உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிரா மக்களை அவமதிக்கும் ராகுல்; முதல்வர் பட்னவிஸ் குற்றச்சாட்டு

மஹாராஷ்டிரா மக்களை அவமதிக்கும் ராகுல்; முதல்வர் பட்னவிஸ் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிரா தேர்தல் முடிவுகளை ராகுல் குற்றம்சாட்டுவது, மக்கள் தீர்ப்பை அவமதிப்பது போன்றது என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் விமர்சித்துள்ளார்.கடந்த ஆண்டு நடைபெற்ற மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் தேர்தலின் போது முறைகேடுகள் நடந்ததாக பா.ஜ., மீதும் தேர்தல் ஆணையம் மீதும் ராகுல் குற்றம்சாட்டி வருகிறார். அவரின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் முற்றிலும் மறுத்துவிட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b55zvio2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந் நிலையில், ராகுலின் குற்றச்சாட்டு, மக்கள் தீர்ப்பை அவமதிப்பது போன்றது என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் விமர்சித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; அவரின் பேச்சு காங்கிரசை மேலும் படுகுழியில் தள்ளும். ஜனநாயகம், தேர்தல் ஆணையம் குறித்து தொடர்ந்து சந்தேகங்கள் எழுப்புவதன் மூலம் அவர்(ராகுல்) நாட்டை எந்த திசையில் கொண்டு செல்கிறார்? எந்த விஷத்தை பரப்புகிறார் என்பது கவனமாக பார்க்க வேண்டும்.மஹாராஷ்டிராவின் விவசாயிகள், சகோதரிகள், அனைத்து தரப்பு பொதுமக்களை நீங்கள் தொடர்ந்து அவமதித்தால் மக்கள் உங்களை ஒரு போதும் மன்னிக்கவே மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Nagarajan S
ஜூன் 08, 2025 20:33

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியில் இருப்பதும் தொடர்ந்து தேர்தல் நடைமுறைகளையும், எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்களையும், தேர்தல் கமிஷன் நடைமுறைகளையும் தொடர்ந்து விமரிசித்து கொண்டே இருந்தால் அது ஒருபோதும் காங்கிரசுக்கு வெற்றியை தேடித்தராது. பிஜேபி தான் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கும். அதனால் அவர் பணி தொடரவேண்டும். பிஜேபி வெற்றி பெற்று கொண்டே இருக்க வேண்டும்.


Subburamu Krishnasamy
ஜூன் 08, 2025 18:58

The worst opposition leader in independent india. He is not any application of mind. Quality of politics is completely lacking in Ragul's behavior


ManiK
ஜூன் 08, 2025 18:03

தாக்கத்தில் ராகுலுக்கு ரொம்ப திகில் கனவாக வருகிறது போல. ஒரே புலம்பல் சத்தம்!!


SIVA
ஜூன் 08, 2025 17:41

ராஜிவ் இருக்கும் வரை தான் பிஜேபி வெற்றி தொடரும் , அதனால் ராஜிவ் குறை சொல்லாதீர்கள் ....


Makkalal Khouri
ஜூன் 08, 2025 16:22

உண்மை எங்களுக்கும் தெரியும் பட்னாவிஸ்


ஆரூர் ரங்
ஜூன் 08, 2025 15:56

காங்கிரஸ் அந்தத் தேர்தலில் சுமார் 30000 க்கும் மேற்பட்ட பூத் ஏஜென்டுகள் மூலம் வாக்குப் பதிவை கூர்ந்து கண்காணித்தபோது எந்த ஏஜெண்ட்டும் பூத்தில் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. எல்லா மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நிறைவடையும் கடைசி நேரத்தில் நிறைய வாக்குப்பதிவு நடப்பதுண்டு. பெரும்பாலான நடுநிலை வாக்காளர்கள் கடைசி நேரத்தில் வாக்குபதிவு செய்வதுண்டு.தோல்வியை ஏற்காமல் உண்மைக்கு மாறான நிலைப்பாட்டை எடுப்பவர் காந்தி என்ற போலி ஒட்டுப் பெயர் வைத்திருப்பது பொருத்தமே.