உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டுகளை மாற்ற முடியவே முடியாது: ராகுலுக்கு தேர்தல் கமிஷன் திட்டவட்டம்

ஓட்டுகளை மாற்ற முடியவே முடியாது: ராகுலுக்கு தேர்தல் கமிஷன் திட்டவட்டம்

வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை தனி நபர்கள் நீக்குவதாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்., - எம்.பி.,யுமான ராகுல் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு, தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் போட்ட ஓட்டுகளை யாராலும் மாற்றி அமைக்க முடியாது என்று கூறியுள்ள தேர்தல் கமிஷன், ராகுல் எழுப்பிய புகார் அடிப்படை ஆதாரமற்றது என்று விமர்சித்துள்ளது. ஆளும் பா.ஜ.,வுடன் இணைந்து தேர்தல் கமிஷன் ஓட்டு திருட்டில் ஈடுபட்டு வருவதாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்., - எம்.பி.,யுமான ராகுல் கடந்த மாதம் குற்றஞ்சாட்டினார். பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில், பல வாக்காளர்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய ராகுல், இதை கண்டித்து அம்மாநிலத்தில் வாக்காளர் அதிகார யாத்திரை என்ற சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை தனி நபர்கள் நீக்குவதாக அவர் மீண்டும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்த அவர் நேற்று கூறியதாவது: கர்நாடகாவில் 2023 சட்டசபை தேர்தலின்போது, ஆலந்த் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து, 6,018 பெயர்களை அழிக்க யாரோ சிலர் முயன்றுள்ளனர். பூத் அளவிலான அதிகாரி ஒருவர், தன் உறவினரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பரிசோதித்து இருக்கிறார்.அப்போது தான், பக்கத்து வீட்டில் இருப்பவர் மொபைல் போனில் இருந்து இந்தப் பெயர்கள் நீக்கப்பட்டதை அவர் கண்டுபிடித்தார். உடனடியாக இது பற்றி பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டபோது, அவர் ஏதும் அறியாமல் முழித்திருக்கிறார். இந்த சம்பவம் எப்படி நடந்தது என யாருக்குமே தெரியவில்லை. பக்கத்துக்கு வீட்டுக்காரருக்கு தெரியாமலேயே அவருடைய மொபைல்போன் மூலம் இந்த மோசடி நடந்துள்ளது. ஏதோ ஒரு சக்தி தான், தேர்தல் நடைமுறைகளை ஆன்லைன் மூலம் 'ஹேக்' செய்து வாக்காளர்களின் பெயர்களை நீக்கி இருக்கிறது. இதற்காக ஒரு சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் காங்கிரஸ் வலுவாக இருக்கும் தொகுதிகளில், வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுகின்றன. எனவே, இந்த விவகாரத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் ஜனநாயகத்தை அழிக்கும் ஓட்டு திருடர்களை காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:காங்கிரசின் ராகுல் எழுப்பிய குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை; உண்மைக்கு புறம்பானவை. எந்தவொரு தனி நபராலும், ஆன்லைன் வழியாக, எந்தவொரு ஓட்டையும் அழிக்க முடியாது. அதே போல், வாக்காளருக்கு தெரியாமலேயே, அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்தும் நீக்க முடியாது. நீக்குவதற்கு முன்பாக, வாக்காளருக்கு போதிய சந்தர்ப்பங்கள் வழங்கப்படும். ஆன்லைன் வழியாக எந்தவொரு ஓட்டையும் அழிக்க முடியாது. தேர்தல் நடைமுறைகள் குறித்து ராகுல் தவறாக புரிந்து கொண்டுள்ளார். ஆலந்த் தொகுதியில் வாக்காளர்களின் பெயர்களை நீக்க முயற்சிகள் நடந்ததாக முதலில் கண்டுபிடித்து கூறியதே தேர்தல் கமிஷன் தான். அதன் அடிப்படையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த, 2018ல் நடந்த தேர்தலில் ஆலந்த் தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் சுபத் குட்டேதர் வெற்றி பெற்றார். ஆனால், ராகுல் கூறியது போல 2023ல், பா.ஜ.,வுக்கு சாதகமாக அங்கு தேர்தல் முடிவு வரவில்லை. அந்த தேர்தலில், காங்., வேட்பாளர் பி.ஆர்.பாட்டீல் தான் வெற்றி பெற்றார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராகுல் மீது பா.ஜ., குற்றச்சாட்டு

பா.ஜ., - எம்.பி., அனுராக் தாக்கூர் நேற்று கூறியதாவது: ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் நோக்கில், ஓட்டு திருட்டு என்ற குற்றச்சாட்டை ராகுல் அள்ளி வீசி வருகிறார். தேர்தல் கமிஷன் மீதே குற்றம் சுமத்துவதால், நேபாளம், வங்கதேசத்தில் நடந்தது போல, நம் நாட்டிலும் அமைதியற்ற சூழல் நிலவ வேண்டும் என எதிர்பார்க்கிறார். தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை கட்சி சார்புடையவர் என்றும் விமர்சிக்கிறார். தேர்தல் கமிஷனின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.கில், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தார். மற்றொரு முன்னாள் தலைவர் டி.என்.சேஷன், லோக்சபா தேர்தலில் காங்., வேட்பாளராகவே களம் கண்டார். இதையெல்லாம் ராகுல் நினைவில் வைத்து பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.நமது சிறப்பு நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

