுவதும் போதைப்பொருள் பயன்படுத்துவோர் குறித்த கணக்கெடுப்பை நடத்த பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. பஞ்சாப்பை ஆளும் ஆம்ஆத்மி அரசு, 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் இன்று தாக்கல் செய்தது. மொத்தம் ரூ.2.36 கோடி மதிப்பிலான இந்த பட்ஜெட்டில் ரூ.5,698 கோடி மருத்துவ திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த பட்ஜெட்டில் எந்த புதுவிதமான வரிகளும் சுமத்தப்படவில்லை. அதேபோல, தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு ரூ.1,000 உதவி தொகை குறித்தும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேவேளையில், மாநிலம் முழுவதும் போதைப்பொருள் பயன்படுத்துவோர் குறித்த கணக்கெடுப்பை நடத்த பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் ஹர்பல் சிங் சீமா, தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது; பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சிக்கும், செழிப்புக்கும் போதைப்பொருள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. எனவே, போதைப்பொருளுக்கு எதிராக மிகப்பெரிய போரை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். ஆயுதங்கள் மற்றும் படைகளின் மூலமாக இந்தப் போரை நாங்கள் முன்னெடுக்கவில்லை. தரவுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக, போதைப் பொருள் பயன்படுத்துவோர் குறித்த கணக்கெடுப்பை அடுத்த நிதியாண்டில் நடத்த முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு வீடாகச் சென்று, போதைப் பொருளை பயன்படுத்துவர்களின் விபரங்களை சேகரிக்க உள்ளோம். போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ஒரு பயனுள்ள மற்றும் அறிவியல் பூர்வமான உத்தியை உருவாக்க இந்தத் தரவுகள் பயன்படுத்தப்படும், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

m.arunachalam
மார் 26, 2025 19:54

நல்ல முயற்சி . சிறார்களுக்கு நன்றாக உணரும் விதத்தில் குறும்படம் காண்பித்து நெறிப்படுத்த வேண்டும் . புல்டோஸர் பயன்பாட்டை நிறுத்திவிடாதீர்கள் .


Ramesh Sargam
மார் 26, 2025 19:10

போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் எங்கேயாவது தான் போதைப்பொருள் பயன்படுத்துகிறேன் என்று ஒப்புக்கொள்வானா? கணக்கெடுப்பெல்லாம் ஒரு பித்தலாட்டம்.


Narasimhan
மார் 26, 2025 18:37

முதல்வர் வீட்டிலிருந்து தொடங்குங்கள்


எவர்கிங்
மார் 26, 2025 18:30

பஞ்சாப் முதல்வரே ஒரு போதை பேர்வழி- விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டவன்


Sivagiri
மார் 26, 2025 18:24

கவர்ன்மெண்டே , வியாபாரம் பண்ணலாம்னு ஏதாவது ஐடியா வச்சிருப்பாங்க போல . .. .. திராவிஷ மாடல் விரைவில் டாஸ்மாக்கிலும் , கிடைக்கலாம் . . .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை