உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு பங்களாவை காலி செய்ய ராப்ரி தேவிக்கு 7 நாள் கெடு

அரசு பங்களாவை காலி செய்ய ராப்ரி தேவிக்கு 7 நாள் கெடு

பாட்னா: முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி வரும் 29ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் பீஹார் அரசு சொத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு எச்சரித்துள்ளது.பீஹாரில் முன்னாள் முதல்வர்களுக்கு அரசு ஒதுக்கியுள்ள பங்களாக்களில், அவர்கள் தங்கள் ஆயுள் முழுதும் தங்கியிருக்கலாம் என சட்டம் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவியை பாட்னா சர்குலர் சாலையில் உள்ள பங்களாவில் இருந்து காலி செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.கடந்த 20 ஆண்டுகளாக பாட்னாவில் உள்ள 10 சர்குலர் ரோடு அரசு பங்களாவில் ராப்ரி தேவி குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில்தற்போது பாஜ தலைமையிலான புதிய அரசு, இந்த இல்லத்தை மாநில அமைச்சர் நந்த கிஷோர் ராமுக்கு ஒதுக்கி உத்தரவிட்டது. நோட்டீஸ் அனுப்பியும் அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து வருகிறார்.இந்நிலையில் நேற்று முன்தினம்( ஜூன் 22) மாநில கட்டுமானத்துறை சார்பில், ராப்ரி தேவிக்கு அரசு பங்களாவை காலி செய்ய 7 நாள் கெடு விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கெடு ஜூன் 29 அன்றுடன் நிறைவு பெறுகிறது.இந்த பங்களாவை காலி செய்ய வேண்டும் என பல முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இனியும் காலி செய்யாவிட்டால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராப்ரி தேவிக்கு ஜார்டின்ஜ் சாலையில் குடியிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளதும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Saran
ஜூன் 26, 2026 09:56

One of the ugliest family in india


மாட்டுத்தீவன ஊழல் பெருச்சாளி
ஜூன் 26, 2026 08:25

இவரை கேவலமாக அடிச்சு கழுதையில் ஏற்றி கரும்புள்ளி செம்புள்ளி அணிவித்து தெருத்தெருவாக இழுத்துச்செல்ல வேண்டும்


Ramesh Sargam
ஜூன் 25, 2026 22:37

இவர்கள் சட்டத்திற்கு புறம்பாகதான் நடந்துகொள்வார்கள் போல தெரிகிறது. கடைசி நேரத்திலாவது திருந்தி வாழவேண்டும் என்கிற எண்ணமே இவர்களுக்கு கிடையாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை