உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்

பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும்,'' என பிரதமர் மோடிக்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்தனர். இது நாட்டு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த சம்பவத்திற்கு அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.இந்நிலையில் பிரதமர் மோடிக்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் அனைத்து இந்தியர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த முக்கியமான தருணத்தில், நாம் அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்பதை இந்தியா காட்ட வேண்டும். இதற்காக பார்லிமென்டின் இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. அங்கு, நமது ஒற்றுமையை மக்கள் பிரதிநிதிகள் எடுத்துக் காட்ட முடியும். எனவே விரைவில் பார்லிமென்ட்டின் சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Balasri Bavithra
ஏப் 30, 2025 15:25

உளவாளி ..பப்பு சோனியா இந்தியர்கள் இல்லை .முதலில் சுப்ரீம் கோர்ட் உள்ள ஊழலை ஒழிக்க வேண்டும்


Jawahar
ஏப் 30, 2025 06:55

The demand has been made by Pappu to have a sound sleep in Parliament as done by him regularly


Barakat Ali
ஏப் 29, 2025 21:44

கடிதத்தின் பின்னணி என்ன ???? 1. ஷெஹ்ஜதிக்கு பாகிஸ்தானில் சொத்து பத்து இருக்கு .... அதுக்கு ஆபத்து வந்துரக்கூடாது .... 2. இந்தியாவில் எதிர்க்கட்சிகள் அமைதியை விரும்புகிறோம், பாகிஸ்தானுடன் போரிட விரும்பவில்லை என்று காட்ட .... 3. அவையில் விவாதித்தால் அரசின் பலவீனங்களை புரிந்து கொள்ளவும், வாயைக் கிளறி என்ன திட்டம் வைத்துள்ளார்கள் என்று ஓரளவாவது அறிந்து பாகிஸ்தானிடம் போட்டுக் கொடுக்கலாம் ...... 4. நாங்கள் ஒன்றாக இல்லை, நீங்கள் நினைத்ததை இந்தியாவில் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று பாகிஸ்தான் ராணுவம், ஐ.எஸ்.ஐ மற்றும் பயங்கரவாதிகளுக்கும் தெரிவிக்க அவையைப் பயன்படுத்தும் உத்தி .....


GMM
ஏப் 29, 2025 20:41

ஒற்றுமையை காட்ட இரு அவைகளை ஏன் கூட்ட வேண்டும்.? பிரச்சினை உருவாக்க?அவை மசோதா விவாதிக்கும் இடம். ஒற்றுமை காட்ட பல வழிகள் உண்டு. நீரெல்லாம் ஒரு எதிர்கட்சி தலைவர் பதவி மிக முக்கியமானது. மொட்டை மனு? கடிதத்தில் கோப்பு எண் இல்லை. எந்த இடத்தில் கையொப்பம் இட்டார் என்ற விவரம் இல்லை . சில ஆண்டுகளுக்கு பின், தேவைபட்டால் எப்படி மனு நகலை கண்டு பிடிப்பார்? ஒரு அரசு கிளார்க் தெரிந்த விவரம் கூட தெரியவில்லை. எல்லாம் நம் தலையெழுத்து. பென்சன் வேறு தனி.


Bhakt
ஏப் 29, 2025 19:39

எந்த வெள்ளைக்காரர் லோடயோ பாரதம் சுமக்கிறது. தலை எழுத்து.


Naga Subramanian
ஏப் 29, 2025 18:21

சொந்த நாட்டின் மீது விசுவாசம் இல்லாத இவருக்கு, பாகிஸ்தான் விவகாரம் தொடர்பான எந்த ஒரு சந்திப்பிலும் அனுமதிக்கக் கூடாது.


sankaranarayanan
ஏப் 29, 2025 18:20

பார்லியாமெண்டு நடக்கும்போது இவர் காணாமலே போயிடுவார் அக்கம் பக்கம் கேட்டு தெரிந்தால் இவர் தாய்லாண்டு சென்ரிரூக்கிறார் அல்லது பாட்டியைப்பார்க இத்தாலி போயிருக்கிறார் என்றே சொல்வார்கள் அதை எல்லாமே விட்டுவிட்டு எதோ தேசாபிமானி போல வேஷம் போட்டு பாராளமுற்றத்தை கூட்ட இவர் என்ன சொல்வது அது பற்றி பிரதமர் மோடிக்கு எப்போது என்று கூட்டவேண்டும் என்று முழுக்க தெரியும் கூட்டுவார் பொறுத்திரு


Kumar Kumzi
ஏப் 29, 2025 18:15

கோமாளி பப்புவுக்கு ஓசியில் சமோசா தின்ன ஆசை வந்துருச்சி போல


Barakat Ali
ஏப் 29, 2025 22:05

அவன் பத்து சமோசா தின்னுட்டு ஒழியட்டும் .... காரணம் அதுவல்ல, பாகிஸ்தானுக்கு நமது உத்தேசங்கள், நகர்வுகளைத் தெரிவிக்க காங்கிரஸ் இவர் தலைமையில் போராடுகிறது ....


Rajah
ஏப் 29, 2025 18:09

KhanCross பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் வேண்டும் என்பது போர் வராமல் தடுப்பதற்கே.


Narasimhan
ஏப் 29, 2025 17:51

இவரை காங்கிரஸ் காரர்கள் இன்னும் நம்புகிறார்கள் என்றால் அவர்கள் எப்பேர்ப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று யோசித்து பாருங்கள்


புதிய வீடியோ