உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிரம்ப் விவகாரத்தில் ராகுல் பிடிவாதம் முதிர்ச்சியற்றது

டிரம்ப் விவகாரத்தில் ராகுல் பிடிவாதம் முதிர்ச்சியற்றது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை மூண்டது. போரை நிறுத்தும்படி அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தின. இறுதியில், இரு நாடுகளுக்கு இடையிலான போர் முடிவுக்கு வந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் தரப்பில் போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த விவகாரத்தில், அமெரிக்க அதிபரின் தலையீடு இருப்பதால், இது குறித்து பார்லி.,யில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. மழைக்கால கூட்டத்தொடரின் போது, லோக்சபாவில் நேற்று முன்தினம் பேசிய மோடி, 'இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில், எந்த உலக நாடுகளின் தலைவர்களின் தலையீடு இல்லை' என, அறிவித்தார். மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், 'பஹல்காம் தாக்குதல் நடந்த ஏப்., 22 - ஜூன் 17 வரை பிரதமர் மோடி - டிரம்ப் இடையே எந்த தொலைபேசி உரையாடலும் இல்லை' என பார்லி.,யின் இரு சபை களிலும் திட்டவட்டமாக தெரிவித்தார். இருப்பினும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், 'இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு பொய் சொல்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பொய் சொன்னார் என வெளிப்படையாக யாரும் கூறவில்லை' என, வாதிட்டு வருகின்றனர். இது ராகுலின் முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: போர் நிறுத்தத்தில் அமெரிக்க அதிபரின் தலையீடு இல்லை என ராணுவ அமைச்சர், வெளியுறவு அமைச்சர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் உறுதிபட தெரிவித்தும், ராகுல் மற்றும் எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தில் பிடிவாதம் பிடிக்கின்றனர். குறிப்பாக, ராகுலின் பேச்சு முதிர்ச்சியற்றது. பார்லிமென்டில், நட்பு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் அதிபரை பகிரங்கமாக பொய்யர் என பிரதமரால் எப்படி கூற முடியும். அந்நாட்டின் அதிபரை பொய்யர் என கூறுவது இயலாததாகும். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியிலும் இப்படிதான் உறவுகள் இருந்தனவா? வெளியுறவு கொள்கையில் நிதானத்தை கடைப்பிடித்தல் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

சிட்டுக்குருவி
ஜூலை 31, 2025 21:02

ராகுல் காந்தியை மக்கள் தவறாக புரிந்துகொண்டிருக்கின்றார்கள் .அவர் மஹாத்மா காந்திஜியைத்தான் பின்பற்றுகிகிறார் .மஹாத்மா காந்திஜி காங்கிரசின் வேலை சுதந்திரம் பெற்றவுடன் முடிந்துவிட்டது அதனால் காங்கிரசை கலைக்கவேண்டும் என்று விரும்பினார் .அதை நிறைவேற்றவே இவர் காந்தியாக பிறந்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்கிறார் .அதனால் அவரை வாழ்த்துங்கள் அவர் முயற்சியில் வெற்றிபெறவேண்டும் என்று .ஆனால் சுதந்திர நாட்டில் இரண்டாவது மாற்று கட்சி என்பது ஒன்று அவசியம் என்பதனால் மக்கள் இந்தியா முழுவதற்குமான தேசபற்றுமிக்க ,ஊழல் ,சிறுமைப்பாடு அற்ற தேச ஒற்றுமையே மூச்சாக கொண்ட ,ஒரு மாற்று அரசியல் கட்சியை உருவாகும் முயற்சியை முன்னெடுக்கவேண்டும் .நிர்வாகத்தில் நீதி,நேர்மை ,கொண்ட ஜாதி வேற்றுமைகளை வேரறுத்து ,இந்தியா முழுவதும் ஒரே ஜாதி அதுமனிதஜாதி என்ற தாரக மந்திரத்தை முன்னெடுத்துச்செல்வதாக இருக்கவேண்டும்.இப்போது முயற்சித்தால் அது இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் ஆலமரமாக வளர்ந்து தழைக்கவழியுண்டு .நாட்டிற்கும் மிகவும் அவசியம்.


Rajasekar Jayaraman
ஜூலை 31, 2025 20:47

முதலில் ஜார்ஜ் சோரஸ், இப்போ ட்ரம்ப்பின் ஊதுகுழல், சீன கைக்கூலி.


Nagarajan D
ஜூலை 31, 2025 14:34

இவனுக்கு வயதிற்கு தகுந்த முதிர்ச்சி எதிலே இருந்திருக்கிறது கிறுக்குத்தனமாக எதையாவது பேசுவது பிறகு நீதிமன்றத்தில் போய் மன்னிப்பு கேட்பது இவனுக்கு வாடிக்கையானது தான்


Balamurugan
ஜூலை 31, 2025 14:04

இவன் தேசத்துரோகி.


Ramesh Sargam
ஜூலை 31, 2025 13:34

ராகுலுக்கு எந்த விவகாரத்திலும் முதிர்ச்சியில்லை. வடிவேலு காமெடி மாதிரி - அவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்யா...


Ganapathy
ஜூலை 31, 2025 12:29

இவனது சிறுபிள்ளைத்தனமான கேனத்தனமான ரவுடி நடவடிக்கையால் மொத்த மக்களைவையும் செயலிழப்பதை தவிர்க்க இனி இவனது ஒவ்வொரு ஊழல்களையும் இனிவரும் தினங்களில் இரு அவையிலும் பாஜக விவாதிக்க வேண்டும்.


Ganapathy
ஜூலை 31, 2025 12:26

முன்பு சந்திரபாபு கொண்டு வந்த நம்பிக்கையிலாத் தீர்மானத்தின் மீது பேசி உளறி கொட்டி தேவையில்லாமல் ரஃபேல் வாங்கியதில் ஊழல் எனக் கூறி உடனடியாக பிரான்ஸிடமிருந்து கேவலமான வார்த்தைகளில் அதிகாரப்பூர்வமாக நடக்கையிலேயே திட்டு வாங்கியவர்தான். இன்னாள் மக்களை எதிர்கட்சி தலைவர்...அன்றும் அவர் பின்னால் இருந்தது சீனா...இன்றும் சீனாதான் இருக்கிறது.


visu
ஜூலை 31, 2025 12:25

ராகுல் ஒரு சாபக்கேடு


கண்ணன்
ஜூலை 31, 2025 12:08

அவருக்கு வயதில்தான் இனி முதிர்ச்சி ஏற்படும். மற்ற பட ஏதாவது நினைத்து ஏமாற வேண்டாம்


M Ramachandran
ஜூலை 31, 2025 12:03

அவர் பிறவி குணத்தை மாற்ற முயல்வதை ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை