உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மின்துறை அதிகாரி வீட்டில் ரெய்டு: தெலுங்கானாவில் ரூ.2 கோடி ரொக்கம் மீட்பு

மின்துறை அதிகாரி வீட்டில் ரெய்டு: தெலுங்கானாவில் ரூ.2 கோடி ரொக்கம் மீட்பு

ஐதராபாத்: தெலுங்கானாவில் மின்துறை அதிகாரி வீட்டில் நடந்த சோதனையில், ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரூ.2 கோடி ரொக்கப்பணத்தை மீட்டனர்.தெலுங்கானாவில் மணிகொண்டா பிரிவில் மின்சாரத் துறையில் உதவிப் பிரிவு பொறியாளராக பணியாற்றிவருபவர் அம்பேத்கர், இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார். மேலும், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் இருந்தன. குறிப்பாக, பெரிய வணிக நிறுவனங்கள், மால்கள் மற்றும் தியேட்டர்களுக்கு மின்சார இணைப்புகளை வழங்க லஞ்சம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.இந்நிலையில் பொறியாளரின் ஊழல் நடவடிக்கைகள் குறித்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவரது வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில், ஊழல் தடுப்பு அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்த சோதனை அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. ஐதராபாத்தில் உள்ள மாதப்பூர் மற்றும் கச்சிபவுலி உள்ளிட்ட இடங்கள் உள்பட குற்றம்சாட்டப்பட்டுள்ளவரின் உறவினர்களின் வீடுகளிலும் 15 முதல் 18 பேர் கொண்ட அதிகாரிகள், சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவரது வீட்டில் இருந்து ரூ.2 கோடி ரொக்கப்பணமும், கணிசமான அளவு தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பிற சொத்துக்களின் ஆதாரங்களை ஆய்வு செய்யும் விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

c.mohanraj raj
செப் 17, 2025 00:26

இது என்ன பிரமாதம் தமிழ்நாட்டில் தோண்டினால் 200 கோடி கூட இருக்கும்


theruvasagan
செப் 16, 2025 22:19

ஓ...அடங்க மறு அத்து மீறு. ஒவ்வொருத்தர் மேலேயும் 10 கேசு பதிவாகணும் எல்லாம் தெலங்கானா வரை பரவிடுச்சா. சபாஷ்.


தாமரை மலர்கிறது
செப் 16, 2025 21:07

கோட்டாவில் பூத்த பூவை தொட்டால், ரெண்டு கோடிக்கு ஷாக்.


Kulandai kannan
செப் 16, 2025 20:32

அனைத்து அரசு அலுவலகங்களையும் தனியார் மயமாக்கவேண்டும். இந்த விஷயத்தில் பெயரிலேயே தரம் தெரிகிறது.


Vasan
செப் 16, 2025 20:21

பல பேர் பாதிக்க பட்ட போதிலும் தமிழகத்தில் பொன்மொடியை தண்டிக்காமல் கண்டித்து விடுதலை செய்தது போல், இவரையும் விட்டு விடுங்கள்.


Hindu
செப் 16, 2025 20:20

கொள்ளை திருட்டு நாளுக்கு நாள் நாடெங்கும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது


Iyer
செப் 16, 2025 18:59

மின்துறை மந்திரியின் கூட்டு இல்லாமல் இவ்வளவு சேர்த்திருப்பாரா ? மந்திரியையும் பிடித்து லாடம் கட்டணும்


சமீபத்திய செய்தி