Nachiar
செப் 29, 2025 17:04

ஐயகோ அந்த கதவும் மூடியாச்சு. ஜய் பரத்


ஜெய்ஹிந்த்புரம்
செப் 25, 2025 07:02

செப்டம்பர் 22, 2025 வரை யார் வேண்டுமானாலும் எவர் பேரை வேண்டுமானாலும் நீக்கலாம், போன் எண்ணை மாற்றலாம், போலி login உண்டாக்கலாம், ஆயிரக்கணக்கில் எந்த மாநிலத்து வாக்குசாவடியில் உள்ளவர்களின் தரவுகளை மாற்றி, நீக்கலாம். எந்த OTP யும் இல்லாமல். வாக்கு திருட்டு கூட்டம் கையும்களவுமாக பிடிபட்டு ராகுல்காந்தி சவுக்கால் அடித்து கேட்ட போது, அப்படி ஒன்றும் இல்லை என்று கூசாமல் பொய் சொன்ன கூட்டம் இன்று eSign கட்டாயம் என்று வோட்டு திருட்டு கும்பலுக்கு திறந்து வத்திருந்த பின் கதவை மூடி விட்டதாக பிலிம் காட்டுகிறார்கள். இந்த பத்தாண்டில் எத்தனை கோடி வாக்குகளை திருடினார்கள் தேர்தல் ஆணையமும், அவர்களை ஒன்று சொன்னால் பாய்ந்து வரும் பாஜாகாவும்?


ஜெய்ஹிந்த்புரம்
செப் 25, 2025 07:00

வாக்காளர் தரவுகளை ஆன்லைனில் மாற்ற முடியாதுன்னு நேற்று வரை பொய் சொன்னதும் தேர்தல் ஆணையர் தான். செப்டம்பர் 22, 2025 வரை யார் வேண்டுமானாலும் எவர் பேரை வேண்டுமானாலும் நீக்கலாம், போன் எண்ணை மாற்றலாம், போலி login உண்டாக்கலாம், ஆயிரக்கணக்கில் எந்த மாநிலத்து வாக்குசாவடியில் உள்ளவர்களின் தரவுகளை மாற்றி, நீக்கலாம். எந்த OTP யும் இல்லாமல். வாக்கு திருட்டு கூட்டம் கையும்களவுமாக பிடிபட்டு ராகுல்காந்தி சவுக்கால் அடித்து கேட்ட போது, அப்படி ஒன்றும் இல்லை என்று கூசாமல் பொய் சொன்ன கூட்டம் இன்று eSign கட்டாயம் என்று வோட்டு திருட்டு கும்பலுக்கு திறந்து வத்திருந்த பின் கதவை மூடி விட்டதாக பிலிம் காட்டுகிறார்கள். இந்த பத்தாண்டில் எத்தனை கோடி வாக்குகளை திருடினார்கள் தேர்தல் ஆணையமும், அவர்களை ஒன்று சொன்னால் பாய்ந்து வரும் பாஜாகாவும்?


மனிதன்
செப் 19, 2025 21:13

தேர்தல் ஆணையர் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லாமல், ராகுல் ஆதாரத்துடன்போல, ராகுல் சொன்னது தவறு என்று நீங்களும் ஆதாரத்துடன் சொல்லவேண்டும்.... முடியுமா??? மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டார்கள்...


Rathna
செப் 19, 2025 20:45

தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்றால் தொண்டர்கள் அதிகமா இருக்க , தலைவர்கள் குறைவாக இருக்க வேண்டும். அங்கே நிலைமையே வேற. கட்சியில் பல பேர் 60 வயதுக்கு மேல். பூத் கமிட்டிக்கு ஆள் கிடையாது. இப்படி இருக்க எப்படி தேர்தலில் ஜெயிக்க முடியும் குறுக்கு வழியில் பிரதமராக வர வேண்டும் என்று உள்நாட்டு கலவரத்தை தூண்டுபவர்களை மக்கள் தான் வோட்டு மூலமாக இன்னும் தண்டிக்க வேண்டும்.


Venugopal S
செப் 19, 2025 19:20

எந்தவொரு எலக்ட்ரானிக் மெஷினையும் ஹேக் செய்ய முடியும் என்பது தான் எலான் மஸ்க் தொடங்கி எல்லா வல்லுனர்களின் கருத்தும் கூட.


krishna
செப் 19, 2025 17:13

PAPPU SOLLUVADHAI NAMBUBAVAN AGILA ULAGA MUTTAL MO 1 AAGA IRUKKA VENDUM SARIYA GUNESAN.


krishna
செப் 19, 2025 17:12

ORU 200 ROOVAA COOLIE KEVALAM GUNESAN VERU PEYARIL ULARA AARAMBITHU ULLADHU PARIDHAABAM.


Ganesan
செப் 19, 2025 16:36

அமைதியாக. முன்னேறி வந்த இந்தியா , இன்று கடன் சுமை மிக மிக அதிகம்.அமைதி குலைந்து விட்டது . நிர்வாக நடைமுறைகள் தலமைகள் நேர்மை, திறமை இல்லை .


krishna
செப் 19, 2025 17:10

GUNESAN ARAI PAITHIYAMA NEE.ILLAI 200 ROOVAA COOLIKKU KOTHADIMAYA ILARAADHE.KECALAM.


Prasath
செப் 19, 2025 18:06

அப்படின்னு உங்க முக்கா பீசு தலைவர் ராகுல் உங்களை பதிவு போட சொன்னாரு போல


Ganesan
செப் 19, 2025 16:36

வேற்று நாட்டு சதி இருந்தால் சும்மா விடக்கூடாது கண்டு பிடுத்து உரிய தண்டனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்


முக்கிய வீடியோ