உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் குடியுரிமை வழக்கு : மத்திய உள்துறைக்கு 4 வார கால அவகாசம்

ராகுல் குடியுரிமை வழக்கு : மத்திய உள்துறைக்கு 4 வார கால அவகாசம்

புதுடில்லி: காங்., எம்.பி.ராகுல் மீதான இரட்டை குடியுரிமை வழக்கில் உள்துறை அமைச்சகம் 4 வாரங்களுக்கு முடிவு எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் அலகாபாத் ஐகோர்ட் லக்னோ கிளை உத்தரவிட்டுள்ளது.லோக்சபா எதிர்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்.பி., ராகுலின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி ஏற்கனவே பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி 2019-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து தெளிவுப்படுத்துமாறு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் இதே போன்று கர்நாடகா பா.ஜ.,வைச் சேர்ந்த பிரமுகர் உபி. மாநில அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளையில் தாக்கல் செய்த மனுவில், காங்., எம்.பி., ராகுல், இந்திய குடியுரிமை மற்றும் பிரிட்டன் குடியுரிமை என சட்டவிரோதமாக இரட்டை குடியுரிமைவைத்துள்ளார். இந்திய குடியுரிமை சட்டத்தின்படி, அவர் இந்திய குடிமகன் என்ற தகுதியை இழந்துவிட்டார். விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் விசாரித்து ராகுலின் குடியுரிமையை ரத்து செய்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேணடும் இவ்வாறு அவர் கூறினார்.இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதில் மனுவில் எட்டு வார கால அவசியம் கோரியது.. இதனை ஏற்க மறுத்த நீதிபதி முடிவு எடுத்து 4 வார கால அவகாசம் அளித்து வழக்கின் விசாரணையை ஏப்.21-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

S.V.Srinivasan
மார் 27, 2025 09:14

தப்பு தவறி அடுத்த தேர்தலில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்து நீ பிரதமரும் ஆகி விட்டால் இந்தியா என்ன ஆகும் என்று மக்கள் அஞ்சுகிறார்கள்


Ravi Kulasekaran
மார் 25, 2025 04:26

பாஜகவும் கூட்டு களவாணிகள் உண்மையை கூற என்ன தயக்கம்


Kumar Kumzi
மார் 24, 2025 21:33

இவரது உடம்பில் ஓடுவது இத்தாலி ரெத்தம் அதனால் இத்தாலிக்கு நாடு கடத்துங்கள்


ஆரூர் ரங்
மார் 24, 2025 21:04

தனது முக்கிய பிரச்சார பீரங்கி மீது நடவடிக்கை எடுக்குமளவுக்கு பிஜெபி அறிவற்ற கட்சியல்ல. தனது கையாலேயே தனது கண்ணைக் குத்தி கொள்ள நினைக்காது.


Ramesh Sargam
மார் 24, 2025 20:49

எதற்கு அவகாசம். எத்தனை நாள் இப்படி வழக்கு தள்ளிபோட்டுக்கொண்டிருக்கும் இந்த நீதிமன்றங்கள். Justice delayed is justice denied என்று நீதிமன்றங்களுக்கு தெரியாதா?


Ganapathy
மார் 24, 2025 20:44

பாஜக இவருக்கு உதவுவதற்காக எட்டு வார அவகாசம் கேட்கிறதா?


Anantharaman Srinivasan
மார் 24, 2025 20:42

2019 ல் சுப்ரமணியசாமி தொடர்ந்த வழக்கு. இரட்டை குடியுரிமை வைத்துள்ள ராகுலை இன்னும் ஏதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் காப்பாற்றி வருகிறது.


sankaranarayanan
மார் 24, 2025 20:25

இரட்டை குடியுரிமை நமது நாட்டில் கிடையாது என்றே அரசியல் சாசனத்தில் இருப்பது முற்றிலும் இந்த பாராளுமன்ற நபருக்கு நன்றாகவே தெரியும் தெரிந்துதான் பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளார் யார் தன்னை என்ன செய்ய முடியும் என்ற மமதை எப்படி தேர்தல் ஆணையம் முதலில் இவரை தேர்தலில் போட்டியிட அனுமதகித்ததோ அதுவே தெரியவில்லை இப்படி இவரை இப்போது நீதி மன்றம் அனுமதித்தால் இதுபோன்று இனி எதிர்காலத்தில் பலபேர் இரட்டை குடியிருமை பெற்று இங்கே தங்க வழி வகுக்கும்


வாய்மையே வெல்லும்
மார் 24, 2025 20:25

நல்லா பாருங்க கருப்பு அங்கி ஆபீஸர்ஸ்.. ராவுளு கிட்ட பட்டாயா குடியுரிமையும் இருக்கப்போவுது . ஐயா அடிக்கடி அங்கு விசிட் அடிக்கிறார்.. எங்களுக்கு சந்தேகம் வருது..அவரை கூடிய விரைவில் கிருஹஸ்தராக செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எவ்வளவு நாள் தான் இங்குட்டும் அங்குட்டும் அலைஞ்சுட்டு இருப்பாரு.. அவருக்கும் வயசாகுது இல்ல. புள்ளகுட்டிய பார்க்கவேண்டியிருக்கும். இத்யாதி இத்யாதி . ஹஹ்ஹஹ்ஹ அப்படியே பிரசுரிக்கவும்


rama adhavan
மார் 24, 2025 20:24

ஏன் ராகுல் காந்தியே உண்மை நிலையை நீதிமன்றத்திற்கு தெளிவு படுத்தலாமே? தும்பை விட்டு வாலை ஏன் நீதிமன்றம் பிடிக்கிறது? அவரும் தனக்கு சம்பந்தம் இல்லாதது போல் சும்மா இருக்கிறாரே? காங்கிரசும் சும்மா இருக்கிறதே? ஒரே மர்மம்.


புதிய வீடியோ