உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாதுகாப்பு விதிமுறைகளை மீறுகிறார் ராகுல்: சிஆர்பிஎப் புகார்

பாதுகாப்பு விதிமுறைகளை மீறுகிறார் ராகுல்: சிஆர்பிஎப் புகார்

புதுடில்லி: '' வெளிநாடு பயணத்தின் போது, இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் காங்கிரஸ் எம்பி ராகுல், விதிமுறைகளை தொடர்ந்து மீறுகிறார்'', என சிஆர்பிஎப் புகார் கூறியுள்ளது.காங்கிரஸ் எம்பியும் லோக்சபா எதர்க்கட்சித் தலைவருமான ராகுல், 'Advnced Security Liaison ' உடன் கூடிய 'இசட் பிளஸ்' பாதுகாப்பில் உள்ளார். அவருக்கு உள்ள அச்சுறுத்தல் காரணமாக இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. அவருக்கு 24 மணி நேரமும், சிஆர்பிஎப் கமாண்டோக்கள் 10 பேர் மற்றும் போலீசார் உட்பட 36 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் ராகுல் அடிக்கடி வெளிநாடு செல்வது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் இத்தாலி, வியட்நாம், துபாய், கத்தார், லண்டன் மற்றும் மொரீஷியசுக்கு பயணம் சென்ற போது ராகுல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார் என சிஆர்எப் கூறியுள்ளது.'' Yellow Book'' நெறிமுறைகளின்படி, இசட் பிளஸ் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாதுகாப்பில் இருப்பவர்கள், வெளிநாடு பயணம் மற்றும் வெளியூர் செல்வது குறித்த தகவல்களை முன்கூட்டியே பாதுகாப்பு படையினருக்கு அளிக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்ய முடியும். ஆனால், இந்த விதிமுறைகளை ராகுல் பின்பற்றவில்லை என சிஆர்பிஎப் தெரிவித்துள்ளது.இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகளில் தொய்வு ஏற்படுவதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள சிஆர்பிஎப், இது குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளது. எதிர்காலத்தில் இதனை தவிர்க்கும்படி தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதாக ராகுல் மீது குற்றச்சாட்டு வருவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் இது போல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 12, 2025 11:01

சென்ற பாராளுமன்ற தேர்தல் போது கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் இவரது உடன்பிறவா அண்ணன் ஸ்டாலின் இருக்கையில் சாலை டிவடைர் எட்டி குதித்து பேக்கரி ஒன்றுக்கு சென்று போட்டோ ஷூட் செய்தவர் ராகுல் கான்.


Mahendran Puru
செப் 12, 2025 06:55

ராகுல் காந்தியின் பாதுகாப்பை விலக்கிக் கொள்ள மத்திய அரசின் யுக்தியா இது? கண்டிக்கத்தக்கது.


ManiMurugan Murugan
செப் 12, 2025 00:02

ராகுல் எதற்காக வெளி நாடுகள் செல்கிறார் என்பது அவரது சொந்த விஷயம் ஆனால் ஒரு நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் அவர் சிறிது கவனம் செலுத்த வேண்டும் ‌அதுவும் அவர் பாதுகாப்பு வளையத்தில் உள்ள போது அவரது பாதுகாப்புக்கு அரசு பதில் சொல்ல வேண்டிய நிலை உருவாக்கியது அவரது பாதுகாப்பு செலவுகளை அரசு கவனிக்க வேண்டும் நாட்டின் நன்மை கருதி ராகுல் கவனம் கொள்வது நன்று இந்தியராக இருங்கள்


Ragupathy
செப் 11, 2025 21:52

அரசுப் பதவிகளில் உள்ளவர்களத் தவிர மற்றவர்களின் பாதுகாப்புச் செலவுகளை அவர்களே ஏற்க வேண்டும் என சொல்லிவிட வேண்டும்....


S.VENKATESAN
செப் 11, 2025 19:35

அவர் போவதே ஜாலிக்குதான் அப்புறம் அதெல்லாம் தெரிஞ்சிடுமே


sengalipuram
செப் 11, 2025 18:55

if he is visiting foreign countries for his personal pleasure why should government spend money for his protection ...


பேசும் தமிழன்
செப் 11, 2025 18:36

பாதுகாப்பு விதிமுறைகளை மீறுகிறார் என்றால்.... ஏதாவது நாடகம் போட திட்டம் போட்டு இருப்பார்கள் போல் தெரிகிறது.... அப்படியாவது மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று விடலாம் என்று கனவு காண்கிறார்கள்.


GMM
செப் 11, 2025 18:36

தனிமை விரும்பும் தாய்லாந்து சுதந்திர பறவை. மத்திய பாதுகாப்பை விரும்ப மாட்டார். ரகசியம் காக்கும் தமிழக மாநில, காங்கிரஸ் மாநில போலீசாரை விருப்பம் போல் தேர்வு செய்ய அனுமதி அல்லது பணமாக கொடுத்து தானே எதற்கும் வளைந்து கொடுக்கும் உலகில் சிறந்த பாதுகாப்பு படை வீரர்கள் தேர்வு செய்ய அனுமதி. இல்லையென்றால், இதில் ராகுல் அரசியல் செய்வார்.


M Ramachandran
செப் 11, 2025 18:18

அவர் கிட்டே Z +செக்யூரிட்டி தேவை இல்லை என்று எழுதி வாங்கிக்கொள்ள வேண்டியது தானே. எல்லோரையும் குறை சொல்லியே காலத்தை ஓட்டுபவர். திருட்டு தனம் அத்தனையும் குத்தகை எடுத்து கொண்டவர்.எதுக்கும் அவர் எதற்கும் அடங்க மாட்டார்.


rama adhavan
செப் 11, 2025 22:08

அவரே எழுதி கொடுத்து விடலாமே? ஏன் தரவில்லை? இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது.


Subburamu K
செப் 11, 2025 18:02

Raul never follow the rule of the land. No need to provide security at tax payers money. Let him have his own security arrangements He is not a responsible citizen


புதிய வீடியோ