உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவிற்கு ஆதரவு: ராஜ்நாத்திடம் அமெரிக்கா உறுதி

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவிற்கு ஆதரவு: ராஜ்நாத்திடம் அமெரிக்கா உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவில் பதற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத்துடன் ஆலோசனை நடத்தினார்.காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டிற்கு எதிராக மத்திய அரசு பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேநேரத்தில் கடந்த ஒரு வாரமாக எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையில் உறவில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. பயங்கரவாத தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசு உறுதி தெரிவித்து உள்ளது.இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் ரூபியோ உடன், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தி இருந்தார். அப்போது பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா துணை நிற்கும் என ரூபியோ கூறியதாக ஜெய்சங்கர் தெரிவித்தார். மேலும், தெற்கு ஆசியாவில் பாதுகாப்பை அதிகரிக்கவும், பதற்றத்தை தணிக்கவும் இந்தியாவும் , பாகிஸ்தானும் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி இருந்தார்.இச்சூழ்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சேத்துடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்த சூழ்நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த ஆலோசனை தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத் ஆலோசனை நடத்தினார். அப்போது, காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்ததற்கு அமெரிக்க அமைச்சர் இரங்கல் தெரிவித்தார். மேலும், இந்த நேரத்தில் இந்தியாவிற்கு அமெரிக்கா துணை நிற்பதாகவும், தன்னை காத்துக் கொள்வதற்கான உரிமை இந்தியாவிற்கு உள்ளது எனவும் அவர் கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு அமெரிக்காவின் உறுதியான ஆதரவை அவர் உறுதி செய்தார்.இந்த ஆலோசனையின் போது, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரிடம், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி, பயிற்சிமற்றும் ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானின் வரலாற்றை ராஜ்நாத் சிங் எடுத்துக்கூறினார். காஷ்மீரில் நடந்த கொடூரமான தாக்குதலுக்கு சர்வதேச சமுதாயம் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனவும் ராஜ்நாத் வலியுறுத்தினார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அப்பாவி
மே 01, 2025 22:00

அடுத்த அப்பாச்சி, குப்பாச்சி , துப்பாக்கி ஆர்டர் எப்போ குடுக்கப் போறீங்க?


ஜும்லாபாய்
மே 02, 2025 06:50

11000 கோடிக்கு ஆர்டர் குடுத்தாச்சு.


MARUTHU PANDIAR
மே 01, 2025 21:50

இரட்டை கோபுர தாக்குதல் நடந்த பிறகும், பின் லேடனை பாகிஸ்தான் பத்திரமாக ஒளித்து வெச்சு இங்க யாரும் இல்லன்னு சாதிச்ச பிறகும் அமெரிக்காவின் பாகிஸ்தான் பாசம் அறவே நீங்க வில்லை. காரணம் இந்தயாவின் வளர்ச்சியை கெடுக்கணும். 1965 இல் இந்தியாவை அழிக்க பாகிஸ்தானுக்கு 100 % தளவாடங்கள் கொடுத்தது. அவர்களோட வார்த்தையை நம்ப முடியாது. 1971 பாக் போரின் இந்தியாவை தாக்க பாகிஸ்தானுக்கு நீர்மூழ்கி கப்பலை அனுப்பியது. இன்றயை எண்ணற்ற ஜிகாத் அமைப்புகள் பாகிஸ்தான் வளர்த்து விட்டதற்கு , பாகிஸ்தானை வளர்த்து விட்ட அமெரிக்காவே காரணம்.


ManiK
மே 01, 2025 20:30

பெரும்பாலான சர்வதேச மீடியாக்கள் இந்த கொடூர கொலைத் தாக்குதல் ஹிந்துக்களின் மீதான தாக்குதல் என்பதை மறைத்துதான் செய்தி வெளியிட்டனர். இந்தியாவின் நேரடி குரல் மிகமிக அவசியம்.


Gokul Krishnan
மே 01, 2025 20:05

இங்கு ஆதரவு அடுத்த விமானத்தில் பாகிஸ்தான் சென்று அங்கும் ஆதரவு இது தான் அமெரிக்காவின் முகம்... நம்ப தகுந்த நாடு கிடையாது.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 01, 2025 19:17

அமெரிக்கா குழப்பத்தில் இருக்கு ........ பேசித் தீருங்க ன்னு சொல்லுது .... ஆதரவு ன்னும் சொல்லுது .... டபுள் ஆக்டிங் .....


Srinivasan Krishnamoorthy
மே 01, 2025 20:41

trump is very clear to finish pakistan. there is no hai from Pakistan, so it is confusion d by Chinese


MARUTHU PANDIAR
மே 01, 2025 21:53

மோசமான வில்லன். இந்தியாவின் மறை முக எதிரி.


Nathan
மே 01, 2025 18:53

ரோல்ஸ் ராய்ஸ் உடன் இணைந்து விமான இன்ஜின் தாயாரிக்க ஒப்பந்தம் செய்ய வேண்டாம் மத்திய அரசு அந்த விசயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும் தயவுசெய்து ப்ரான்ஸ் உடன் இணைந்து இருவர்க்கும் பலன் அடையும் வகையில் புதிய விமான இன்ஜின் தாயாரிக்க ஒப்பந்தம் செய்ய வேண்டும். இங்கிலாந்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம்


MARUTHU PANDIAR
மே 01, 2025 21:52

பொறுப்புள்ள பத்திரிகை தினமலர் இந்த ஆலோசனையை மத்திய அரசுக்கு எப்படி அனுப்ப முடியுமோ அ ப்படி அனுப்பனும்.


Nathan
மே 01, 2025 18:45

இங்கிலாந்தின் போர் விமானம் பாக்கிஸ்தானில் வந்து இறங்கியுள்ளது துருக்கிய போர் விமானங்கள் நேற்றே பாக்கிஸ்தான் வந்து விட்டன. வெளுத்ததெல்லாம் பால் என்று உதவி செய்தால் அவர்கள் தங்களது கேடுகெட்ட புத்தியை காட்டுகின்றனர்.


அப்பாவி
மே 01, 2025 18:38

போருக்கான நேரம் வந்துரிச்சு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை