வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கடந்த ஆண்டு என்பதை விட பழைய பாடத்திட்டத்தில் கேள்வி கேட்டார்கள் என்பதுதான் சரியான குற்றச்சாட்டு..
மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடும் கூட்டம்
மேலும் செய்திகள்
இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு; ஏற்பாடுகள் தீவிரம்
03-Mar-2025
ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் பிளஸ் 2 பொதுத் தேர்வில், கடந்த ஆண்டு கேட்கப்பட்ட அதே கேள்விகள் இந்த ஆண்டும் வினாத்தாளில் இருந்ததால், தேர்வு ரத்து செய்யப்பட்டது. ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அங்கு, தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடைபெறுகின்றன. கடந்த 22ல், 'பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்' பாடத்துக்கான தேர்வு நடந்தது.அப்போது கடந்த ஆண்டு தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளே, இந்தாண்டும் கேட்கப்பட்டதால் வினாத்தாளை பார்த்த மாணவ - மாணவியருக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. இது தொடர்பாக, தேர்வு நடந்தபோதே மாநிலம் முழுதும் பல்வேறு மையங்களில் இருந்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. எனினும், உடனடியாக எதுவும் செய்ய முடியவில்லை; தேர்வு நடந்து முடிந்தது. இந்நிலையில், அந்த தேர்வை ரத்து செய்வதாக, ராஜஸ்தான் கல்வி வாரியம் நேற்று அறிவித்தது.
வாரியத்தின் செயலர் கைலாஷ் சந்த் சர்மா கூறியதாவது:
கடந்த ஆண்டு கேட்கப்பட்ட வினாக்களே இந்தாண்டும் இருந்ததால், தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இந்த பாடத்துக்கு மறு தேர்வு நடத்தப்படும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். தற்போதைய பாடத்திட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் இல்லாமல், பழைய பாடத்திட்டம் அடிப்படையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டுஉள்ளது. இதற்கு காரணமான ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வினாத்தாளை தயாரிக்கும் பணியில் இருந்த, கல்வித் துறையைச் சேர்ந்த அனைவரும் விசாரிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஆண்டு என்பதை விட பழைய பாடத்திட்டத்தில் கேள்வி கேட்டார்கள் என்பதுதான் சரியான குற்றச்சாட்டு..
மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடும் கூட்டம்
03-Mar-2025