உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடலில் சுரங்க பணி : ரத்து செய்ய மோடிக்கு ராகுல் கடிதம்

கடலில் சுரங்க பணி : ரத்து செய்ய மோடிக்கு ராகுல் கடிதம்

புதுடில்லி 'கேரளா, குஜராத் மற்றும் அந்தமான் - நிகோபார் தீவுகளில் நடத்த உள்ள, கடல் சுரங்கப் பணிகளுக்கான டெண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் கடிதம் எழுதியுள்ளார்.பிரதமர் மோடிக்கு, காங்., - எம்.பி., ராகுல் எழுதியுள்ள கடிதம்:கேரளா, குஜராத் மற்றும் அந்தமான் - நிகோபார் தீவுகளில், கடல் படுகையில் கனிமங்களை வெட்டி எடுப்பதற்கான சுரங்கப் பணிகளுக்கான டெண்டர் விடுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டங்களை செயல்படுத்த, தனியாருக்கு அனுமதி வழங்கக் கூடாது.ஏற்கனவே அந்த பகுதி மக்கள், இந்த திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் இந்த திட்டத்தால், லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, அப்பகுதி மக்களிடம் கலந்தாலோசிக்காமல், சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு செய்யாமல், எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்கக் கூடாது.கேரளாவின் கொல்லம் அருகே கடலில் மணல் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல, அந்தமான் - நிகோபார் தீவுகளின் கடலோரங்களிலும் கனிமங்களை வெட்டி எடுக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடலோரங்களில் செய்யப்படும் மாற்றத்தால், சூறாவளி போன்ற பாதிப்புகள் ஏற்படும் நிலையில், மத்திய அரசின் முடிவு, இந்த பகுதியில் சரிசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, கடலில் திட்டமிடப்பட்டுள்ள டெண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

கண்ணன்
ஏப் 01, 2025 11:49

இந்த அக்கரை டி ஆர் பாலு சேது சமுத்திரத்திட்டம்கொண்டுவந்த போது எங்கே போயிருந்ததாம்?!


c.mohanraj raj
ஏப் 01, 2025 08:41

கன்னியாகுமரியில் திருடு போகும் திருட்டுத்தனமாக கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படும் கனிம வளத்தை தடுக்கலாமே நம்ம ராகுல்


Kasimani Baskaran
ஏப் 01, 2025 04:02

தமிழகத்தில் வந்து மன்னள்ளக்கூடாது என்று குறுக்கே நிற்கவேண்டியதுதானே...


தாமரை மலர்கிறது
ஏப் 01, 2025 02:25

இந்தியா பணக்கார நாடாக்கணும்ன்னா கடலுக்கடியில் கனிமவளங்களை வெட்டி எடுக்கணும். அதை தடுக்க நீ யார்?


Appa V
ஏப் 01, 2025 02:23

கொஞ்ச நாள் சீனாவில் தங்கி இருக்க வேண்டும் ..தாய்லாந்து பூகம்பத்தை நேரில் பார்த்து குழம்பிட்டாரா ?


வாய்மையே வெல்லும்
மார் 31, 2025 23:54

சம்பந்தமே இல்லாம பெருச்சாளி கூவுது என்றால் எவனோ இவரை ஏவிவிடுகிறார் என எடுத்து கொள்ளாமல் இருக்க முடியாது.. எடுப்பார் கைப்பிள்ளை கமிஷன் கரப்ஷன் ஏஜென்ட் ராவுல்


A Viswanathan
ஏப் 01, 2025 12:58

அந்த டெண்டரை இவருடைய குடும்பத்திற்கு கொடுங்கள்.பிரச்சனை முடிந்தது.


சமீபத்திய செய்தி