உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.30 லட்சம் ஹவாலா பணம், ஹெராயின் பறிமுதல்; பஞ்சாப் போலீசார் நடவடிக்கை

ரூ.30 லட்சம் ஹவாலா பணம், ஹெராயின் பறிமுதல்; பஞ்சாப் போலீசார் நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: பஞ்சாபில் ரூ.30 லட்சம் ஹவாலா பணம் மற்றும் ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பஞ்சாபில் எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. அதன் படி, பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் தலைமையிலான போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.அப்போது, சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதற்காக ரஞ்சித் சிங், குருதேவ் சிங் மற்றும் சைலேந்திர சிங் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 500 கிராம் ஹெராயின், துப்பாக்கி மற்றும் ரூ.33 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் பின்னணியில் இருப்பது யார் என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை