உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காம் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகள்: கல்விச்செலவை ஏற்கிறார் ராகுல்!

பஹல்காம் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகள்: கல்விச்செலவை ஏற்கிறார் ராகுல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தானின் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்விச்செலவை காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் ஏற்பதாக அறிவித்துள்ளார்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். பின்னர், பாகிஸ்தானுக்கு ஆப்பரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தக்கம் பாடம் புகட்டியது. பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் முகாம்கள் துல்லியமாக அழிக்கப்பட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9as4g3l6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது காஷ்மீரில் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல் முடிவு செய்துள்ளார். இதனை ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா உறுதி செய்தார்.இது குறித்து, நிருபர்களிடம் தாரிக் ஹமீத் கர்ரா கூறியதாவது: இந்திய- பாகிஸ்தான் சண்டையில், பூஞ்ச் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ராகுல் ஏற்றுள்ளார். இந்த உதவித் தொகைக்கான முதல் தவணை நாளை வழங்கப்படும். குழந்தைகள் பட்டம் பெறும் வரை இந்த உதவித் தொகை தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Anu Sekhar
ஜூலை 29, 2025 18:55

பாக்கிஸ்தான் அனுதாபி க்கு என்ன ஞானஉதம்? எலெக்ஷன் நினைவு வருகிறதா?


Nagarajan D
ஜூலை 29, 2025 18:30

ஏதாவது செய்து பதவியை பிடித்துவிட வேண்டும் அங்கிள் சாம் வேற சொல்லிட்டே இருக்கான் மோடி ஆட்சியிலிருக்கும் வரை காந்திகளும் நேஹ்ருகளும் கல்லாகட்டமுடியாது எப்படியாவது ஆட்சிக்கு வரவழிய பாரு தத்தி காந்தியே என்று இடித்துரைத்துள்ளார் இவர என்னென்னவோ செய்து பாக்குறார் எல்லாமே பிஜேபி கு சாதகமாவே போகுது


Rajan A
ஜூலை 29, 2025 18:13

உங்க இரண்டு பேரையும் தத்து எடுத்து தவிக்கும் கட்சி போல ஆக மாட்டீர்கள். அந்த இரண்டு குழந்தைகள் மூளை வளர்ச்சி உள்ளவர்கள்


A1Suresh
ஜூலை 29, 2025 17:31

ராகுலுக்கு சீனாவிடமிருந்து காசு வருகிறது. ஜார்ஜ் சோரஸ்ஸிடமிருந்து காசு வருகிறது. அதனை ஓட்டுவங்கிக்காக பயன்படுத்துகிறார். அதிலே விளம்பரம் வேறு


என்றும் இந்தியன்
ஜூலை 29, 2025 16:48

ராவுல் வின்சி பப்பு என்றால் சுத்தமாக அறிவென்பதே இல்லாத ஜென்மமா என்ன??சுற்றுலா செல்பவன் ஏழையல்ல???இது கூடத்தெரியாதா உனக்கு???சாப்பாட்டுக்கு சிங்கி அடிக்கும் கூட்டத்திற்கு உதவு அது ஓகே. இதெல்லாம் தேர்தல் வருவதையொட்டி இந்த டப்பா டப்பா டப்பா அடித்தல் எல்லாம்???எல்லாம் அவனுடைய ஐடி விங் சொல்லிகொடுத்திருக்கும் இப்படி செய்தால் ஒட்டு எண்ணிக்கை அதிகமாகும் இதை நாம் டாம் டாம் டாம் என்று டப்பா அடிக்கலாமென்று


Karthik Madeshwaran
ஜூலை 29, 2025 18:12

தலைப்பு செய்தி பாத்து கருத்து ? உள்ள செய்தி என்னனு படிக்கிறதே இல்ல. பாஜகவினர் என்பதற்கு இன்னொரு உதாரணம் மக்களே. நீங்களே கண்ணாடி பாத்து திட்டிக்கோங்க.


S.V.Srinivasan
ஜூலை 29, 2025 16:31

வாழ்க்கையில் முதல் முறையாக நல்லது செய்ய நினைக்கிறார் . எந்த அளவுக்கு ஒர்க்அவுட் ஆகுதுன்னு பார்ப்போம். வெறும் விளம்பரத்தோட நிக்காம இருந்த சரி.


கூத்தாடி வாக்கியம்
ஜூலை 29, 2025 16:07

சுட்டது தீவிரவாதி தான்னு கான்போர்ம் பன்றதுக்கு தான் இந்த பில்ட் அப் பண்ணஏங்களா அப்பீசர்


Ganapathy
ஜூலை 29, 2025 15:28

மொதல்ல 199 கோடி வரிபாக்கியை கட்டு.


ஆரூர் ரங்
ஜூலை 29, 2025 15:12

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காஷ்மீர் ஹிந்துக்களை பாக் முஸ்லிம் பயங்கரவாதிகள் படுகொலை செய்த உங்கள் ஆட்சிக் காலத்தில் இந்தக் கருணை எங்கே போயிருந்தது?.


Shankar
ஜூலை 29, 2025 14:40

அந்த குழந்தைகளை படிக்கவைக்க நிறைய பேர் இருக்காங்க. முதலில் நீங்கள் உங்கள் கட்சி அரசுக்கு கட்டவேண்டிய வரி பாக்கியை கட்டுங்கள்.