மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
2 hour(s) ago | 9
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
7 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
7 hour(s) ago
பெங்களூரு : 'லோக்சபா தேர்தல் நேரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசாதீர்கள். பேசினால் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்' என, மூத்த தலைவர் சிவசங்கரப்பா, கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா ஆகியோரை, காங்கிரஸ் மேலிடம் எச்சரித்துள்ளது.சமீப நாட்களாக, அமைச்சர் ராஜண்ணாவும், மூத்த தலைவர் சிவசங்கரப்பாவும் கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுகின்றனர். காங்., மேலிடம் பலமுறை அறிவுரை கூறியும் பயனில்லை.கார்ப்பரேஷன், வாரியங்களுக்கு தலைவர்கள் நியமனத்தின்போது, தன்னுடன் கலந்து ஆலோசிக்கவில்லை, கருத்துகளை கேட்கவில்லை என, அமைச்சர் ராஜண்ணா கொதிப்படைந்தார். ஊடகத்தினர் முன்னிலையில், 'நாங்கள் காங்கிரஸ் மேலிடத்தின் கொத்தடிமைகளா? இவர்கள் அனுப்பிய நியமன பட்டியலை, நாங்கள் ஏற்க வேண்டுமா?' என அதிருப்தி தெரிவித்தார். பா.ஜ.,வுக்கு ஆதரவு
மற்றொரு பக்கம், காங்கிரஸ் மூத்த தலைவர் சிவசங்கரப்பா, ஷிவமொகாவில் பா.ஜ., - எம்.பி., ராகவேந்திராவை வெற்றி பெற வைக்கும்படி, மக்களிடம் கோரிக்கை விடுத்தார். இரண்டு தலைவர்களின் பேச்சு, மேலிடத்துக்கு சவால் விடும் வகையில் இருந்தது. இது கர்நாடக காங்கிரசில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.இதை காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக கருதுகிறது. மேலிட தலைவர் ராகுலுக்கு நெருக்கமான தலைவர் ஒருவர், தொலைபேசியில் அமைச்சர் ராஜண்ணாவை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்த தலைவர் 'உங்களுக்கு சீட் கொடுக்க, தேர்தலில் வெற்றி பெற வைக்க, அமைச்சராக்க கட்சி மேலிடம் வேண்டும். இப்போது வேண்டாமா? சமீப நாட்களாக உங்களின் பேச்சு, கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. 'அமைச்சரான உங்களால், கட்சிக்கு கிடைத்த நன்மைகள் என்ன? கட்சி மேலிடத்தின் சக்தி என்ன என்பதை, காண்பிக்க வேண்டுமா? இனி நாவை கட்டுப்படுத்தாமல் பேசினால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். உங்கள் மீது நடவடிக்கை எடுக்க மேலிடம் தயங்காது' என, ராஜண்ணாவை எச்சரித்தார். அபார கவுரவம்
அதேபோன்று, சிவசங்கரப்பாவை தொடர்பு கொண்டு பேசிய தலைவர், 'நீங்கள் பா.ஜ.,வின் செய்தி தொடர்பாளரா? அந்த கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைக்கும்படி, நீங்கள் ஏன் அழைப்பு விடுக்கிறீர்கள்? நீங்கள் மூத்தவர். 'உங்கள் மீது அபார கவுரவம் உள்ளது. ஆனால் உங்களின் பேச்சு, கட்சிக்கு எதிராக உள்ளது. இனியும் இப்படியே தொடர்ந்தால், நீங்கள் மூத்தவர் என்பதை மறக்க வேண்டியிருக்கும்' என, எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
2 hour(s) ago | 9
7 hour(s) ago
7 hour(s) ago