உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கரப்பான்களின் போராட்டத்தில் விளம்பரம் தேடும் ராகுல்

கரப்பான்களின் போராட்டத்தில் விளம்பரம் தேடும் ராகுல்

-நமது நிருபர்-டில்லியில் போராட்டம் நடத்தும் கரப்பான் கட்சியினருக்கு ஆதரவு தெரிவித்தால், தனக்கும் விளம்பரம் கிடைக்கும் என்று கருதி, 'போராடுங்கள், உறுதுணையாக இருப்போம்' என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது பதிவு; மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை 10 ஆண்டுக்கு மேலாக எதிர்த்து வருகிறேன். எங்களின் எதிரி யார் என்று தெரியும். இவர்களின் குணமே கோழைத்தனம் தான். மோடி, அமித் ஷா, மோகன் பாகவத், ஞானேஷ்குமார், அஜித் தோவல் இந்தக் கதையின் வில்லன்கள். 50 ஆயிரம் போலீசாரை குவித்தாலும் சரி, அனைத்து தலைவர்களையும், இளைஞர்களையும் கைது செய்தாலும் சரி, இதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை. அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கும், மக்களின் குரலை பேணி காக்கவும் உறுதியாக நிற்கிறோம். 10, 15 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த எதையும் மீண்டும் நிகழாமல் தடுத்து நிறுத்துவோம். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை பார்த்து பெருமையடைகிறேன். தொடர்ந்து போராடுங்கள், உறுதுணையாக இருப்போம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எஸ்ஐஆருக்கு எதிராக 12ம் தேதி இண்டி கூட்டணியினர் டில்லியில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். அன்றைய தினம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்தை சந்தித்து மனு அளிக்கவும் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

HoneyBee
அக் 10, 2026 21:34

எப்பவும் சீரியஸா இருந்தா எப்படி அதான் ஜோக்கர் பபூன் பப்பு காமெடி பண்ணறார். சிரிங்க சிரிங்க


Ramesh Sargam
அக் 10, 2026 21:04

கரப்பான் பூச்சி என்ன, டைனோசார்களை கூட்டிவந்து ராகுல் போராட்டம் நடத்தினாலும் மத்திய அரசை அசைக்கமுடியாது.


Prem Kumar
அக் 10, 2026 20:28

இந்திய அரசியலுக்கு புதிதாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கரப்பான் பூச்சிகள், சில அரசியல் கட்சிகளின் மறைமுக ஆதரவுடன், அரசுக்கு எதிரான தங்களை அரசியலில் பிரபலமாக்கி கொள்ள தேவையே இல்லாமல் அப்பாவி கல்லூரி மாணவர் சமூகத்தை தேர்ந்தெடுத்து இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. அவர்களை கல்லூரி படிப்பு முடியும் வரை படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறை கூற வேண்டிய மிக பெரிய பொறுப்பு பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இருக்கிறது. அதிலும் குறிப்பாக மாணவ/ மாணவிகளின் நலனிலும் எதிர்காலத்திலும் கல்வி நிறுவனங்களுக்கு அதிக பொறுப்பு உள்ளது. இதையும் மீறி போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் இந்த மாணவர்கள் எவ்வாறு கலந்து கொள்கிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது. இந்த நிலையில் எப்படி பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களிடமிருந்தும் அனுமதி கிடைக்கின்றன என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அரசியல் கட்சிகளின் தூண்டுதலால் ஏற்பாடு செய்யப்படும் இதுபோன்ற போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் தானாகவே விரும்பியோ அல்லது எவராவது வற்புறுத்தலுக்காகவோ பங்கேற்றது நிரூபணமானால் அந்த மாணவ/மாணவிகளுக்கு உடனடியாக கல்லூரியிலிருந்து வெளியேற்றும் வகையில் மாணவர் சேர்க்கையில் விதிகளை திருத்த வேண்டும் கல்லூரியிலிருந்து மாணவர்களை நீக்கும் சான்றிதழில் நீக்கப்பட்டதற்கான முழு காரணத்தையும் தெளிவாக குறிப்பிடுவதன் மூலமாக எதிர்காலத்தில் எந்த கல்லூரியிலும் தனது படிப்பை தொடர் முடியாத நிலை ஏற்பட வேண்டும். இத்தகைய கடுமையான எச்சரிக்கைகள் தான் ஒழுங்கீனத்தை மாணவ சமுதாயத்தினரிடமிருந்து அகற்ற மிக அவசியம். மேலும் எல்லா கல்லூரிகளிலும் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களை மாணவர்/மாணவிகளிடம் இருந்து ஏற்கும்போது, கண்டிப்பாக எந்தவொரு போராட்டத்திலோ அல்லது ஆர்ப்பாட்டத்திலோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கலந்து கொண்டாலோ அல்லது ஆதரித்தாலோ, உடனடியாக கல்லூரியிலிருந்து நீக்க கல்லூரி நிர்வாகத்திறகு முழு அதிகாரம் தருகிறோம் என ​​மாணவர்/மாணவி மற்றும் பெற்றோர் இருவராலும் கையொப்பமிடப்பட்ட ஒரு உறுதிமொழியை கல்லூரி நிர்வாகம் தவறாமல் பெற வேண்டும். இதை மீறி நடந்தது நிரூபனமானால் அந்த மாணவர்/மாணவி கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டு, எதிர்மறை யான TC சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். அத்தகைய சான்றிதழ் பெற்ற எவருமே நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் சேர தகுதி இழந்தவராகி விடுவார்


