வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஐபிஎல் இல் கோடி கோடியாக கொட்டியது பணம்.. ஆனால் இவர்களுக்கு 25 லட்சம் தானா? ஐபிஎல் விளையாட்டுக்களைப் பார்ப்பதை நாம் நிறுத்த வேண்டும். மக்கள் தத்தம் குடும்பங்களை முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
பெங்களூரு: ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் ஆர்.சி.பி., எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக கோப்பை வென்றது. இதை கொண்டாட, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, ௧௧ பேர் உயிரிழந்தனர். கூட்டத்தை நிர்வகிப்பதில் ஏற்பட்ட குறை பாடே உயிரிழப்புக்கு காரணம் என, கர்நாடக அரசு ஆர்.சி.பி.,யை இச்சம்பவத்திற்கு பொறுப் பாக்கியது. கடந்த ஜூனில் நடந்த இச்சம்பவத்திற்கு ஆர்.சி.பி., அணி இரங்கல் செய்தியை மட்டும் வெளியிட்டு, பலியானோரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. மேலும், ஆர்.சி.பி., கேர்ஸ் அறக்கட்டளையை உருவாக்கி அதன் வாயிலாக காயமடைந்தவர்களுக்கு உதவுவதாக உறுதியளித்திருந்தது-. இது பெரும்பாலானோரின் விமர்சனத்துக்கு உள்ளானது. இது நடந்து மூன்று மாதங்களை நெருங்கியுள்ள நிலையில், தற்போது ஆர்.சி.பி., அணி சார்பில், 'கேர்ஸ்' எனும் பெயரில் அறக்கட்டளையை துவக்கி பலியான 11 பேரின் குடும்பத்தினருக்கு, தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்க முன் வந்துள்ளது. 'இந்த உதவி வெறும் நிதியுதவி மட்டுமல்ல, இரக்கம், ஒற்றுமை மற்றும் தொடர்ச்சியான அக்கறையின் வாக்குறுதியாகும்' என, ஆர்.சி.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் இல் கோடி கோடியாக கொட்டியது பணம்.. ஆனால் இவர்களுக்கு 25 லட்சம் தானா? ஐபிஎல் விளையாட்டுக்களைப் பார்ப்பதை நாம் நிறுத்த வேண்டும். மக்கள் தத்தம் குடும்பங்களை முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும்.