உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடுமா; ராஜஸ்தான் கல்வித்துறை வினோத உத்தரவு

கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடுமா; ராஜஸ்தான் கல்வித்துறை வினோத உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: மாநிலம் முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளின் வாயில்களுக்கு ஆசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் வைட் கோல்டு, ஆரஞ்சு பிரவுன் வண்ணம் பூசுமாறு ராஜஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து ராஜஸ்தான் மாநில கல்லூரி கல்வித்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது; காயகல்ப் என்ற திட்டத்தின் கீழ் மொத்தம் உள்ள 20 கல்லூரிகளில் சோதனை அடிப்படையில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும். மாணவர்கள் கல்லூரியில் சேரும்போது அவர்களின் சிந்தனை நேர்மறையாக இருக்கும் வகையில் கற்கும் சூழல் இருக்க வேண்டும். தமது கல்வியில் அடுத்தக்கட்டம் என்ன என்பதை சிந்திக்கும் வகையில் அமைய வேண்டும்.எனவே, கல்லூரிகள் மாணவர்களுக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் ஆரோக்கியமான கல்விச்சூழல் இருக்க வேண்டும். அதற்காக 20 கல்லூரிகளில் உள்ள வாயில்களில் வெண்மை (வைட் கோல்டு), ஆரஞ்சு பிரவுன் நிறங்களில் பெயிண்ட்டை 7 நாட்களுக்குள் பூச வேண்டும். பெயிண்ட் பூசப்பட்ட பின்னர், அதை புகைப்படம் எடுத்து கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Indhuindian
நவ 11, 2024 05:14

இந்த ட்ரிக்லாம் இங்கே அறுபது வருஷத்துக்கு முன்னாடியே நடந்தது இப்போ அவங்க காப்பி அடிக்கிறாங்க இங்கே ராவோடு ராவா எல்லா அரசு பஸ்சையும் மெரினா பீச்சல நிப்பாட்டி அதுக்கு மஞ்ச கலர் அடிச்சாங்களே அது ஞபாகம் இருக்கா?


ஆரூர் ரங்
நவ 11, 2024 11:17

அப்போ பெயிண்ட் ஏஜன்ட் கருண்தயாள் ஏஜென்சியாம். புரியுதா?


Kasimani Baskaran
நவ 11, 2024 04:59

வண்ணத்தில் என்ன இருக்கிறது என்று நினைக்கத்தோன்றினாலும் தூய்மையை குறிக்கும் வெள்ளை நல்லது.


சாண்டில்யன்
நவ 10, 2024 21:48

இப்போ என்ன வாழுதாம் ஏசியன் பெயிண்ட்ஸ் கம்பெனி அள்ளி கொடுத்துட்டாங்களோ ஏற்கனவே ரயில் பெட்டிகள் கோபிக்கு மாறிச்சு ரயில் பிளாட்பாரம்கூட காவியாச்சு அத எல்லாம் மறைக்க இந்த சொம்பு "அந்த காலத்துல"ன்னு கம்பி கட்டுது போன ஆட்சில லாரி பின்பக்கம் ஓட்ட ரூ பத்தாயிரம் விலை சொன்ன ஒரு கம்பெனி சிவப்பு ரெபிலெக்டர் தான் வாங்கணும்னு சொன்னதெல்லாம் யாருக்கும் தெரியாதா என்ன


Ramesh Sargam
நவ 10, 2024 19:40

இருக்கும் பிரச்சினைகள் போதாது என்று புதுப்புது பிரச்சினைகள்.


ஆரூர் ரங்
நவ 10, 2024 19:34

70 களில் தீய முக அரசில் தனியார் வாடகை லாரிகள் குறிபிட்ட நிறுவனத்தின் மஞ்சள் பெயிண்ட் அடித்துதான் RTO அலுவலகத்தில் FC புதுப்பிக்க வர வேண்டும் என உ‌த்தரவு இருந்ததாம். (அந்தக் கால ஆட்கள் கூ‌றியது)


சாண்டில்யன்
நவ 10, 2024 19:01

ஒரு தவளையை அந்த குட்டை தண்ணீரோடு ஒரு பானையில் முகந்து அடுப்பில் வைத்து காய்ச்சினால் தண்ணீர் என்ன சூடானாலும் அந்த தவளை துள்ளி குதித்து வெளியேறாது வேறொரு தவளையை எடுத்து அந்த சுடுநீர் பானையில் போட்டால் சூடு பட்டவுடனே அந்த வினாடியே துள்ளிக் குதித்து வெளியேறிவிடும். இங்கே சில தவளைகளும் அப்படித்தான் செத்தாலும் 'ஜி'யின் "வருண" ஜாலங்களிலிருந்து வெளியேறாது.


Ram pollachi
நவ 10, 2024 18:59

இரவில் நன்றாக தூங்க வீட்டின் படுக்கை அறையில் நீலம், பச்சை வண்ண விளக்குகளை பயன்படுத்துமாறு மருத்துவர்களே சொல்கிறார்கள் எல்லாம் வினோதம்.


ஆரூர் ரங்
நவ 10, 2024 18:33

ஜெய்ப்பூர் நகர் முழுவதும் எல்லா பழைய கட்டிடங்களிலும் ஒரே பிங்க் நிற வண்ணம் பூசியுள்ளனர் . நகரே பிங்க் சிடி என்றழைக்கப்படுகிறது.


சமீபத்திய செய்தி