என்றும் இந்தியன்
அக் 10, 2026 20:11

ராகுல், சோனியா, பிரியங்கா மீது குற்றம் இல்லவே இல்லை. எதற்கு இவர்கள் மீது குற்றம் சொல்கின்றார்கள் என்று தெரியவில்லை. கன்று / பசு புல் தின்னும் தவறா அது??? அதைப்போலத்தான் இந்த மூவரும். இந்தியர்கள் அல்லாதவர்கள் இவர்கள், இவர்கள் இந்தியாவுக்கு எதிராகத்தான் பேசுவார்கள்.


duruvasar
அக் 10, 2026 20:04

காந்தி பெயர் திருடனுக்கு இந்த ஜென்மத்தில் பிரதமர் ஆகமுடியாது என்பது தெரிகிறது. ஆகவே வரும் நாட்களில் சவுண்டு இன்னும் அதிகமாகலாம் . கரடியா கத்தினாலும் ஆவ முடியாது சோனியா மவனே .


Maheswaran Kannan
அக் 10, 2026 19:18

கரப்பான் பூச்சி ராகுல் அண்ட் ஹிஸ் பிரின்ட் விஜய்


GIRIRAJ
அக் 10, 2026 19:11

மோடியை எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டும் அதற்கு வெளிநாட்டு தீய சக்திகள் கரப்பான் பூச்சி போன்ற தேசவிரோத சக்திகளை தூண்டிவிட்டு ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். எப்பொழுதும் தேசவிரோதிகளுக்கு துணை போகும் காந்தி குடும்பம் எப்படியாவது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி நம் தேசத்தை பலவீனம் அடையச் செய்ய வேண்டும் என்பதுதான் இவர்களின் தீய எண்ணம். மோடிக்கு உலக அளவில் நற்பெயர் கிடைத்திருப்பது இவர்களுக்கு வயிற்று எரிச்சல். கெடுவான் கேடு நினைப்பான் .இவர்கள் அழிந்து போவார்கள்.


Kavi Priyan Adelaide
அக் 10, 2026 18:07

வேற என்னதாங்க என்னைய பன்ன சொல்றீங்க..? போஸ்ட்டர் ஒட்ட கூட ஆள் இல்லை.. கேட்டா .. கட்சியில இருக்கிற எல்லோரும் தலைவருன்னு சொல்லுவாங்க..! அதனால காங்கிரஸுக்கு அடுத்தவங்க மேல குதிரை ஏறிதான் பழக்கம்னு யாராவது சொன்னாலும் எங்களுக்கு கவலையில்லை..


thala
அக் 10, 2026 17:59

supporting BJP


ராஜா
அக் 10, 2026 17:57

ராகுல் தரம் அந்த அளவில் தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை